
தேவையான பொருட்கள்: மாவிலை(தளிராக) - 10, மிளகாய் வற்றல் - 5, புளி - 1 உருண்டை, உப்பு - தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு
செய்முறை: மாந்தளிரை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றலை வறுத்து மாவிலை போட்டு வதக்கி எடுத்து புளி, உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். கடுகு, உளுத்தம் பருப்பை எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து இதனுடன் கடைசியில் சேர்த்து அரைத்து எடுத்தால் மாவிலைத் துவையல் நன்றாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.