3 மணி நேரமா? வருடமா?
" உல்லாசம்' மகேஸ்வரி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சௌந்தரவள்ளி' தொடரில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார். எதையும் தட்டிக் கேட்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிரு


" உல்லாசம் ' மகேஸ்வரி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சௌந்தரவள்ளி' தொடரில் உற்சாகமாக நடித்துக்கொண்டிருக்கிறார். எதையும் தட்டிக் கேட்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அவரோடு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
நல்ல கதையாக இருந்தால் சின்னத்திரை பக்கம் வரலாம் என்று நினைத்துக் கொண்டிருந்ததேன். அப்பொழுது "சௌந்தரவள்ளி' தொடரைப் பற்றி சொன்னார்கள்.
அதன் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒத்துக்கொண்டேன். இடையில் தெலுங்கு தொடர்களில் நடிக்க வாய்ப்பு வர அதில் கவனம் செலுத்திக்கொண்டு இருந்தேன். அதனால் என்னைப் பொறுத்தவரை இடைவெளி எதுவும் இல்லாமல்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் அதிகம் நடிக்காததால் இடைவெளி ஏற்பட்டிருப்பதுபோல உங்களுக்குத் தோன்றலாம்.
சினிமாவிலேயே தொடராமல் சின்னத்திரை பக்கம் வந்தது ஏன்?
சின்னத்திரையில் வருவதும் நல்ல விஷயம் தானே. ஏன் சின்னத்திரையைத் தேர்தெடுத்தேன் என்பதற்கு சிறப்புக் காரணம் எதுவுமில்லை. ஏற்கனவே விஜய் டிவியில் தொடர்கள் எல்லாம் நடித்துக் கொண்டுதான் இருந்தேன். பெரியதிரையில் ஒரு படம் நடித்தால் மூன்று மணி நேரம் தான் ஆடியன்ஸ் மனதில் நிற்போம். ஆனால் சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்தால் இரண்டரை வருடம், மூன்று வருடம் என்று ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க முடியும்.
தெலுங்கில் வேறு தொடர்கள் நடிக்
கிறீர்களா?
தெலுங்கில் "மை நேம் இஸ் மதர்தெராஸô' என ஒரு தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். அது முடிந்து விட்டது. அந்தத் தொடரை தமிழில் எடுக்கப் போவதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் முடிவாகவில்லை.
பெரிய திரையில் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
சின்னத்திரையே முழு திருப்தியாக இருப்பதனால், இப்போதைக்குப் பெரியதிரை பக்கம் போகிற எண்ணம் இல்லை.
நெகட்டீவ் கதாபாத்திரம் எல்லாம் செய்கிற எண்ணம் உண்டா? எந்த மாதிரியான கதைகள் தேர்வு செய்கிறீர்கள்?
கதை கேட்கும் பொழுது பிடித்திருந்தால் செய்கிறேன். மற்றபடி இந்த மாதிரியான பாத்திரம் என்றெல்லாம் தேடி நடிப்பதில்லை.
நடிப்பைத் தவிர இயக்கம், புரொடக்ஷன் என வேறு துறைகளில் ஆர்வம் இருக்கிறதா?
என் கணவர் ஜெயகிருஷ்ணா சாப்ட்வேர் கம்பெனி வைத்திருக்கிறார். எனவே ஆபிஸ், குடும்பம், நடிப்பு என இதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் வேறு துறை பக்கம் கவனம் செலுத்துகிற எண்ணம் எல்லாம் இப்போதைக்கு இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...