வாழ்க்கைச் சுவைகள்
கரும்பு போல இனிமையாகப் பேச கற்கணும் - பாகல்கசப்பைப் போல பேசுவோர்பால் பழக மறுக்கணும்!


கரும்பு போல இனிமையாகப்
பேச கற்கணும் - பாகல்
கசப்பைப் போல பேசுவோர்பால்
பழக மறுக்கணும்!
தீமை செய்யும் பேர்களிடத்தில்
மிளகாய் ஆகணும்- நாம்
உப்பைப்போல உறவு கொண்டே
உயிரும் வாழணும்!
புதிய புதிய அறிவியல் செய்தியைப்
புரட்டிப் பார்க்கணும் - வாழ்க்கைப்
புதரில் புளிப்பு இல்லாதாக்கப்
புதுமை செய்யணும்!
உவப்புக் கொண்டே உண்மையறிந்து
உயர்ந்து சிறக்கணும் - வாழ்வில்
உவர்ப்பு நீக்கி உலவுகின்ற
வாழ்க்கை அமைக்கணும்!
அறுசுவை வாழ்வில் கலந்திருக்கு
அறிவாய்ச் சுவைக்கணும்- நாம்
விரும்பும் சுவையை வாழ்வில் என்றும்
சுவைத்து வாழணும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...