புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நம்பியார் செய்யாத வில்லத்தனமா?

திருமதி செல்வம்' தொடரில் வடிவுகரசியின் மருமகளாக வந்து ரசிகர்களின் மனதில் எரிச்சலை ஏற்படுத்தும் ராகவியை நேரில் சந்தித்து, "இப்படிப் பழிவாங்குறீங்களே "நியாயமா?' என்றால் கொஞ்சம் நேரம் சத்தமாகவே சிரித்தார

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:39 am

ஸ்ரீதேவி குமரேசன

திருமதி செல்வம்' தொடரில் வடிவுகரசியின் மருமகளாக வந்து ரசிகர்களின் மனதில் எரிச்சலை ஏற்படுத்தும் ராகவியை நேரில் சந்தித்து, "இப்படிப் பழிவாங்குறீங்களே "நியாயமா?' என்றால் கொஞ்சம் நேரம் சத்தமாகவே சிரித்தார். கல்மிஷம் இல்லாத சில்மிஷ சிரிப்பை ரசித்தபடியே அவரோடு பேசினோம்:

சினிமாத் துறைக்கு வந்தது எப்போது?

ரஜினி நடித்த "ராஜா சின்ன ரோஜா' படத்தில்தான் முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். அதில் நடித்த நான்கு, ஐந்து பிள்ளைகளில் நானும் ஒருத்தி. அதைத் தொடர்ந்து சில படங்களில் நடித்தேன். அப்பொழுது படித்துக் கொண்டிருந்ததால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இருப்பினும் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போது நடித்து வந்தேன்.

அதன் பிறகு முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்தி பி.ஏ. முடித்துவிட்டு, மறுபடியும் சினிமாத்துறைக்கு நடிக்க வந்துவிட்டேன். தற்பொழுது சின்னத்திரையில் திருமதி செல்வம் தொடரிலும், மகாலஷ்மி தொடரிலும் நடித்துவருகிறேன்.

"திருமதி செல்வம்' தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது?

ரொம்ப நல்ல அனுபவம். ரெண்டு வருஷத்துக்கு மேலாக இந்தத் தொடரில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். ஹோம்லியான கதை. படப்பிடிப்பின் நடுவே அத்தை, மாமா, அண்ணன், அண்ணி, தங்கச்சி என்று ஒரு குடும்பமா வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதில் கொஞ்சம் வில்லத்தனமான பாத்திரத்தில் நடிக்கிறேன்.



வில்லத்தனமான கதாபாத்திரத்தை விரும்பித்தான் ஒப்புக்கொண்டீர்களா?

இல்லவே இல்லை.  இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாலும் ஆரம்பத்தில் மிகவும் வருத்தமாகவும் சிரமமாகவும் இருந்தது. என்னை இப்படி நெகடீவ் கதாபாத்திரமாக மாற்றுகிறீர்களே என்று புலம்பிக்கிட்டே இருப்பேன். அப்போதெல்லாம் இயக்குநர் "உங்கள் கதாபாத்திரத்தின் பலத்தைப் போகப்போகப் புரிந்துகொள்வீர்கள்' என்று சொல்வார். அவர் சொல்லியபடி ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்புக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. இப்போது விரும்பி நடித்து வருகிறேன்.

ரசிகைகளிடம் திட்டு வாங்கிய அனுபவம் இருக்கிறதா?

திட்டு இல்லை. ஓர் அம்மா என் கழுத்தை நெரித்தே இருக்கிறார். பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்து அந்த அம்மாவை விலக்கிவிட்டு, அது நடிப்புங்க, நிஜமில்லை என்று சொன்ன பிறகே விட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வெளியில் போக வேண்டும் என்றாலே கொஞ்சம் பயமாக இருக்கிறது.

ரசிகர்கள் இந்த மாதிரி நடந்து கொள்ளும்பொழுது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

ஆரம்பத்தில் அழுதே இருக்கிறேன். நடிப்பு என்று தெரிந்து இப்படி நடந்து கொள்கிறார்களே என்று வருத்தமாக இருக்கும். இப்போது  கதையோடு எப்படி ஒன்றிப் போயிருக்கிறார்கள் என்று நினைத்துச் சந்தோஷப்படுகிறேன். அவர்கள் திட்டுவதில்தான் என் வெற்றி இருக்கிறது என்றும் புரிகிறது. அதேசமயம் அந்தக் காலத்தில் நம்பியார் செய்யாத வில்லத்தனத்தை நான் என்ன செய்துவிட்டேன் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

குடும்பம்?

கணவர் சசிகுமார் சினிமாத் துறையில் தான் கேமிராமேனாக இருக்கிறார். "தொட்டுப்பார்'  படம் முடித்துவிட்டு வேறு ஒரு படத்தில்

பணியாற்றி வருகிறார். எங்களுக்கு ஜிரித்தி சாய் என்கிற பெண்குழந்தை உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.