லீலாவாக நடித்தால் டபுள் எனர்ஜி!
சன் தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "இளவரசி' தொடரில் சந்தோஷியின் தங்கையாக வந்து துறுதுறு வென்று அனைவரையும் கலாட்டா செய்யும் ஸ்ரீதேவியைக் கொளுத்தும் அக்னி வெயிலின் உச்சி வேளையில், மத


சன் தொலைக்காட்சியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் "இளவரசி' தொடரில் சந்தோஷியின் தங்கையாக வந்து துறுதுறு வென்று அனைவரையும் கலாட்டா செய்யும் ஸ்ரீதேவியைக் கொளுத்தும் அக்னி வெயிலின் உச்சி வேளையில், மதிய உணவு இடைவேளையில் சந்தித்தோம். இதோ அவரின் ஜிலீர்
பதில்கள்...
உங்களை பற்றி?
என்னை ஸ்ரீதேவி என்பதைவிட லீலா என்றால்தான் நிறைய பேருக்கு தெரியும். நான் எங்க வீட்டுக்கு ஒரே பெண். அப்பா செல்வராஜ் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறார், அம்மா ரூபா பழைய நடிகை. இருபது வருடங்களுக்கு முன்பு நடித்து கொண்டிருந்தார்கள். அப்போது டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்தார்கள். இப்போழுது நடிப்பதில்லை. நான் எம்.பி.ஏ. முடிச்சிட்டு, இப்போ எம்.எஸ்.சி சைக்காலஜியை அஞ்சல் வழியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
"இளவரசி' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
"இளவரசி" தொடரில் நான் லீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் கதையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் அது. இதற்கு முன்பு நான் ஒன்று, இரண்டு தொடர்கள் நடித்திருந்தாலும்.
"இளவரசி'யில் லீலாவாக வந்த பிறகுதான் மக்கள் மனதில் நல்ல அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அந்தத் தொடரின் இயக்குநர் சந்தானத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் ரொம்ப உற்சாகத்துடன் நடிக்கும் தொடர் அது. என் நிஜ சுபாவத்துக்கும் அந்தத் தொடருக்கும் சம்பந்தமே கிடையாது.
நான் வீட்டில் எப்பவுமே ரொம்ப அமைதியாக இருப்பேன். ஆனால் தொடரில் துறுதுறுன்னு இருப்பது போன்று வரும். லீலாவாக ஸ்பாட்டில் வந்து நின்றுவிட்டால் டபுள் எனர்ஜி கிடைத்தது போன்று ஆகிவிடும்.
வேறு என்ன தொடர்கள் நடித்துக் கொண்டிருக்
கிறீர்கள்?
"தங்கம்' தொடரில் ரம்யா அக்காவோட தங்கையாக நடித்துக் கொண்டிருக்கிறேன். "இளவரசி'யை காட்டிலும் "தங்கம்' தொடர் எனக்கு இன்னும் அதிக பப்ளிசிட்டியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அடுத்து பாலிமர் சேனலில் ஒளிபரப்பாகும் "முன்று முகம்' என்ற தொடரில் முன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன். இதற்கு முன்பு "கஸ்தூரி' தொடரிலும், ராடன் மீடியா தெலுங்கில் எடுத்த "அம்மாயிக்கா புரம்' என்ற தொடர்களிலும் நடித்து உள்ளேன்.
பெரியதிரையில் நடிக்கும் எண்ணம் உண்டா?
பெரியதிரையில் நடிக்க ஆர்வம் நிறைய இருக்கிறது. ஆனால் ரொம்ப நல்ல ரோல் அல்லது தங்கை கேரக்டர் இது மாதிரியான கதாபாத்திரங்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். "புதுக்கோட்டையில் இருந்து சரவணன்" என்ற படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருந்தேன்.
என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் நடிக்க விரும்புவீர்கள்?
ரொம்ப அப்பாவியாக நடிக்க வேண்டும். நெகட்டீவ் ரோலும் செய்ய ஆசையிருக்கிறது. இப்போதெல்லாம் கதையில் வரும் நாயகி கேரக்டருக்கு எந்தளவுக்கு ரீச் இருக்கிறதோ அதைவிட அதிகமாக அதில் வரும் நெகட்டீவ் கதாபாத்திரங்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கிறது. "செல்லமடி நீ எனக்கு' என்ற தொடரில் ஒரு பைத்தியமாக நடித்திருந்தேன். அதிலும் எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது.
சின்னத்திரை நடிகர், நடிகைகளைக் கௌரவிக்கும் விதத்தில் சமீபத்தில் நடைபெற்ற சன் குடும்ப விருது வழங்கும் விழாவைப் பற்றி என்ன நினைக்
கிறீர்கள்?
இந்த மாதிரி விருதுகள் அறிவித்து வழங்கும் போது அதை உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் பார்த்து ரசிக்கிறார்கள் என்றபொழுது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
அதே சமயத்தில் அடுத்த வருடம் எப்படியாவது நாமும் இந்த விருதை வாங்கிவிட வேண்டும் என்ற ஆர்வமும், போட்டியும் சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமாகியுள்ளது. இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்.
இது நடிகர்களிடம் மட்டுமல்லாமல் டைரக்டர்கள், புரொடியூசர்கள், டெக்னீஷியன்கள் என எல்லோரிடமும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. எனப் படித்த நீங்கள் நடிப்பைத் தேர்தெடுத்ததன் நோக்கம் என்ன?
என் அம்மாவுக்கு என்னை நடிக்கவைக்க வேண்டும் என்ற ஆசை நிறைய இருந்தது. எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அந்த நேரத்தில்தான் தெலுங்கு தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு தானாகவே தேடி வந்தது.
தேடி வருகிற வாய்ப்பை தொலைத்துவிடக் கூடாதுன்னு அந்தத் தொடரில் நடிக்க ஆரம்பித்தேன். அதை தொடர்ந்து "செல்லமடி நீ எனக்கு' என்ற தமிழ் தொடரின் வாய்ப்பு வந்தது. அப்படியே தமிழ் பக்கம் வந்துவிட்டேன்.
நீங்கள் நடிக்க வராவிட்டால் எந்தத் துறையைத் தேர்தெடுத்திருப்பீர்கள்?
எனக்கு பியூச்சர்ல சைக்கார்ட்டிஸ்டாக வர வேண்டும் என்ற ஆசை நிறைய இருக்கிறது. அதற்காகத்தான் அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதை தவிர அனிமேஷன் கற்றுக் கொண்டு கிராபிக்ஸ் செய்ய வேண்டும் என்ற
ஆசையும் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...