தெரியுமா?

இந்தியா, தைவான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்துக்கு வரலாம் என்று அந்த நாட்டு அரசு கடந்த நவம்பரில் அறிவித்தது.
தெரியுமா?


இந்தியா, தைவான் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்துக்கு வரலாம் என்று அந்த நாட்டு அரசு கடந்த நவம்பரில் அறிவித்தது. 2024-ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வரை இந்த நிலை தொடரும்.  இதைத் தொடர்ந்து, ஏராளமானோர் தாய்லாந்துக்கு சுற்றுலாவுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

இந்திய பார்போர்ட் இருந்தால் போதும். 19 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்றுவரலாம்.  இதுதவிர, வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, 26 நாடுகளில் இந்தியர்களுக்கு "விசா ஆன் அரைவல்' வசதியுள்ளது. அதாவது, அந்த நாடுகளுக்குச் சென்றவுடன் அங்கு விசா பெறலாம்.  26  நாடுகளுக்குச் செல்ல இ.விசா பெற வேண்டும். மேலும், 11 நாடுகளுக்குச் செல்ல விசா ஆன் அரைவல் அல்லது இ. விசாவைத் தேர்வு செய்யலாம்.  விசா இல்லாமல் சென்று வரக் கூடிய 19 நாடுகள்: பார்படோஸ், பூடான், டொமினிகா, க்ரெனடா, ஹைதி, ஹாங்காங், மாலத்தீவுகள், மொரிஷியஸ், மானட்செராட், நேபாளம், நுயே தீவு, செயின்ட் வின்சென்ட், திக்ரெனாடின்ஸ், சமேவாஸ செனகல், செர்பியா, ட்ரினிடாட், டொபாகேர, தாய்லாந்து, இலங்கை, மலேசியா.

 சீனாவில் உள்ள "நியூ சவூத் சைனா மால்' தான்உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் மால். இதில் இருக்கும் கடைகளின் பரப்பு மட்டும் 64 லட்சத்து 59 ஆயிரத்து 993 சதுர அடியாகும். இதில் பாதியளவு கூட அமெரிக்காவின் மிகப் பெரிய மால் என்ற பெருமை பெற்ற "கிங் ஆஃப் ப்ரூசிய மால்' இல்லை.

 டெலிபோனில் "ஹலோ'  சொல்லும் முறையை அறிமுகப்படுத்தியவர் ஆல்வா எடிசன். அதற்கு முன்னர் டெலிபோனை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல் கூறிய ‘அகோய் அகோய்' தான் பயன்பாட்டில் இருந்தது.

கங்காருவின் வால் உடலை சமநிலைப் படுத்த உதவுவதோடு மூன்றாவது கால் போலவும் செயல்படுகிறது.

இந்தியாவில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் நீல நிறங்களில் இருக்கும். இந்த நீல நிற ரயில் பெட்டிகளில் ஜன்னல் மீது வெள்ளைக் கோடு இருந்தால் முன்பதிவு இல்லாத பெட்டிகள் என்றும் மஞ்சள் நிறக் கோடுகள் இருந்தால் மாற்றுத்திறனாளிகள், உடல்நலக் குறைவால் பாதிக்ப்பபட்டவர்களுக்கான சிறப்புப் பெட்டி என்று புரிந்துகொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com