
1.உணவு கொடுத்தால் வளரும், நீர் கொடுத்தால் அழியும்.
2.இதயம் போல துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும்.
3.கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான்.
4.வெயிலில் மலரும், காற்றில் உலரும்.
5.வேகாத வெயிலில் வெள்ளையப்பான் விளைகிறான்.
6.கழுத்து உண்டு தலையில்லை, உடல் உண்டு உயிர் இல்லை, கை உண்டு விரல்கள் இல்லை.
7.ஆகாயத்தில் பறக்கும், அக்கம் பக்கம் போகாது.
8.ஆறெழுத்து உலோகம், கடைசி மூன்றெழுத்து கொத்தும்.
9.அண்டமென்ற பெயரும் உண்டு, அடை காத்தால் குஞ்சும் உண்டு.
விடைகள்
1. நெருப்பு
2. கடிகாரம்
3. புகை
4. வியர்வை
5. உப்பு
6. சட்டை
7. கொடி
8. துத்தநாகம்
9. முட்டை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







