மிக்கி மவுஸþக்குப் பதிலாக ஜடாயு!

மனிதன் உழைக்கும் மிருகமாக மாறியது முதலே, ஓய்வும் பொழுது போக்கும் தேவைப்பட ஆரம்பித்தது. தீம் பார்க் கலாசாரம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டா டிக் களிக்கும் களமாக இ

மனிதன் உழைக்கும் மிருகமாக மாறியது முதலே, ஓய்வும் பொழுது போக்கும் தேவைப்பட ஆரம்பித்தது. தீம் பார்க் கலாசாரம் இந்தியாவில் பரவத் தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டா டிக் களிக்கும் களமாக இருக்கின்றன இவை.



ஆனால், நம் நாட்டில் உள்ள தீம் பார்க்குகள் மேற்கத் திய கலாசாரத்தின் அடிப்படையில் அமைந்த டொனால்ட்டக், மிக்கி மௌஸ் போன்றவற்றை அடிப்படை யாக வைத்து ஏற்படுத்தப்பட்டவையா கும். அவற்றில் இந்தியத் தன்மை இருப்பதில்லை. நம் பண் பாட்டையும் ஆன்மிக உணர்வையும் உட்க ருத்தாகக் கொண்டு இதுவரை எவ்வித தீம் பார்க்கும் அமைக்கப்பட வில்லை.

நம்முடைய இதிகாசங்களில் இருந்தும், பண் டைய சம்பிரதாயங்களில் இருந்தும் உயரிய கருத் துகளை குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் அவர்களது உள்ளத்தில் உயர்ந்த பண்புகளை வளர்க்க முடியும்.

சமய வாழ்க்கையே, இந்தியாவின் முதுகெலும்பு என சுவாமி விவேகானந்தர் கூறினார். அது போல, இராமாயணமும் மகாபாரத மும் மக்களுக்கு உயர்ந்த கருத்துக்களை வாரி வழங்கி வருகிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.இதைக் கருத் தில் கொண்டு கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் இராமகி ருஷ்ண மிஷன் வித்யாலய வளாகத்தில் இனறைய தலைமுறையினர் நல்ல நெறிமுறைகளை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் சிறுவர்களுக்காக முக்கால் ஏக்கர் பரப்பளவில் இராமாயணா தீம்பார்க் கடந்த டிசம்பர் 27}ம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது.

மடத்தின் செயலர் ஆத்மராமானந்தா நம்மிடம் பேசியதிலிருந்து...

""பொதுவாகவே, இராமாயண வரலாறு கேட்பதற்கு இனிமையானது. பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர்கள் இந்த வரலாற்றை பாடல் களாகப் பாடி வரு கின்றனர்.

இறைவன், குடும்பம், சமுதாயம் மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்ற மனிதனது நால்வகை அறநெறிகளையே ராமபிரானின் வாழ்க்கை எடுத் துக் காட்டுகிறது.

ஒவ் வொரு மனித னும் நற்பண்புகள் உடையவராக வும், பெற்றோ ருக்கு கீழ்படிபவராக வும், சகோதரர்களுடன் ஒற்றுமையுட னும் இருக்க வேண் டும் என்பதை யும் இது எடுத்து ரைக்கிறது.

இராமாயணத் தில் உள்ள கருத்துகளை முறையாகத் தன்னு டைய வாழ் வில் பின்பற் றும் ஒவ்வொருவரு டைய வாழ்க்கை யும் வாழும் இராமாயணமாகக் கருத லாம் என்பதை  இந்தத் தீம் பார்க் கில் உள்ள உருவங்கள் உணர்த்து கின்றன.

மேலும், இராமாயணம், மகாபாரதத் தில் இடம்பெ றும் கதா பாத்திரங்க ளும், நிகழ்ச்சிகளும் கண்ணைக் கவரும் விதமாக உருவாக்கப்பட் டுள்ளன. சில நிகழ்ச்சிகளும், கதா பாத்திரங்களும் வழிநெடுகி லும் அமைக்கப்பட் டுள்ளன. சிரவணன் கதை, கட லில் உள்ள ஆதி சேஷசன், ராமன் தனுசு வில்லை ஒடித்தல், லட்சுமணன் கோடு, பொன்மான் உருவத் தில் உள்ள மாரீசனை வதம் செய்தல், கழுகுக ளின் அரசனான ஜடாயு பறவை, ராம, லட்சுமணர்களை தன்னுடைய கைகளில் பிடித்துக் கொண்ட ஒரே ஒரு கண்ணை உடைய கபந்தன் என்ற அரக்கன், வாலி, சுக்ரீவன் சண்டையிடுதல், ரிஷி முக மலை, சுரசா என்ற அரக்கி யின் பிரம் மாண்ட வாயி லில் அனுமன் புகுதல் போன்ற சம்பவங்கள் தொடர் பான உருவங்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

அவற் றில், சிறுவர்கள் விளையா டும் வகை யில் ஊஞ்சல், மினி டிரக், படகு இறக்கைகளில் பறத்தல், சறுக்கு ஆகிய விளையாட்டு கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன. பார்க்கில் நுழைந்த உடனே, இதிகாசங்களின் கதை வரிசையாகப் படைக்கப்பட்டி ருப்பதை உணரலாம். இந்தப் பார்க்கில், இராமாயணத் தில் இருந்து 21 சம்பவங்கள் எடுத்துக் கூறப்பட் டுள்ளன. இவை சில கதாபாத்திரங்கள் மூலம் எடுத் துக் காட்டப்பட் டுள்ளன.

குறிப் பாக, குழந்தைகளி டையே இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகை யில் இந்த தீம்பார்க் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை உள்ளே சென்று வந்தால் மீண்டும், மீண்டும் பார்க்கத் தூண்டும் வகை யில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. கொண் டாட்டத்துக் குக் கொணடாட்டமாகவும் பண்பாட் டுப் படிப்பினையாகவும் இதை உருவாக்கியிருக்கி றோம். இத்தனைக்கும் இந்த தீம்பார்க் கொண்டாட்டம் மக்களுக்கு இலவசம்தான்'' என்றôர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com