புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாதிப்பதற்கு தடையில்லை!

கன்னட  சின்னதிரை நடிகையான  மகாலஷ்மி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் "பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் தமிழ் சின்னதிரையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:29 am

ஸ்ரீதேவி குமரேசன

கன்னட  சின்னதிரை நடிகையான  மகாலஷ்மி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் "பிரிவோம் சந்திப்போம்' தொடரின் மூலம் தமிழ் சின்னதிரையில்

அடியெடுத்து வைத்திருக்கிறார்.

அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். தமிழில் ஒரு தொடராவது நடிக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தத் தொடரின் மூலம் என் கனவு

நனவாகியுள்ளது என்கிறார்.

உங்களைப் பற்றி?

என்னுடைய  சொந்த ஊர் பெங்களுர். சட்டம் படித்து வருகிறேன். கன்னட சின்னதிரை நடிகையாக இருக்கிறேன். தெலுங்கு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்தேன். அதன் மூலமாகத்தான் தமிழில் பிரிவோம் சந்திப்போம் தொடர் பற்றி கேள்விப்பட்டு அதன் இயக்குனர் ரசூல் ஸôரை வந்து பார்த்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் இப்போது கதையிலே நடிக்கிறேன். எனக்குத் தமிழ் ரொம்ப பிடிக்கும். அதனால் தான் தமிழ் தொடர் என்றதும் உடனே ஒத்துக் கொண்டேன். தமிழ் தொடரில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 

பிரிவோம் சந்திப்போம் பற்றி?

இந்தத் தொடர் தான் தமிழில்  எனக்கு முதல் தொடர். இதில் இரண்டு நாயகிகள் இருக்கிறோம். இந்தத் தொடர் மனிதர்களின் நிற வேறுபாட்டை அடிப்படையாக கொண்ட தொடர். இதில் நான் கறுப்பு நிற பெண் ஜோதியாக நடிக்கிறேன். பொதுவாக வெள்ளையாக இருப்பவர்களை தான் மற்றவர்கள் ரசிப்பார்கள். கறுப்பாக இருப்பவர்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு இருக்காது.

கறுப்பாக இருக்கும் ஒரு பெண் எந்த மாதிரியான பிரச்னைகளை எல்லாம் சந்திக்கிறாள் என்பதுதான் என் கேரக்டர். 

பொதுவாக பெண்கள் தங்களை அழகாக காண்பிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள், ஆனால்  இந்தத் தொடரில் நீங்கள் கறுப்பு நிற பெண்ணாக வருகிறீர்கள். அதற்காக வருத்தப்பட்டதுண்டா?

கண்டிப்பாக  வருத்தப்பட்டதில்லை. அதுவுமில்லாமல் நிறத்தை ஒரு பொருட்டாக நான் ஒரு போதும் நினைத்ததில்லை. இதுபோன்று ஒரு கேரக்டர் செய்வதற்கு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நிறத்தில் என்ன இருக்கிறது? கறுப்பாக இருக்கிறவர்கள் படித்து நல்ல நிலைமைக்கு வருவதில்லையா?  நாம் கறுப்பாக இருப்பதால் மற்றவர்கள் நம்மை உதாசீனப்படுத்தி விடுவார்களோ என்று பயந்தால் எதுவுமே சாதிக்க முடியாது. உலகில் சாதனையாளர்கள் யாரும் நிறத்தைப் பற்றி எல்லாம் யோசிப்பது கிடையாது. சாதிப்பதற்கு நிறம் தடையாக இருந்ததில்லை.

நிஜத்தில்  நீங்கள் கறுப்பு  நிறம் தானா?

என்  நிறத்தைப் பற்றி  சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். அதனால் அது ரகசியமாக இருக்கட்டும்.

தமிழ் நன்றாக பேசுகிறீர்களே எப்படி?

பெங்களுரில் எங்கள் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் தமிழ் ஆட்கள். அதனால் சின்ன வயதில் இருந்து அவர்களோடு பேசிப் பேசி  தமிழ் நன்றாக கற்றுக் கொண்டேன். இங்கே தொடருக்காக முதல் நாள் நடிக்க வந்தபோதுகூட யாருக்கும் தெரியாது நான் கன்னட பெண் என்று. அந்த அளவுக்கு தமிழ் நன்றாக பேசினேன். அதேப் போல தெலுங்கிலும் நன்றாகப் பேசுவேன்.

தமிழில் வேறு தொடர் எதுவும் நடிக்கிறீர்களா ? பெரியதிரையில் நடிக்கிற எண்ணம் உண்டா?

தற்போதைக்கு வேறு எந்தத் தொடரிலும் நடிக்கவில்லை. பெரியதிரையில் நடிக்கிற எண்ணம் இல்லை. ஆனால் படங்களுக்கு எடிட்டிங் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறது. அதற்கான பயிற்சி எடுத்து வருகிறேன். 

குடும்பம்?

அப்பா ருஷிக் குமார் மைசூர் சாண்டல் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அம்மா சுசீலா, குடும்பத் தலைவி. நான் வீட்டுக்கு ஒரே பெண்தான். ஆனால் தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா என்று பெரிய கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.