தெரியுமா?

தங்க உற்பத்தியில்  முதலிடம் பிடித்துள்ள முதல் 10 நாடுகள்:
தெரியுமா?


தங்க உற்பத்தியில் முதலிடம் பிடித்துள்ள முதல் 10 நாடுகள்:

சீனா- 330 மெட்ரிக் டன், ஆஸ்திரேலியா- 320 மெட்ரிக் டன், ரஷ்யா- 310 மெட்ரிக் டன், கனடா- 220 மெட்ரிக் டன், அமெரிக்கா-170 மெட்ரிக் டன், மெக்சிகோ- 120 மெட்ரிக் டன், கஜகஸ்தான்- 110 மெட்ரிக் டன், தென்ஆப்பிரிக்கா- 100 மெட்ரிக் டன், பெரு-95 மெட்ரிக் டன், உஸ்பெகிஸ்தான்- 90 மெட்ரிக் டன்.

ஆப்பிரிக்க நாட்டுப் பாலைவனங்களில் பூனைகள் வாழ்கின்றன. சிறுத்தையின் குணாதிசயம் கொண்ட இந்தப் பூனைகள் உறுதியான பாதங்களால் மணல் பரப்பிலும், 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக் கூடியவை. சற்றுத் தாழ்வாகப் பறந்து வரும் பறவைகளையும் தாவிப் பிடித்து இரையாக்கும் தன்மை உடையது இந்தப் பூனைகள்.

குகைகள் என்றால் மகாராஷ்டிர மாநிலம்தான் நினைவுக்கு வரும். நாட்டிலேயே அதிக அளவு குகைகள் கொண்ட இந்த மாநிலத்தில், அவுரங்காபாத்தில் எல்லோரா குகை உள்பட 12 புத்த, 17 இந்து, 5 ஜெயின் குகைக் கோயில்கள் உள்ளன.

கடலில் வீசும் சூறாவளிக்கு வாட்டர் ஸ்பவுட் என்று பெயர்.

ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் தினம் பிப். 28-இல் கொண்டாடப்படுகிறது.

உலகில் உயரமான விமானத் தளம் திபெத்தில் உள்ள லாசாவில் அமைந்திருக்கிறது.

வைரத்தை எவ்வளவு அதிகபட்ச சூட்டில் காய்ச்சினாலும் உருகாது.

கின்னஸ் புத்தகம் லண்டனில் இருந்து வெளியாகிறது.

நண்டு ஓராண்டில் சராசரியாக நடக்கும் தூரம்- 83 கி.மீ. ஆகும்.

ஆல்பஸ் மலைத் தொடர் 7 நாடுகளில் பரவியுள்ளது.

காயம் விரைவாக ஆறுவதற்கு மருத்துவர்கள் வைட்டமின் கே மாத்திரைகளை அளிக்கின்றனர்.

நெதர்லாந்து நாட்டின் 27 சதவீதப் பரப்பளவு கடல் மட்டத்தைவிட தாழ்வான பகுதிகளில் உள்ளது.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

"கிரிக்கெட் மை ஸ்டைல்' என்ற நூலை எழுதியவர் கபில்தேவ். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் முகம்மது அசாரூதின். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்திய வீரர் ஹர்பஜன் சிங். மிகவும் இளம் வயதில் (15) சர்வதேச கிரிக்கெட் விளையாடிய முஸ்தாக் முகம்மது, பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆவார். முதன் முதலில் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.

ஒரு ஜாமம் என்பது மூன்று மணி நேரத்தைக் குறிக்கும்.

ஆயிரம் கோயில் தீவு என்று அழைக்கப்படும் தீவு பாலித்தீவாகும்.

இந்தியாவில் உறையூரில் தான் துத்தநாகம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.

-ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com