நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெரிய திரை சின்ன பயம்!

"இளவரசி', "அனுபல்லவி'  தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ரீவித்யா. இவரை இப்படி அறிமுகப்படுத்துவதைவிட "செல்லமே' தொடரில் கேன்டீனில் மருந்து குடித்து மயக்கமாகி செல்லம்மாவால் காப்பாற்றப்படுபவர் என்று

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:05 pm

ஸ்ரீதேவி குமரேசன

"இ ளவரசி', "அனுபல்லவி'  தொடர்களில் நடித்துக் கொண்டிருப்பவர் ஸ்ரீவித்யா. இவரை இப்படி அறிமுகப்படுத்துவதைவிட "செல்லமே'

தொடரில் கேன்டீனில் மருந்து குடித்து மயக்கமாகி செல்லம்மாவால் காப்பாற்றப்படுபவர் என்று கூறினால் உடனே நினைவுக்கு வந்துவிடும். ஒரு சில சீன்களே என்றாலும் ரசிகர்கள் மனதில் நன்கு பரிச்சயம் ஆனவர். அவரை "அனுபல்லவி' தொடரின் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தோம்.

* உங்களைப் பற்றி?

நான் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். என் அப்பா சினிமா பீல்டில் ஸ்டண்ட் அஸிஸ்டெண்ட்டா இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்குப் பிறகு நான் சினிமாத் துறைக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. கிளாசிக்கல் டான்ஸ் கற்றுக் கொண்டிருக்கிறேன். 

* உங்கள் அப்பா சினிமா துறையில் இருந்ததால் நீங்கள் இந்தத் துறையைத் தேர்தெடுத்தீர்களா?

அப்பா இருந்ததனால இந்தத் துறைக்கு வரணும் என்று நினைத்ததில்லை. அப்படி நினைத்திருந்தால் இன்னும் முன்பே வந்திருப்பேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே நிறைய வாய்ப்புகள் வந்தன. அப்போது எல்லாம் எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை வரவில்லை. அதன்பிறகு பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு விடுமுறையில் இருக்கும் போது  மறுபடியும் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. என்னை தேடி அடிக்கடி வாய்ப்பு வந்து கொண்டு இருந்ததால் இதுதான் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார் என்று முடிவெடுத்து இந்தத் துறைக்கு வந்துவிட்டேன்.

* என்ன தொடர்கள் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

"இளவரசி' தொடரில் கவிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கெண்டிருக்கிறேன்.  "திருப்பாவை'யைத் தொடர்ந்து அபிநயா கிரியேஷன்ஸின் தயாரிக்கும் "அனுபல்லவி'  தொடரிலும் நடிக்கிறேன். "இளவரசி' தொடரில் நெகடீவ் கேரக்டர் நடிப்பதனால் நிறைய ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அது எனக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. பாஸிடீவ்வான கேரக்டர்களைவிட நெகடீவ் கேரக்டர்களுக்கு நிறைய வரவேற்பு கிடைக்

கின்றன. 

* பெரியதிரையில்  நடிக்கும் எண்ணம் உண்டா வாய்ப்புகள் வருகிறதா?

சின்னத்திரையைவிட பெரியதிரையில் இருந்துதான் நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஆனால் சின்னத்திரையே  எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இங்கே ஒரு குடும்பம் போன்று பழகுவது பிடித்திருக்கிறது. அது எனக்கு வசதியாகவும் இருக்கிறது. பெரியதிரையில் எப்படியிருக்கும் என்று ஒரு சின்ன பயம் இருக்கிறது. அதனால் அந்தப் பக்கம் போகாமல் இருக்கிறேன். 

* உங்கள்  நடிப்பைப் பார்த்து நண்பர்கள் என்ன சொல்லுவார்கள்?

என்  நண்பர்களும் சரி, என் வீட்டில் உள்ளவர்களும் சரி இதுவரை பிடிக்கவில்லை என்று எதையும் சொன்னதில்லை. என் நடிப்பைப் பார்த்துப் பாராட்டி என்கரேஜ் பண்ணுவார்கள். அம்மா மட்டும் சில நேரங்களில் இந்த சீன் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்திருக்கலாம் என்று சொல்லுவார்கள்.

* பொதுவாக சினிமா துறையைப் பொருத்தவரை ஒரு பெண்ணாக சாதிப்பதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்கிறார்களே அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சினிமா துறை மட்டும் இல்லை. எந்தத் துறையாக இருந்தாலும் சாதிப்பதற்கு நிறைய  போராட வேண்டும். ஆபிஸ் போகிற பெண்ணாக இருந்தாலும்கூட புரோமோஷன் எல்லாம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு உழைப்பும், போராட்டமும்  இருந்தால்தான் அவர்களால் வெற்றி பெற முடியும். அது மாதிரிதான் இந்தத் துறையும். நாம் நடந்து கொள்கிற முறையில்தான் எல்லாமே இருக்கிறது. நாம் மரியாதையாக நடந்து கொண்டால் மற்றவர்களும் நம்மிடம் மரியாதையாகத்தான் பழகுவார்கள். அதைவிட்டு நாம் எதிர்த்து நின்றால் அவர்களும் எதிர்த்து நிற்பார்கள்.

* நீங்கள் நடித்த தொடர்களைப் பார்க்க நேரம் கிடைக்குமா?

நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் தொடர்களைப் பார்ப்பேன். ஆரம்பத்தில் என்னை டிவியில் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இப்போது அந்த ஆர்வம் குறைந்துவிட்டது. சில சமயங்களில் இந்த சீன்ல இப்படி செய்திருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.