மனித மூளைக்குத் தனியான ஒரு விசேஷ குணம் உள்ளது. அதற்கு எழுத்துக்களைவிட, படங்களை அதிகம் பிடிக்கும். இதனால்தான் என்றோ பார்த்த திரைப்படம் நம் நினைவில் நிற்பதும் நேற்று படித்த பாடப் புத்தகம் மறப்பதும். குழந்தைகள் கூட APPLE என்ற எழுத்துக்களையும், ஆப்பிள் படத்தையும் ஒன்றே சேர்த்து வைக்கும்போது எளிமையாக ஆப்பிள் எனப் படித்து விடுவதும் இதனால்தான்.
இந்த முறையிலான கல்வியைத்தான் தற்போது E-Learning என்ற பெயரில் ஸ்மார்ட் கிளாஸ் முறை என நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. பாடங்களை ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பின்னர் மாணவர்களுக்குப் புரிகின்றதோ இல்லையோ மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை மாற்றி பாடங்களையே படங்களாக்கிக் காட்டி பல்வேறு உதாரணங்களையும் இம்முறை மூலம் எடுத்துக்காட்டும் போது வகுப்பறைகளில் மட்டுமின்றி வாழ்க்கையில் எங்கு எதைப் பார்த்தாலும் அதனுடன் தான் படித்த பாடத்தை ஒப்பிட்டு நோக்கும் முறையை இந்த ஸ்மார்ட் கிளாஸ் சிஸ்டம் ஏற்படுத்தித் தருகிறது என்றால் அது மிகையல்ல.
அனைத்து வகுப்பறைகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் முறையை ஏற்படுத்தி செயல்படுத்தி வரும் திண்டுக்கல் ஸ்ரீமகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் கோதைசெல்வத்திடம் ஸ்மார்ட் கிளாஸ் குறித்து கேட்டோம்.
""படிப்பது என்ன என்பது மாணவர்களுக்குப் புரிய வேண்டும். வெறும் தாள்களில் அச்சிட்ட பாடத்தை வாசிப்பதனாலும், மனப்பாடம் செய்து தேர்வில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது பிரயோஜனமாக இருக்காது. கற்கும் முறையை விட கற்பிக்கும் முறை எளிதாக இருந்தால் கற்பதிலும், கற்பிப்பதிலும் ஆர்வம் கூடிக் கொண்டே இருக்கும். இந்த முறையை ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலமான கல்வி வழங்குகிறது.
இந்த ஸ்மார்ட் கிளாஸýக்கு ஒரு சர்வர், ஒவ்வொரு வகுப்பறையிலும் எல்.சி.டி. மானிட்டருடனான கம்ப்யூட்டர் தேவை. இந்த சர்வர்களில் நமக்குத் தேவையான அனைத்துப் பாடங்களையும் நாம் பதிவு செய்து கொள்ள முடியும். இதைத் தவிர இன்டர்நெட் மூலம் தேவையான விஷயங்கள், எஜூசாட் மூலம் கிடைக்கும் விஷயங்களை டவுன்லோட் செய்து தேவையான நேரத்தில் வகுப்பறைகளில் காண்பிக்கவும் சர்வர் உதவும்.
நடத்தப்பட வேண்டிய பாடத்தை ஆசிரியர் தேர்வு செய்து வகுப்பறையில் உள்ள மானிட்டர் மூலம் மாணவர்களுக்கு விளக்கிட முடிகிறது. ஆசிரியருக்குக் கணினியைக் கையாளும் திறன் இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. சர்வரில் இருக்கும் பாடத்தை எவ்வாறு வெளியில் எடுப்பது என்பது மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது.
உதாரணமாக நெம்புகோல் தத்துவம் குறித்த பாடத்தை ஆசிரியர் நடத்துகிறார் என்றால் கனமான பாறையை வெறும் கையால் நகர்த்துவது என்பதை விட நெம்புகோல் தத்துவம் மூலம் எளிதில் நகர்த்திடலாம் என ஒரு படத்தைக் காண்பித்து விளக்குவார்.
ஆனால் ஸ்மார்ட் கிளாஸ் முறையின் மூலம் அனிமேஷனான கனமான பாறையை நெம்புகோல் தத்துவம் மூலம் எப்படி இலகுவாக நகர்த்த முடிகிறது என்பதை மிகமிக எளிதாக மாணவர்களுக்கு விளக்கிட முடியும். ஒவ்வொரு வகையான நெம்புகோல் தத்துவத்திற்கும் பல்வேறு வகையான உதாரணங்களை அனிமேஷன் மூலம் விளக்க முடிகிறது.
இதனால் 1 மணி நேரம் நடத்தும் பாடத்தை அதிக விரைவிலும், அதிக விளக்கங்களுடன் சொல்லிக் கொடுக்க முடிகிறது. இதனால் வெளி உலகில் ஏதேனும் ஒரு காட்சியைக் காணும் மாணவருக்கு தான் ஏற்கனவே படித்த பாடத்துடன் அதை ஒப்பிட்டு பார்க்கும் மனநிலை ஏற்படும்.
இதன் மூலம் கற்கும் கல்வியை அடிக்கடி நினைவில் நிறுத்தி பார்ப்பதனால் படிப்பது மறந்து போகாமல் இருக்கும். கற்பிக்கும் ஆசிரியரின் பணியும் எளிமையாகி விடுவதனால் ஒரு உதாரணத்திற்குப் பதிலாக பல உதாரணங்களைப் படங்களின் மூலம் எளிமையாக விளக்கி விடுகிறார்'' என்றார் தாளாளர் கோதை செல்வம்.
மூளைக்குப் பிடித்த விஷயத்தை நாம் பதியும் போது மட்டுமே அது நினைவில் வைத்துக் கொள்கிறது. இதனால் தான் கற்பித்தலையும் திரைப்படம் போல காட்சிகள் மூலம் விளக்கிடும் வகையிலான ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் E-Learning முறை நடைமுறைக்கு வரத் தொடங்கி உள்ளது.
இந்த ஸ்மார்ட் கிளாஸ் என்பது தற்போதைய காலத்தின் கட்டாயமாக உருவெடுத்து வருகிறது. பெருநகர் கல்வி, கிராமப்புற கல்வி என்ற வேறுபாட்டை ஸ்மார்ட் கிளாஸ் மூலம் மாற்றி அமைத்திட முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


