காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாராட்டுகளின் பின்னணியில்..!

சன் டிவியில் இரவு 8.00 மணிக்கு ஒளிபரப்பாகும் "திருமதி செல்வம்' தொடரில் அப்பாவி ரேவதியாக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஸ்வப்னாவை சந்தித்து உரையாடினோம். உங்களைப் பற்றி? எனக்கு தாய் மொழி தெலுங்கு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:06 pm

ஸ்ரீதேவி குமரேசன

சன் டிவியில் இரவு 8.00 மணிக்கு

ஒளிபரப்பாகும் "திருமதி செல்வம்'

தொடரில் அப்பாவி ரேவதியாக வந்து

ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த

ஸ்வப்னாவை சந்தித்து உரையாடினோம்.



உங்களைப் பற்றி?

எனக்கு தாய் மொழி தெலுங்கு. சிறுவயதிலேயே சென்னையில்  வந்து செட்டில் ஆகிவிட்டோம். எங்கள் வீட்டில் அம்மா, அப்பா நான் மட்டும்தான். ஒரு அண்ணன் இருந்தார் அவர் சில வருடத்திற்கு முன்பு ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அப்பா பிசினஸ் மேனாக இருக்கிறார்.

சின்னதிரையில் எப்படி வாய்ப்பு கிடைத்தது?

ப்ளஸ்  டூ முடித்ததுமே தொடர்களில் நடிக்க வந்துவிட்டேன். எங்கள் குடும்ப நண்பர், ஒருவர் மூலமாக தெலுங்கு தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் நிறைய தெலுங்கு தொடரில் நடித்திருக்கிறேன்.

அப்போதுதான் ராடன் மீடியாவில் "சூர்யவம்சம்' தொடர் நடித்தேன். அதைத் தொடர்ந்து "திருமதி செல்வம்' தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதனால் தமிழ் தொடர் பக்கம் வந்துவிட்டேன்.

"திருமதி செல்வம்' தொடரில் நடிக்கும்

அனுபவம் பற்றி?

ஒரு பெரிய  ரோல், பெரிய கேரக்டர், மெகா தொடர் என்றால் அது "திருமதி செல்வம்' தொடர். காலையில் ஸ்பாட்டுக்குப் போனால் டைரக்டர் என்ன சொல்கிறாரோ அப்படி நடித்துக் கொடுத்துவிட்டு மாலை வீட்டுக்கு வந்துவிடுவேன். ஒரு ஆபிஸýக்குச் சென்று வேலை செய்வது போலத்தான் தோன்றும்.  

சின்ன வயதில் இருந்து  எங்கள் வீட்டில் தெலுங்கிலேயே பேசியதால். எனக்குத் தமிழ் அவ்வளவாகப் பேச வராது. அதனால ஷாட்டின் போது நிறைய டேக் போகும். ஆனால் டைரக்டரில் இருந்து சஞ்சய், கௌதமி மேடம், ராமசந்திரன் ஸôர், டிங்கு என எல்லோருமே எனக்கு தமிழ் சொல்லி கொடுத்து ரொம்ப சப்போர்டீவ்வா இருப்பார்கள்.   

மொழி பிரச்னையை எப்படி சமாளிக்கிறீர்கள்?

இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் பேச கற்றுக் கெள்கிறேன். திரையில் நான் பேசுவதில்லை. யமுனா என்கிற டப்பிங் ஆர்ட்டிஸ்ட்தான் எனக்குக் குரல் கொடுக்கிறார்கள். என் குரல் எப்படியிருக்குமோ அப்படியே அச்சுப் பிசகாமல் ரொம்ப நல்லா பேசுவாங்க.

தமிழில் நீங்கள் நடித்த முதல் தொடர் எது?

ராஜ்  டிவியில் "கௌரவம்' என்ற தொடரில்தான் முதன்முதலில் நடித்தேன். அதன்பிறகு தான் "சூர்ய வம்சம்' நடித்தேன். அதையடுத்துதான் "திருமதி செல்வம்'.  

பெரியதிரையில் இருந்து வாய்ப்புகள் வருகின்றனவா?

வாய்ப்புகள் நிறைய வருகின்றன. ஆனால் எங்கள் வீட்டில் சின்னதிரையே போதும் என்று சொல்லிவிட்டார்கள். பெரியதிரையில் நடித்தால் அடிக்கடி அவுட்டோர் ஷூட்டிங் எல்லாம் போக வேண்டியிருக்கும். ஏற்கனவே அண்ணன் விபத்தில் இறந்துவிட்டதால் என்னை வெளியே அனுப்பப் பயப்படுகிறார்கள். ஆனால் ஒரு நல்ல கேரக்டராக வந்தால் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

வேறு என்ன தொடர்களில் நடிக்கிறீர்கள்?

கலைஞர் டிவியில் "உயிரின் நிறம் ஊதா' என்ற தொடரில் காலேஜ் படிக்கும் பெண்ணாக  நடித்து வருகிறேன். இதை தவிர சன் டிவியிலேயே காலையில் ஒளிப்பரப்பாகும் "மகள்' என்ற தொடரிலும் நடித்து வருகிறேன். அதில் கொஞ்சம் நெகடீவ்வான ரோல் நடிக்கிறேன். இது போன்று நெகடீவ் ரோல் செய்வது எனக்குப் ரொம்ப பிடித்திருக்கிறது.  

ரசிகர்களிடையே வரவேற்பு எப்படி

இருக்கிறது?

எங்கே வெளியே போனாலும் ரேவதி, ரேவதி என்று "திருமதி செல்வம்' கேரக்டரை சொல்லித்தான் கூப்பிடுகிறார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்துவிடுவார்கள். "டிங்கு ஏன் அப்படியிருக்கிறார். உங்க அப்பா ஏங்க இப்படி கஞ்ச பிசினாரியா இருக்கார்.

அவர் மீது கோவம் வரவில்லையா' என்றெல்லாம் கேட்பார்கள்.  நான் செட்ல வந்து  டிங்கு, ராஜமோகன் சார்கிட்ட எல்லாம் "உங்களை ரசிகர்கள் பயங்கரமாகத் திட்டுகிறார்கள் ஸôர்' என்று சொல்வேன். அதற்கு டிங்கு "நாங்கள் அப்படி நடிப்பதனாலதான் உங்களுக்குப் பாராட்டு கிடைக்கிறது' என்று சொல்வார்.

அவர்களுக்கும், இது போன்ற ஒரு வாய்ப்பு எனக்குக் கொடுத்த டைரக்டருக்கும் இந்த நேரத்தில நன்றி சொல்ல நினைக்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.