

உ லகம் முழுவ தும் 4500 வகை நண்டுகள் இருப்பி னும் இந்தியா வில் மட் டும் 700 வகை நண்டு இனங்கள் இருக் கின்றன. இதில் ஆறு அல்லது ஏழு ரகங்கள் மட் டுமே சாப் பிட உகந்த தாக இருக்கி ன்றன. அதி லும் குறிப் பாக களிநண்டுக ளின் சதை அதிகமாக வும், சுவையாக வும், மிருதுவாக வும் இருப்ப தால் அதை அதிக விலை கொடுத் தும் வாங்க யாரும் தயங்குவ தில்லை.
இவ்வகை நண்டுக ளின் இருப்பிடம், இனப்பெ ருக்கம், உணவு முறைகள், மருத்துவக் குணங்கள், சிறப்புகள் குறித்து பரங் கிப் பேட்டை கடல் உயிரியல் உய ராய்வு மையத் தின் பேரா சிரியர் எஸ்.ரவிச்சந்திரன் கூறி னார்...
""கட லில் சதுப்பு நிலங் க ளில் களிமண் நிறைந்த இடங்கள்,ஆறுக ளில் களிமண் அதிகம் உள்ள பகுதிகளி லும் இவை அதிகம் இருப்ப தால் களிநண்டு என அழைக்கப்படுகின்றன.
முக்கண் நண்டு, நீல நண்டு போன்ற நண்டு இனங்க ளில் பெரும்பாலானவை பிடித்த சிறிது நேரத் தில் இறந்துவி டும் தன்மையுடையன. ஆனால் களிநண்டு ஒரு வாரம் வரை கூட உயி ரோடு இருக்கிறது என்ப தால் சிங்கப் பூர்,மலே சியா உள் ளிட்ட வெளிநாடுகள் பலவற் றிற்கு உயிருடன் ஏற்றுமதி ஆகின்றது.
இதன் சதை யும் மிகச்சுவை யாக இருப்ப தால் இவ்வினங்கள் மிகுந்த பொருளா தார முக்கியத்துவம் பெற்று விட்டன. கட லில் களி மண் நிறைந்த பகுதிக ளில் உள்ள தாவரங்க ளில் வசிக் கும் உயிரினங்கள், சிறுநண்டுகள், சிப்பி வகைகள் போன்ற வையே இவற்றின் மெனு கார் டில் இருக் கும் அசைவ அயிட்டங்கள்.
பெரிய நண்டுகள் கட லுக் குள் வசிக் கும் போது ஆறும் கட லும் சேரும் பகுதி வழி யாக ஆற் றுப்பகு திக்கு வந்து அங்கு முட்டை யிட்டு குஞ்சுகள் உருவானவுடன் மீண் டும் கட லுக் குள் வந்து விடு கின் றன. பெரும்பா லும் கடற்க ரைப் பகு திக்கு விசிட் அடிப்ப தில்லை என்றா லும் நிலத்தி லும் வாக் கிங் போகும்.
மழை பெய்து முடி யும் காலங்க ளில் தான் இதன் இனப்பெ ருக்கம் அதிகமாகிறது.மழை பெய்து முடிந்த பிறகு கட லில் கலக் கும் நீரில் உண வுப் பொருட்கள் அதிக மாக கிடைப்பதா லும் இவை அதிக மாக பெருகி விடு கின்றன. எதிரிகளிடமி ருந்து தப் பிக்க பாது காப் பான இடம் என்பதா லும், உணவுகள் அதிக மாக கிடைக்கிறது என்பதா லும் களிமண் நிறைந்த பகுதிக ளில் வசிக்கிறது.
இந்த நண் டின் கால்களை கையில் பிடித் தால் நாம் எந்தக் காலைப் பிடிக்கி றோமோ அதை மட் டும் தனது உட லில் இருந்து உடைத்து விடு வித் துக் கொண்டு நம் மிடம் இருந்து தப்பி ஓடிவி டும். இதன் உடைந்த காலும் மீண் டும் வளர்ந்து விடும். ஆண், பெண் என இரு பாலினங்கள் இருப்பி னும் சில்லா டிரெங்கு பிரிக்கா, சில்லா செரேட்டா என இரு வகைகள் தான் இவ்வினங்க ளில் மிக அதிக மாக இந்தியக் கடல் எல்லை யில் கிடைக் கின்றன.
பத்து கால்களை யும் வைத் துக் கொண்டு பக்க வாட் டில் நடக் கும் இந்த உயிரினத் துக்கு முதல் இரு கால்கள் மட் டும் துடுப்பு போன்று நீச்ச லுக்கு பேருதவி யாக இருக் கின்றன.குறைந்த கொழுப் புச் சத் தும்,அதிக புரதச்சத் தும் உடையது. ஆஸ் துமா, சளி, மூளைக் காய்ச்சல் போன்ற நோய்க ளுக்கு அற் புத மருந்து.
இதன் மேற் புற ஓடுக ளைக் கழற்றுதலே வளர்ச்சி யின் அறி குறி. புதிய ஓடுகள் பழைய ஓடுக ளின் அடி யில் உரு வான பின் பழைய ஓடுகளைப் பாம்பு சட் டையை கழற்றுவது போல இது வும் அடிக்கடி உடை மாற் றும் விநோத உயிரினம்'' என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.