ஒரு தொடர்... ஒன்பது வேடங்கள்!
ரசி'யில் ராதிகாவின் மகளாக வந்து இப்போழுது "இளவரசி'யாகி இருக்கும் சந்தோஷியை நமது ஞாயிறு கொண்டாட்டத்துக்காக சந்தித்தோம். கிச்சனில் படுபிஸியாக இருந்தவர்,சமைத்துக் கொண்டே நம்மோடு உரையாடினார். இதோ கம கம வ


ரசி'யில் ராதிகாவின் மகளாக வந்து இப்போழுது "இளவரசி'யாகி இருக்கும் சந்தோஷியை நமது ஞாயிறு கொண்டாட்டத்துக்காக சந்தித்தோம். கிச்சனில் படுபிஸியாக இருந்தவர்,சமைத்துக் கொண்டே நம்மோடு உரையாடினார். இதோ கம கம வாசத்துடன்.
இளவரசி என்ன மாதிரியானவள்?
"இளவரசி' தொடர் ஆரம்பமாகி இரண்டு வாரங்கள்தான் ஆகின்றன. இருந்தாலும் மக்கள் கிட்டே இருந்து நல்ல வரவேற்பு இருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நிலையை சொல்லும் கதை. இந்தத் தொடரில் நான் மெயின் ரோல் செய்கிறேன். ரொம்ப ஹோம்லியான கேரக்டர்.
அரசியில் ராதிகாவின் மகளாக நடித்த அனுபவம் எப்படி?
ராதிகாவைப் பார்க்கும்போது ஒரு பெண் பத்து வருஷமா ஒரு நிறுவனத்தை இவ்வளவு வெற்றிகரமா நடத்த முடியுமான்னு பிரமிப்பாக இருந்தது. அவ்வளவு துணிச்சலான, திறமையானவங்களோட பக்கத்தில் இருந்தது பார்த்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவங்க துணிவும், திறமையும் எதையாவது சாதிக்கணும்னு இன்ஸ்பரேஷனா இருந்தது.
வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீங்க?
காமெடி தொடர் ஒண்ணு சன் டி.வி.யில் புதுசா வரப்போகிறது. தொடர் பேரு "பொண்டாட்டி தேவை', கலைஞர் டிவியில் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும்தொடர், பாலிமர் டிவியில் ஒரு பிராஜக்ட் எடுத்திருக்காங்க. அது இனிமேதான் வரப்போகிறது, மறுபடியும் அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சியில் என் கணவரோட கலந்துக்கப் போறேன்.
அணுவளவும் பயமில்லை நிகழ்ச்சியில் பங்கேற்பதில் உங்களுக்கு தயக்கமில்லையா?
தினமும் காலையில் எழுந்து மேக்கப் போட்டு நடிக்க போறத்துக்கு இந்த நிகழ்ச்சி கொஞ்சம் வித்தியாசமான எக்ஸ்பிரியன்ஸô இருக்கு. இந்த சான்ஸ் எல்லாருக்குமே கிடைக்காது. நான் உண்மையில் என் நிஜவாழ்க்கையில் ரொம்பவே பயந்தவள். திக்திக் தொடர் எல்லாம் பார்க்கக்கூட ரொம்ப பயப்படுவேன்.
அங்கே போய் பாம்பு, தேள் கூட எல்லாம் எடுக்கும்போது ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. மற்றவர்கள் செய்யும் போது நானும் செய்யணும்னுங்கிற எண்ணம் அங்கே போனதும் தன்னாலேயே வந்துவிடுகிறது. அப்படி ஒரு தைரியம் வருவது எனக்குப் பிடித்திருந்தது. நிறைய விஷயத்தில் பயப்பட கூடாது, தைரியமா இருக்கணும்ங்கிற விஷயத்தை எடுத்துச் சொல்வதுபோல இருக்கு இந்த நிகழ்ச்சி.
"அரசி' தொடரில் பைத்தியமா நடிக்கும் போது என்ன நினைத்தீர்கள்?
"அரசி' தொடரை பொறுத்தவரை பத்து சீரியல்ல நான் நடிப்பதை ஒரே சீரியல்ல நடிச்சிருக்கேன். கல்லூரி பொண்ணாக, மனைவியாக, குழந்தை காணாமல் போனதில் பைத்தியம் பிடிக்கும் தாயாக, கொலைகாரியாகன்னு ஒன்பது கேரக்டர் அந்த ஒரு சீரியல்ல கிடைச்சது.
அந்த எல்லா கேரக்டருமே ரொம்ப சேலஞ்சிங்கா இருந்தது. சமுத்திரகனி இயக்கிய தொடர் அது. நான் எட்டு வயதில் இருந்து சீரியலில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்போதில் இருந்து அவரை பார்த்துக்கிட்டு இருக்கேன். அவர் இருந்ததுனால எனக்கு அவ்வளவு கஷ்டமா தெரியல. எப்படி பட்டவங்களா இருந்தாலும் அவர் வேலை வாங்கிடுவார்.
அந்த மாதிரி பைத்தியமா நடிக்கும் போது ரொம்ப ஈசியா இருந்தது. டப்பிங்க எல்லாம் போனா கத்துற வேலை தான் ஐந்து நிமிடத்தில் ஒரே டேக்ல கத்திட்டு வந்துகிட்டே இருப்பேன்.
என்ன மாதிரி கேரக்டர் செய்ய நினைக்கிறீங்க?
எனக்கு குறும்புத்தனமான கேரக்டர் பண்ண ரொம்ப பிடிக்கும். ரொம்ப அழுது நடிக்கிற மாதிரி கேரக்டர் பிடிக்காது. தமிழ் சீரியலைப் பொருத்தவரை இன்னும் நிறைய வளரணும், மாற்றங்கள் வரணும்னு நினைக்கிறேன். நம் தமிழ்நாட்டு பெண்களை பொறுத்தவரை கிளிசரின் போட்டு அழுறவங்களைத்தான் பிடிக்குது.
அதே மும்பை சீரியல் எல்லாம் பார்த்தா ரொம்ப கலர் ஃபுல்லா இருக்கும். இந்த மாதிரி தமிழ்லயும் வரணும்னு அடிக்கடி நினைப்பேன். அதனாலயே என் காஸ்டியூம், என் மேக்கப் எல்லாத்துக்கும் நிறைய அக்கறை எடுத்துக்குவேன்.
நடிப்பு தவிர இந்த ஃபீல்டில் வேற எந்த துறையில் ஆர்வம் இருக்கு?
புரொடக்ஷன் சைடுல ஆர்வம் இருக்கு. அதுக்காக புரொடியூசரா யோசிக்கல. பேக் ஆப் தி ஸ்கிரின் சொல்லுவாங்கல புரொடக்ஷன் எக்ஸிகியூட்டிவ்வா பண்ணணும்னு ஆசையிருக்கு. ரேவதி மேடம் கிட்ட கூட ஆப்ளிகேஷன் போட்டு வெச்சிருக்கேன், உங்க ஆபிஸ்லேயே எனக்கு ஒரு வேலை வேணும்னு.
ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள் டிவி பார்ப்பீர்களா?
டிவி பார்ப்பேன். ரியாலிட்டி ஷோ பார்ப்பேன். இண்டெர் நெட்ல உக்கார்ந்துடுவேன். அதைவிட முக்கியமா எந்தக் கடைக்குப் போகலாம், என்ன வாங்கலாம்ன்னுதான் யோசிப்பேன்.
சின்னத்திரை நடிகைகளில் யாருடைய நடிப்பு பேசப்படுகிறது என்று நினைக்கிறீர்கள்?
நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக சின்னத்திரையில் தேவிப்ரியாவோட நடிப்பு ரொம்ப நல்லா இருக்கும்னு ஒரு பேர் இருக்கு. என்ன கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறிடுவாங்க.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...