நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சீரியல் தங்கை!

""என் அப்பா சினிமாத்துறையில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்க்கிறார். "ஜெயம்' ரவி நடித்த "தாஸ்' படத்தில் வேலை பார்க்கும் பொழுது அங்கே நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க வந்திருப்பதைப் பார்த்துவிட்டு அப்பா ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:19 am

ஸ்ரீதேவி குமரேசன

""என் அப்பா சினிமாத்துறையில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்க்கிறார். "ஜெயம்' ரவி நடித்த "தாஸ்' படத்தில் வேலை பார்க்கும் பொழுது அங்கே நிறைய குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க வந்திருப்பதைப் பார்த்துவிட்டு அப்பா டைரக்டரிடம் கேட்டிருக்கிறார். "என் பொண்ணு நல்லா நடிப்பா. அவளைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா' என்று. அவரும், "அழைத்து வாங்க பார்க்கலாம்' என்று சொன்னார். சரின்னு போய் பார்த்தோம். அவர் என்னைப் பார்த்ததும் செலக்ட் பண்ணிட்டாரு. இப்படித்தான் சினிமாவில் நடிக்க வந்தேன். இப்போ சின்னதிரை, பெரியதிரை இரண்டிலும் நடித்துவருகிறேன்'' என்கிறார் "திருமதி செல்வம்' தொடரில் செர்ரியின் தங்கை மோனிகாவாக நடித்து வரும் பந்தனா.

 முதல் முறையா கேமிராவைப் பார்க்கும் பொழுது எப்படி உணர்ந்தீர்கள்?

 இப்பவும் ஒவ்வொரு முறை கேமிரா முன்னாடி நிற்கும் பொழுதும் சரியா நடிச்சிடணும்னு லேசான பயம் இருந்துகிட்டேதான் இருக்கு. முதல் முறையா கேமிராவைப் பார்க்கும் பொழுது எனக்கு எட்டு வயதிருக்கும்.

 சினிமான்னா என்ன என்பதே தெரியாது. நிறைய பேர் இருந்தாங்க. என்னைச் சுற்றி பெரிய பெரிய லைட்ஸ், கேமிரா என்று எல்லாம் பார்க்கும்போது ரொம்ப பயமா இருந்தது.

 ஆனா என்னை போலவே நிறைய சின்ன பசங்க இருந்தாங்க. அதனால கொஞ்சம் தைரியம் வந்துடுச்சு. குழந்தைங்க எல்லாம் ஒருத்தர் பின்னாடி ஒருத்தர் ரயில் மாதிரி பிடிச்சுக்கிட்டு ஓடணும். அதுதான் சீன். ஒரு பையன் கையில் ஆரஞ்சு பழத்துடன் தட்டு வைத்திருந்தான். நாங்க ஓடும்போது அந்தப் பையன் கையில் இருந்து ஆரஞ்சு பழம் ஒண்ணு ஒண்ணா கீழே விழுந்துடுச்சு. அதை பார்த்ததும் நான் "ஆரஞ்சு கீழே விழுந்துடுச்சுப்பா'ன்னு கத்திட்டேன். உடனே கட் சொல்லிட்டு எல்லாத்தையும் நிறுத்திட்டாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. என்னாச்சுன்னு அதன் பிறகுதான் சொன்னாங்க. அப்படி எல்லாம் கத்தக் கூடாது. பழம் விழுந்தா பரவாயில்லைன்னு சொன்னாங்க.

 தற்பொழுது எந்தந்தத் தொடரில் நடிக்குறீங்க?

 சன் டிவியில் "தென்றல்', "திருமதி செல்வம்', ஏஞ்சல் டிவியில் "உடைந்த சிறகுகள்' ஆகிய தொடர்களில் நடிக்கிறேன். முன்பு ராஜ் டிவியில் இரண்டு தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அதில் என்னுடைய போர்ஷன்ஸ் முடிஞ்சிடுச்சு. "தென்றல்' தொடரில் தீபாவாக வரும் ஹேமலதாவின் தங்கை பானுவாக நடிக்கிறேன். "தென்றல்' செட்டுக்கு போய்ட்டா ரொம்ப ஜாலியா இருக்கும். எல்லாரும் ரொம்ப அன்பாப் பழகுவாங்க. நம்ம வீட்ல இருப்பது போல இருக்கும். "திருமதி செல்வம்' தொடரில் செர்ரியின் தங்கை மோனிகாவாக நடிக்கிறேன். "உடைந்த சிறகுகள்' தொடர் ஐந்து பேரை மையமாகக் கொண்ட கதை. அதிலும் தங்கை வேடத்தில் நடிக்கிறேன். சொல்லப்போனால் சீரியல்களின் அன்பான தங்கச்சி நான்.

 பெரியதிரையில் படங்கள் எதுவும் நடிக்கிறீங்களா?

 "வாக்கப்பட்ட சீமை' என்கிற படத்தில் நடித்திருக்கிறேன். அதில் என் கேரக்டர் பேரு ராசாத்தி. ரொம்ப துறு துறுன்னு இருக்கிற பெண்ணா நடிச்சிருக்கேன். அதையடுத்து ஆனந்த வாசன் இயக்கும் "இதயம் முதல் குமரி வரை' என்கிற படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை தவிர பாலு மலர்வண்ணன் இயக்கும் "ஒத்தவீடு' என்கிற படத்தில் ஹீரோ திலீப்பின் தங்கையாக நடிக்கிறேன். ரொம்ப அழுத்தமான கதாபாத்திரம். படம் திரைக்கு வந்ததும் கண்டிப்பா பந்தனா யாரு என்று எல்லாரும் தெரிகிற அளவுக்கு ரொம்ப சவாலான கேரக்டர் எனக்குக் கிடைத்திருக்கு. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

 குழந்தை நட்சத்திரமா நடித்ததற்கும், இப்போது நடிப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீங்க?

 வித்தியாசம் என்று எதுவும் தெரியல. குழந்தை நட்சத்திரமா நடிக்கும் பொழுது நான் நடித்திருப்பதே அவ்வளவா யாருக்கும் தெரியாது. முக்கிய கதாபாத்திரங்களின் பின்னணியில் ஓடிக் கொண்டிருப்பதாகவே எனக்குக் காட்சிகள் அமைந்தன. இப்போது ஒரு வருஷமா கேரக்டர் ரோல்ஸ் எல்லாம் நடிக்கிறேன். சினிமான்னா என்ன, அதன் அருமை என்னங்கிறது இப்போதான் புரிஞ்சிருக்கு. பொதுவா எல்லாரும் படத்தைப் பார்த்துவிட்டு இது நல்லா இருக்கு, இது நல்லா இல்லன்னு சொல்லிட்டு போய்டுவாங்க. ஆனா ஒரு படத்துக்குப் பின்னாடி எத்தனை பேர் உழைக்கிறாங்க. எவ்வளவு கஷ்டப்பட்டு ஒவ்வொன்றையும் செய்றாங்க என்று யாருக்கும் தெரியாது. அதை எல்லாம் ஒரு நடிகையா இப்போ தான் உணர்ந்திருக்கிறேன்.

 உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை யார்?

 ரஜினி சார் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிகைகளில் அனுஷ்கா ரொம்பப் பிடிக்கும்.

 குடும்பம்?

 அப்பா கண்ணன், அம்மா லஷ்மி, நான் வீட்டுக்கு ஒரே பெண். எங்க மாமா ஸ்ரீனுவும் எங்களோடுதான் இருக்கிறார். அவர் சினிமாவில் லைட் மேனாக இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.