என் வீட்டு டிவியைக் கேட்டுப் பார்!
ஜா', "வானமே எல்லை', "ஜென்டில்மேன்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதுபாலா. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயா டிவியில் "செüந்தரவல்லி' தொடரின


ஜா', "வானமே எல்லை', "ஜென்டில்மேன்' போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மதுபாலா.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு
ஜெயா டிவியில் "செüந்தரவல்லி' தொடரின் மூலம் சின்னதிரைக்கு வந்திருக்கிறார்.
அவரோடு பேசினோம். எல்லாக்
கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டு,
இனிமையாகப் பேசினார்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்ன
திரையில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்
கிறது?
சிறிது இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் நடிப்பு என்பது ஒன்றுதானே. சின்னதிரைக்கும் பெரியதிரைக்கும் திரைதான் வெவ்வேறே தவிர மற்றபடி எல்லாமே ஒன்றுதான். நீண்ட நாளைக்குப் பிறகு மேக்-அப் போட்டபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இழந்த ஒன்றைப் பெற்றது போன்று இருந்தது.
"சௌந்தரவல்லி'யில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்களே?
சௌந்தரவல்லி தொடரில் எனக்குத் தாசி கதாபாத்திரம். சுதாசந்திரன், மகேஸ்வரி எல்லாம் அக்ரஹாரத்துப் பெண்களாக நடிக்கிறார்கள். ஒரு கிராமத்தோட சரித்திரம் இந்தக் கதையில் இருக்கிறது. பருவ வயதில் ஊரைவிட்டுப் போன ஒரு பெண். நீண்ட காலத்துக்குப் பிறகு திரும்பவும் ஊருக்குள் வந்து பழிவாங்கத் துடிக்கிறாள். நியாயத்துக்காகப் போராடுகிறாள். ஐயர் குடும்பத்துப் பெண்களை எதிர்த்துப் போராடும் தாசி பெண்தான் சௌந்தரவல்லி.
இந்தித் தொடர்களில் நடிக்காமல் தமிழில் நடிக்க வந்தது ஏன்?
மும்பையிலேயே ஏதாவது இந்தி தொடர்கள் நடிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்த போது தான் பிரபுநேபால் இந்தக் கதைகயைப் பற்றி சொன்னார். அங்கிருந்து சென்னை வந்து நடித்துவிட்டுப் போக வேண்டும் என்றால், சரியா வருமா என்று நினைத்து முதலில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால் பிரபு நேபால் என்னை வந்து சந்தித்து, இந்தக் கதாபாத்திரத்தைப் பற்றி விரிவாகச் சொன்னார்.
என்னை அந்தக் கதாபாத்திரமாகவே கம்ப்யூட்டரில் சித்தரித்துக் காண்பித்தார். அதைப் பார்த்தபொழுது வித்தியாசமாக இருந்தது. அவருடைய ஆர்வத்தைப் பார்த்தபொழுது கண்டிப்பாக என் கதாபாத்திரம் பேசும் படியாக இருக்கும் என்று தோன்றியது. அதில் ஏற்பட்ட ஆசையினால்தான் இந்தி தொடர்களில் நடிக்க நேரம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த நான், இந்தக் கதை மேல் உள்ள ஆர்வத்தினால் இப்பொழுது சென்னைக்கு வந்து நடித்துவிட்டு போகிறேன்.
இந்திப் படங்களில் நடிக்கிறீர்களா?
இரண்டு படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். "டெல் மீ யுகுதா' என்ற ஹேமாமாலினியோட படத்தில் அவர்களுடைய இயக்கத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன். அதுதான் மறுபடியும் எனக்கு இன்டஸ்ட்ரியில் ரீ என்டரி கொடுத்த படம்.
அதையடுத்து ராஜஸ்ரீ புரொடக்ஷனில் "லவ் யூ மிஸ்டர் காலாகான்' என்ற படத்திலும் ஒரு அருமையான கதாபாத்திரம் செய்து வருகிறேன்.
தமிழில் பெரிய திரையில் நடிக்கும் எண்ணம் உண்டா?
பிரச்னை இல்லாமல் எனக்குப் பொருந்துவது போல் கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
நீங்கள் நடிக்கும் தொடரைப் பார்க்க நேரம் கிடைக்
கிறதா?
என் வீட்டு டிவியைக் கேட்டுப் பாருங்கள் "செüந்தரவல்லி... செüந்தரவல்லி' என்றுதான் சொல்லும். ஆனால் இதில் ஒரு விஷயம் தொடர் ஒளிபரப்பாகும் 8.30 மணிக்கு என்னால் பார்க்க முடிவதில்லை. அந்த நேரம் பிள்ளைகள் படிக்கும் நேரம். அதனால் அந்தத் தொடரை ரிக்கார்ட் செய்து வைத்துகொண்டு பிறகுதான் பார்க்கிறேன். பிரபுநேபால் குழுவினரின் தயாரிப்பு முறை, வழங்கும் தன்மை எல்லாம் பிடித்திருக்கிறது. அதனாலேயே அவசியம் பார்த்துவிடுகிறேன்.
உங்கள் குடும்பம்?
குஜராத்தி குடும்பம். கணவர் பிஸினஸ் செய்துகிட்டு இருக்கிறார். இரண்டு பெண் குழந்தைகள். பெரியவளுக்குப் பத்து வயது. அவள் பெயர் அமியா. சிறியவளுக்கு எட்டு வயது. அவள் பெயர் கெயா. மாமனார், மாமியார் எல்லாம் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...