நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருமதிகளின் செல்லப் பிள்ளை!

2008 -ஆம் ஆண்டிற்கான சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சின்னதிரை விருது பெற்றிருக்கிறார் "திருமதி செல்வம்' தொடரின் நாயகன் சஞ்சய். "விளக்கு வெச்ச நேரத்துல' தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை உணவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:30 am

ஸ்ரீதேவி குமரேசன

2008 -ஆம் ஆண்டிற்கான சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சின்னதிரை விருது பெற்றிருக்கிறார் "திருமதி செல்வம்'

தொடரின் நாயகன் சஞ்சய். "விளக்கு வெச்ச நேரத்துல' தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை உணவு இடைவேளையின்போது அவரிடம் பேசினோம்:

"திருமதி செல்வம்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி?

திருமதி செல்வம் தொடரில் வரும் செல்வம் கதாபாத்திரம் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. முதல் ஆறுமாதம் இயக்குனர் உதவியால்தான் சிறப்பாக நடித்தேன். அதன்பிறகு நானே செல்வமாக ஒன்றிவிட்டேன். இப்போது எல்லாம் யாராவது செல்வம்ன்னு கூப்பிட்டால் கூட திரும்பிப் பார்க்கிறேன். அது தான் இந்தத் தொடரில் எனக்குக் கிடைத்த அனுபவம்.

"மானாட மயிலாட' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் அனுபவம்?

"மானாட மயிலாட' நிகழ்ச்சி முழுக்கமுழுக்க கமர்ஷியலான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியைக் பொறுத்தவரை நான் முதல் முறையாகத் தொகுத்து வழங்குகிறேன். என் நண்பன் தீபக் கொடுத்த ஊக்கத்தால்தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன்.

கலா அக்கா என்னை முதல்ல இந்நிகழ்ச்சியில் நடனம் ஆடுவதற்காகத்தான் கூப்பிட்டார்கள். எனக்கு நடனம் வேண்டாம்ன்னு சொன்னேன். அதனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பைக் கொடுத்தார்கள். இன்று விருது வாங்குகிற அளவுக்கு எனக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது.

நிஜத்தில் சஞ்சய் செல்வம் மாதிரி பொறுமைசாலியா? இல்லை கோபமானவரா?

ஒரு விஷயத்தைத் தொடர்ந்து செய்யும்பொழுது அது நம் மனசில் பதிந்துவிடும். அந்த விஷயம் சில நேரங்களில் நம் சொந்த வாழ்க்கையைக்கூட பாதிக்கும்னு சொல்வாங்க.

இந்தத் தொடரில் வருவதற்கு முன்பு நான் ஓரளவுக்கு அமைதிதான். என்ன செல்வம் அளவுக்குப் பொறுமை கிடையாது. சட்டென்று கோபம் வந்துவிடும். ஆனால் "செல்வம்' கேரக்டரில் நடிக்க ஆரம்பித்த இந்த நான்கு வருஷத்தில், என் லைப் ஸ்டைலே செல்வமாக மாறிப்போச்சு. ரொம்ப பொறுமைசாலியாகவே மாறிவிட்டேன்.

படங்களில் எதுவும் நடிக்கிறீர்களா?

தற்போதைக்குப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. ஒரு படத்திற்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அது முடிவானால் தான் முழுமையாகத் தெரியும்.

2008-ஆம் ஆண்டுக்கான, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான சின்னதிரை விருது வாங்கும் பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?

முதல்வர் கையால் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதைவிட பெரிய சந்தோஷம் அவர் விருது கொடுக்கும்பொழுது என்னிடம் உன்னுடைய நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும், நான் உனக்குப் பெரிய ரசிகன். எங்க வீட்டில் எல்லாருக்குமே உன் நடிப்பு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார். அவ்வளவு பெரியவங்க அப்படிச் சொல்லும்பொழுது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அது நான் வாங்கிய விருதைவிட அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ரசிகர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

முன்பெல்லாம் என்னைப் பார்க்கிறவர்கள் நல்லா நடிக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். "திருமதி செல்வம்' வந்த பிறகு நிலைமை அப்படியே மாறி எல்லோரும் என்னைப் பாராட்டுவதோடு நின்று பேசவும் விரும்புகிறார்கள். "திருமதி செல்வ'த்தின் மூலமாக திருமதிகளின் செல்லப்பிள்ளையாகிவிட்டேன்.

குடும்பம்?

என் மனைவி ப்ரித்தி. ரொம்ப உதவியாகவும், ஊக்கமாகவும் இருப்பார். அவரும் சின்னதிரை நடிகை என்பதால் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு, "இது நல்லா இருக்கு, இந்த இடத்துல இன்னும் கொஞ்சம் நல்லா செய்திருக்கலாம்'னு சொல்லுவார். எங்களுக்கு லயா என்று எட்டு மாத பெண் குழந்தை இருக்கிறார். இப்போது எங்கள் உலகமே அவர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.