புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காட்டுக்குள் ஷூட்டிங்!

"திருடா திருடி' படத்தின் மன்மத ராசா... மன்மத ராசா... பாடலின் மூலம்  தமிழ் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் சாயா சிங். அவர் தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "நாகம்மா' மெகா தொடரின் மூலம் சின்ன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:57 am

ஸ்ரீதேவி குமரேசன

"திருடா திருடி' படத்தின் மன்மத ராசா... மன்மத ராசா... பாடலின் மூலம்  தமிழ் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் சாயா சிங். அவர் தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "நாகம்மா' மெகா தொடரின் மூலம் சின்னதிரை நாயகியாகியிருக்கிறார். அவர் நடிக்கும் முதல் தொடர் இது. இது குறித்து அவரிடம் பேசினோம்.



பெரியதிரை நாயகியான நீங்கள் "நாகம்மா' தொடர் மூலமா சின்னதிரை பக்கம் வந்திருக்கீங்க. அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க?

டி.வி. தொடர்களில் நடிக்க திட்டமிட்டிருந்தது உண்மைதான். ஆனால் இத்தனை சீக்கிரம் நடிக்க வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்தத் தொடரின் கதையைப் பற்றி என்னிடம் சொல்லும்போதே எனக்கு அந்தக் கதை ரொம்ப பிடிச்சிருந்தது.

அதனால்தான் நடிக்க ஒப்புக் கொண்டேன். மற்றபடி பெரியதிரை, சின்னதிரை என்பதில் கேமிராவைத் தவிர வேறு எந்த வித்தியாசமும் எனக்குத் தெரியவில்லை. எல்லாமே நடிப்புதான். அதுமட்டுமில்லாமல் நல்ல கதையும் கேரக்டரும் எங்கு அமைகிறதோ அங்கு நடிப்பதில் தவறு எதுவும் இல்லை.

வாய்ப்பு இல்லாமல் சின்னதிரை பக்கம் வந்துட்டதாக நினைக்கக் கூடாது. இரண்டு திரையிலுமே நடிச்சுகிட்டுத்தான் இருக்கேன். நல்ல கதையில் நடிக்கும்போது எந்த திரையில் நடிக்கிறோம் என்பதைப் பார்க்கக் கூடாது. அப்படி அமைந்ததுதான் நாகம்மா. இந்தத் தொடரில் நீலா, நந்தினி என இரு வேடங்களில் நடிக்கிறேன். நீலா தைரியமான பெண். நந்தினி அப்பா, அம்மா சொல்லைத் தட்டாத, உலகமே அறியாத பயந்த சுபாவம் உள்ள ரொம்ப அமைதியான பெண். இந்த இரண்டு கேரக்டருமே எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.



அந்தத் தொடருக்காக வனப்பகுதியில் போய் நடிக்கும்போது உங்க மனநிலை எப்படியிருந்தது?

அது ஒரு அடர்ந்த அழகான காடு. அந்தக் காட்டுக்குள்ள போய் நடித்தது திகிலான அனுபவம். ரொம்ப அழகான இடம், ஆனால்  இருட்ட ஆரம்பித்தவுடன்  கொஞ்சம் பயமா இருக்கும்.

"திருடா திருடி' படத்தில் ஒரு பாட்டின் மூலம் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்த நீங்கள், அதன் பிறகு ஹிட் படங்கள் எதுவும் கொடுக்கவில்லையே?

பெரியபடம், ஹிட் படம் என்பதெல்லாம் அந்தப் படத்தோட ஸ்கிரிப்ட்டை பொருத்தது. "திருடா திருடி' சின்ன பட்ஜெட் படம்தான். இருந்தாலும் அந்தப் படம் ஹிட் படமாகிவிட்டது. என்னதான் நாம் கதையைத் தேர்வு செய்து நடித்தாலும், ஒரு படம் ஹிட்டாவதற்குக் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று நினைக்கிறேன்.



வங்க மொழிப் படம் இயக்கிக் கொண்டு இருக்கிறீர்களாமே, தமிழில் எப்போது இயக்கப் போகிறீர்கள்?

ஆமாம். படத்தோட ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வரும். தமிழிலும் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து கண்டிப்பாக இயக்குவேன்.

வேறு படம் எதுவும் நடித்துக் கொண்டிருக்கிறீர்களா?

டைரக்ஷனுக்கும், தொடருக்கும் நேரம் சரியாக இருப்பதால். தற்போதைக்கு  வேறு எந்தப் படமும்  நடிக்கவில்லை. 



தொடர்ந்து தொடர்கள் நடிக்கும் எண்ணம் உண்டா?

முதலில் ஒத்துக் கொண்ட இந்தத் தொடரை முடித்து கொடுக்க வேண்டும். பிறகுதான் தொடர்ந்து தொடர்களில் நடிப்பதா இல்லையா என்பதை யோசிக்க வேண்டும்.



நீங்கள் நிஜத்தில் எப்படி பயந்த சுபவாமா அல்லது துறு துறு பெண்ணா?

நான் "நாகம்மா' தொடரில் வருகிற நீலா கேரக்டர் போன்ற தைரியமான பெண். எப்பவும் நம்மால முடிந்த உதவியை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் என்று நினைப்பவள்.

உங்கள் திறமையை நிரூபிக்க, என்ன மாதிரி கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

ஒரு சவாலான கேரக்டராக இருக்க வேண்டும். அதே சமயத்தில் இதுவரை யாரும் செய்யாத கேரக்டராகவும் இருக்க வேண்டும். அது போன்ற கதாபாத்திரத்தைத்தான் தேர்ந்தெடுப்பேன்.

உங்கள் ரோல் மாடல் யார்?

ரோல்மாடல் என்றும் யாரையும் நினைத்தில்லை. ஆனால் நடிகை ஸ்ரீதேவி. எனக்கு மிகவும் பிடிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.