குழந்தைகள் இலக்கியம்...

சோவியத் ரஷியாவில் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகத்துக்கு மாக்சிம் கார்க்கி தலைவராக இருந்தார். குழந்தைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்தே நூல்களை வெளியிட்டார்.
குழந்தைகள் இலக்கியம்...


சோவியத் ரஷியாவில் குழந்தை இலக்கிய நூல்களை வெளியிடும் பதிப்பகத்துக்கு மாக்சிம் கார்க்கி தலைவராக இருந்தார். குழந்தை
களின் விருப்பங்களைக் கேட்டறிந்தே நூல்களை வெளியிட்டார்.

அமெரிக்க நூல்களில் எழுத்தாளர் சந்திப்பு மாதம்தோறும் நடக்கிறது. இம்மாத எழுத்தாளர் என்று அவருடைய அறிமுகம் குறித்து, தனி மேசையில் அடுக்கி வைக்கப்படுகிறது. குழந்தைகள் படிக்க வேண்டிய நூல்கள் என்று வயதுவாரியாக, தனித்தனியே குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1950-இல் தொடங்கப்பட்ட குழந்தை எழுத்தாளர்கள் சங்கத்துக்கு முதன்முதலில் தலைவராக இருந்தவர் வை.கோவிந்தன். 

"குழந்தைகள் செய்தி' எனும் தினப்பத்திரிகையை முதன் முதலில் சிறுவர்களுக்காக நடத்தியவர் சக்தி வை.கோவிந்தன்.  குழந்தைகளுக்கான முதலும், கடைசியுமான தினசரியும் அதுதான்.

கே.என்.சிவராஜ பிள்ளை, பண்டித முத்துசாமி பிள்ளை ஆகியோர் இணைந்து "சிறுபாமாலை' எனும் பெயரில் குழந்தைப் பாடல் தொகுப்பை முதலில் வெளியிட்டனர்.

தமிழில் முதல் சிறுவர் இதழான "பால தீபிகை' 1840-இல் வெளியிடப்பட்டு, 
22 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது.

சுதந்திரத்துக்கு முன்பே புதுக்கோட்டையில் வெ.சுப.நடேசன் "டமாரம்' எனும் சிறுவர் இதழை நடத்தினார்.  விலை கால் அணா. அப்போதே 20 ஆயிரம் பிரதிநிதிகள் விற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com