என் பெயர் அமுதா!
தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியவர் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்றபோது நார்மலாக ஒரு பொண்ணுக்கு என்ன கோபம்...


செ ன்னையில் உள்ள திரிசூலம் மலையில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் "என் பெயர் மீனாட்சி' தொடரின் படப்பிடிப்பில், ஒரு காட்சியில் நாயகி மீனாட்சிக்கு எதிராக நடித்துக் கொண்டிருந்த அமுதாவை (ப்ரியா) சந்தித்து உரையாடினோம்.
"என் பெயர் மீனாட்சி' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி?
இது நான் நடிக்கும் முதல் தொடர். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரின் நாயகியாக நடிப்பதற்குத்தான் ஆடிஷனுக்குப் போனேன். ஆனால் அதில் நான் தேர்வாகவில்லை. அதன் பிறகு தான், டைரக்டர் ஜெரால்ட் ஸôர் என்னைக் கூப்பிட்டு, ஹீரோயினுக்கு எதிரான கதாபாத்திரம் நல்ல முக்கியத்துவமுள்ள ரோல் இருக்கு. அதை நீங்கள் செய்யுங்கள் என்றார். முதலில் எனக்கு நெகட்டீவ் ரோல் என்றதும் அது சரியாக வருமா என யோசித்தேன். நான் நிஜத்தில் ரொம்ப மென்மையானவள். அதற்கு அப்படியே எதிரான கேரக்டர் என்றபோது என்னால் செய்ய முடியுமா எனக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. உங்களால் முடியும் முயற்சி செய்யுங்கள் என்று டைரக்டர்தான் உற்சாகப்படுத்தினார். அதன் பிறகுதான் ஒப்புக் கொண்டேன்.
தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டியவர் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்றபோது நார்மலாக ஒரு பொண்ணுக்கு என்ன கோபம் வருமோ அந்த மாதிரியான கேரக்டர். நிறைய காட்சியில் அமுதாவாகவே மாறி நிஜமாக அழுதிருக்கிறேன். ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக என்னவேண்டுமானாலும் செய்வாள் அமுதா என்கிற மாதிரியான கேரக்டர். இப்பொழுது என் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
தொகுப்பாளினிக்கும் நடிகைக்கும் என்ன வித்தியாசத்தை உணர்ந்தீர்கள்?
காம்பெயரிங் செய்வதைப் பொருத்தவரை ப்ரியா டேக் என்று சொன்னதும் நான் பேச ஆரம்பித்துவிடுவேன். அதோடு ஸ்டாப் என்று சொல்லும்வரை பேசிக் கொண்டே இருப்பேன். ஆனால் தொடரைப் பொருத்தவரை அப்படியில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை பேச வேண்டும். எனக்கு முதலில் கொடுத்த டயலாக் என்ன தெரியுமா? ஓர் இடத்தில் ஹீரோ நின்று பேசிக்கிட்டு இருப்பாரு. அவருக்குப் பின்னாடி நான் திரும்பி நின்றிருப்பேன். இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் பார்க்காமல் மோதிக் கொள்வது போன்ற சீன்.அப்போ நான் ஹீரோவிடம் என்னை நினைச்சியா என்று கேட்க வேண்டும். இதுதான் என் முதல் காட்சி. அதில் கோபம், காதல், ஆசை, அதிர்ச்சி என எல்லாவிதமான பாவமும் இருக்க வேண்டும். ஒவ்வொரு சீனையும் இப்படி ஃபீல் செய்து அனுபவித்து செய்ய வேண்டும். இது தான் தொகுப்பாளினிக்கும் நடிகைக்கும் உள்ள வித்தியாசம்.
நடிப்பின் மீது ஆர்வமாக இருக்கும் உங்களுக்குப் பெரியதிரை பக்கம் போகிற எண்ணம் உண்டா?
சினிமாவில் இப்பொழுது ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. கரு.பழனியப்பன் இயக்கும் "மந்திர புன்னகை' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் க்ளைமாக்ஸில் வருகிறேன். இந்தக் கதாபாத்திரமும் எனக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை வாங்கித் தரும் என்று நினைக்கிறேன்.
பெரியதிரையில் நடிப்பதற்கும் சின்னதிரையில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
பெரியதிரையில் நிறைய ஹீரோயின்ஸ் வருகிறார்கள். அதில் சிலர் வந்த இடமே தெரியாமற் போய்விடுகிறார்கள். சின்னதிரையில் நடித்தால் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் நிற்கிறது.
நிகழ்ச்சித் தொகுப்பு, நடிப்பு, மற்றும்..?
முதன் முதலில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் "ஹலோ நான் அதிர்ஷ்ட லஷ்மி' என்ற நிகழ்ச்சிக்குத்தான் தொகுப்பாளினியாக வந்தேன். அதன் பிறகு கேப்டன் டிவியில் "வணக்கம் சென்னை' என்ற நிகழ்ச்சியில் சின்ன போர்ஷன் செய்தேன். இப்போது அதில் வருவதில்லை. ஆனால் "மிஸ் அண்ட் மிஸ்டர் கலாட்டா' என்று கேப்டன் டிவியில் ஞாயிறு இரவு 8-9 வரை வரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன்.
இதை தவிர சூரியன் எப்.எம்.மில் ரேடியோ ஜாக்கியாகவும் பணியாற்றியுள்ளேன். "காதல் காதல் ப்ரியா' எனும் நிகழ்ச்சியும் இன்னும் சில நிகழ்ச்சிகளும் வழங்கியிருக்கிறேன். அதன்பிறகு சமயம் கிடைக்கும்பொழுது டப்பிங் குரல் கொடுப்பேன். சமீபத்தில் எழுத்தாளர் பாலகுமரனின் மகன் இயக்கிய "ஃபேர் அன்ட் லவ்லி' என்ற குறும்படத்தில் நாயகியாக நடித்திருந்தேன். விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். குரல் கொடுத்திருக்கிறேன்.
உங்கள் குடும்பம்?
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டிகிரி படித்திருக்கிறேன், நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அதனால் பியூட்டி ஃபுல் என்று ஒரு சின்னதா நாட்டியப்பள்ளி வைத்து நடத்திவருகிறேன். என் அப்பா ஸ்ரீதர், அம்மா சுதா, அண்ணன் விஜய். இதுதான் எங்கள் பேமிலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...