அவளுக்கென்று ஓர் உலகம்!

பரபரப்பும், வேகமும் நிறைந்த      உலகில்,  தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஓடிக் கொண்டேயிருக்கும் இயந்திரத் தனமான வாழ்க்கையில்.... அவளுக் கென்று ஓர் உலகம் உண்டு! அந்தப் பெண்ணிய உலகத்தை, “அவளுடைய சொந்த
அவளுக்கென்று ஓர் உலகம்!
Updated on
2 min read

பரபரப்பும், வேகமும் நிறைந்த      உலகில்,  தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஓடிக் கொண்டேயிருக்கும் இயந்திரத் தனமான வாழ்க்கையில்.... அவளுக் கென்று ஓர் உலகம் உண்டு! அந்தப் பெண்ணிய உலகத்தை, “அவளுடைய சொந்த உலகில்...' என்ற தலைப்பில் ஓவியமாய் தீட்டியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜி.லதா.

கோவை பீளமேட்டிலுள்ள கஸ்தூரி சீனிவாசன் கலை மையத்தில் 5 நாட்கள் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில், ஓவியர் லதாவின் கை வண்ணம், வண்ணங்களால் விரிந்து மனதைத் தொட்டது.

"கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்' என்பதற்கேற்ப, லதா தூரிகை எடுக்கப் பழகியது தனது தந்தை கே.எஸ்.கோபாலைப் பார்த்து. சென்னை

சோழமண்டலம் ஓவியக் குடியிருப்பு உருவாகக் காரணமாக இருந்தவர்களுள் முக்கியமானவர், கே.எஸ்.கோபால். கிராபிக் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த தந்தையைப் பார்த்து, ஓவியம் வரையும் ஆர்வம் லதாவையும் இளமையிலேயே தொற்றிக் கொண்டது.

""இப்போது அப்பா உயிருடன் இல்லா விட்டா

லும்கூட, அவரது ஓவியத் தாகம் எனக்குள் அப்படியே பதிந்து போயிருக்கிறது. சோழ மண்டலம் ஓவியர்கள் குடியிருப்பில் திரும் பிய திசையெல்லாம் ஓவியர் களையும், அவர்களது படைப்புகளையும் பார்த்து, ரசித்து வளர்ந்ததாலோ என்னவோ எனக்குள் இயல் பிலேயே ஓவியம் வரையும் ஆர்வம் நிறைந்திருந்தது. பள்ளி, கல்லூரிப் பருவத்தில் அவ்வப்போது ஓவியங்கள் வரைந்துள்ளேன். முழு மூச்சாக ஓவியம் வரைய ஆரம்பித்தது கடந்த மூன்றாண்டுகளாகத்தான்...'' என்னும் லதா, பொருளி யலில் எம்.பில் பட்டம் பெற்றவர்.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி யாற்றி வரும் இவர், வார இறுதியில் தன் தாய் வீடு அமைந்துள்ள

சோழமண்டலம் ஓவியர்கள் குடியிருப்புக்குச் சென்று ஓவியங்கள் தீட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவரது மனதுக்கு மிகவும் உகந்த கடவுள் விநாயகர். காட்சிப்படுத்தும் தன் படைப்புகளில் "கணேசா'வை எப்படியும் இடம்பெறச் செய்துவிடுகிறார்.

1999-ம் ஆண்டு முதல் மற்ற ஓவியர்களுடன் இணைந்து தன் படைப்புகளை அவ்வப்போது கண்காட்சியாக  வைத்து வருகிறார். சோழமண்டலம் ஓவியர்கள் குடியிருப்பில் நடைபெறும் ஓவியக் கண்காட்சிகள், கலை விழாக்களில் லதாவின் ஓவியத்துக்கும் ஓர் இடம் இருக்கும்.

கடந்த ஆண்டுதான் முதன் முறையாக இவரும், இவரது தங்கை பிரியாவும் இணைந்து தனிப்பட்ட முறையில் ஓவியக் கண்காட்சியை சென்னையில் நடத்தினார்கள். "ஹோம் கமிங்' என்று பெயரிடப்பட்ட அந்தக் கண்காட்சியில் மனிதர்கள், அவர்களுக்கிடையிலான உறவு முறைகள் குறித்து லதா ஓவியங்கள் தீட்டியிருந்தார்.

கோவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்த "அவளுடைய சொந்த உலகில்...' பெண்களின் மன உணர்வுகளை அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார்.

கேன்வாஷ் போர்டில் அக்ரிலிக் பெயிண்டிங்கில் தீட்டப்பட்டிருக்கும் இந்த ஓவியங்களில் கிரா

மத்துக் கன்னி, பூ விற்கும் மாது, நவீன கால இளைஞி, முதிர் கன்னி, நடுத்தர வர்க்கப் பெண்கள் என்று பலதரப்பட்ட பெண்களின் மன உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

தாய்-மகளுக்கிடையிலான நெருக்கம், காதலனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளம் பெண்ணின் ஏக்கம், நிகழ்கால இயலாமைகளுக்கிடையே எதிர்காலம் குறித்து கனவு காணும் வெகுளிப் பெண்ணின் எண்ண ஓட்டம், கதவுக்குப் பின் மறைந்தபடியே வருங்

காலத்தைத் தேடும் இளைஞியின் சலனமற்ற முகம்... இப்படிபெண் மனதின் ஆழ, அகலங்களை வண்ணங்களால் வசியப்படுத்தியிருக்கிறார் லதா.

""மற்றவர்களுடன் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், பிறருக்குக் கொடுத்து மகிழ வேண்டும், உறவுகளுடன் ஒன்றாக இணைந்து உள்ளம் நெகிழ வேண்டும் என்பதே ஒவ்வொரு பெண்ணின் அடி மனதிலும் புதைந்து கிடக்கும் தீராத ஆசையாக இருக்கிறது. ஆனால் பரபரப்பான இந்த உலகில், வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேரம் காலமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அவசர உலகில், பெண்ணின் வெவ்வேறு மன ஓட்டங்களை என் ஓவியங்களில் பிரதிபலித்துள்ளேன். இந்த அவசர உலகை விட்டு வெளியே வரத் துடிக்கும் அவளது ஏக்கங்கள், தேடல்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறேன். இது எல்லா பெண்களுக்குமானது. இந்த அவசர உலகிலிருந்து "அவள்' மீண்டு வரவேண்டும் என்பதே என் விருப்பம்...'' -கனவுகள் சிறகடிக்கû விவரிக்கிறார் லதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com