ஆயுளை நீட்டிக்கும் என்று
அதியமான் ஒளவை பாட்டிக்கு
நேயமுடன் உண்ண கொடுத்த
நெல்லிக் கனியில் நிறைந்துள்ள
வைட்டமின் சி சத்து உடலை
வாட்டும் நோயைத் தடுக்கும்
ஐயமின்றி மாணவரின் நினைவாற்றலைப்
பையவே பெருக்கி தேர்வில்
முதலிடம் பிடித்து முன்னேறி
பதவியும் பாராட்டும் பெற்று
உதவியும் பிறருக்குச் செய்து
உயர்வாய் வாழ வைக்கும்!
-மு.அ.அபுல் அமீன், நாகூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.