தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

விடுகதைகள்

பாயைச் சுருட்டவும் முடியாது, அதில் சிதறிக் கிடக்கும் மணிகளை எண்ணவும் முடியாது

News image
Updated On :5 ஜூன் 2022, 7:57 pm IST

1. பாயைச் சுருட்டவும் முடியாது, அதில் சிதறிக் கிடக்கும் மணிகளை எண்ணவும் 
முடியாது....
2. காட்டில் உள்ள குடை வீட்டில் இல்லாத குடை...
3. கிண்ணம் நிறையத் தண்ணீர் இருக்கு, குருவி குடிக்க வழியில்லை...
4. ரத்தத்தில் வளர்வது, ஆனால் ரத்தம் இல்லாதது.
5. பற்கள் பல உண்டு, ஆனால் கடிக்கத் தெரியாது...
6. தண்ணீரில் நீந்தி வரும், தரையில் தாண்டி வரும்....
7. ஆடையோ கருப்பு, சுழன்று சுழன்று ஆடுவதோ நாட்டியம், ஆனால் வருவதோ பாட்டு....
8.  வெட்டிக் கூறுபடுத்தி வைக்கிறார்களே தவிர எவரும் தின்பதில்லை...
9. மூன்று நிறக் கிளிகளாம், கூண்டுக்குள் போனால் ஒரே நிறமாம்...

விடைகள்


1.வானம், நட்சத்திரங்கள்  
2. நாய்க்குடை (காளான்)  
3. இளநீர்
4. நகம்
5.  சீப்பு 
6.  தவளை
7. இசைத்தட்டு
8. சீட்டுக்கட்டு
9. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.