விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

நினைவுச் சுடர் !

சுவாமி சித்பவானந்தர் தாம் நிறுவிய பள்ளிக்கூடங்களில் விடுதி மாணவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அப்போது அவர்களுக்கு இனிப்பு வழங்குவார். அப்போது மாணவர்களிடம் நிறை-குறை கேட்டறிந்து அறிவுரையும் வழங்க

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 2:55 pm

DIN


சுவாமி சித்பவானந்தர் தாம் நிறுவிய பள்ளிக்கூடங்களில் விடுதி மாணவர்களை அடிக்கடி சந்தித்துப் பேசுவார். அப்போது அவர்களுக்கு இனிப்பு வழங்குவார். அப்போது மாணவர்களிடம் நிறை-குறை கேட்டறிந்து அறிவுரையும் வழங்குவார்.

ஒரு முறை, இனிப்பு வாங்க வரிசையில் வந்த மாணவன் ஒருவன் சிறிது வருத்தமுடன் காணப்பட்டான். அவன் கையில் இனிப்பு ஒன்றைக் கொடுத்து, ""ஏன் வருத்தத்துடன் இருக்கிறாய்? என்ன குறை உனக்கு?'' என்று சுவாமிகள் கேட்டார்.

அந்த மாணவன் அங்கும் இங்கும் சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு, என்னை "குண்டன் குண்டன்' என்று கேலி பேசுகிறார்கள்'' என்றான்.

சுவாமிகள் அவனது மனக்குறையை மாற்றும் நோக்கத்துடன் அவனை  அருகில் அழைத்து, உற்றுப் பார்த்துவிட்டு,  ""நீ அப்படித்தானே இருக்கிறாய்?'' என்றாராம் சிரித்தபடியே...

அந்த மாணவனும் அதைக் கேட்டு சிரித்தபடி ஓடிப் போய்விட்டானாம்.

-மு.பழனி

Story image

திருச்சி ஜட்கா வண்டிக்காரர்கள் சங்கக் கூட்டம். அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசிய கலைவாணர், ""இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிப் பேசுவதில் நான் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், உங்களுக்கு உயர்ந்த உள்ளம். உங்கள் வண்டியில் யார் ஏறினாலும் சரி, நீங்கள்சொல்லக்கூடிய முதல் வார்த்தை "முன்னுக்கு வாங்கோ... முன்னுக்கு வாங்கோ...' என்பதுதான். இன்று, இப்படி யார் சொல்கிறார்கள்?'' என்று கூறிச் சிரித்தார். மறுகணம் கைத்தடல் அந்த அரங்கை அதிர வைத்தது.

-இரா. ரெங்கசாமி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.