பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வெட்டி வேரு வாசம்... வீடு வரை வீசும்!

சாலையில் நடந்து செல்லும் போதும், பேருந்துக்காக காத்திருக்கும் போதும், நிற்க நிழல்கூட நகரங்களில் இருப்பதில்லை. இப்படிப்பட்ட கான்கிரீட் நகரச் சூழலில், தென்னை, வேம்பு மரங்களையும் கீரை வகைகளையும் வளர்த்து

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:29 am

சீனிவாசன்

சாலையில் நடந்து செல்லும் போதும், பேருந்துக்காக காத்திருக்கும் போதும், நிற்க நிழல்கூட நகரங்களில் இருப்பதில்லை. இப்படிப்பட்ட கான்கிரீட் நகரச் சூழலில், தென்னை, வேம்பு மரங்களையும் கீரை வகைகளையும் வளர்த்து தனது வீட்டையே தோட்டமாக்கியிருக்கிறார் ஒருவர் என்றால், அது ஆச்சரியம்தானே! அவர், கோவையைச் சேர்ந்த பி.வின்சென்ட். கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கச் செயலரான அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...

தோட்டம் அமைப்பதில் இவ்வளவு ஆர்வமாக இருக்

கிறீர்களே?

ரம்மியமான தேயிலைத் தோட்டங்கள், அணைகளுக்குப் புகழ்பெற்ற வால்பாறைதான் என் சொந்த ஊர். செடி வளர்க்கும் ஆர்வம் என்னுடைய தந்தையிடமிருந்துதான் எனக்கு வந்தது. இதனால் சிறு வயது முதலே பூங்கா அமைப்பதிலும் செடிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் எனக்கு இருந்தது.

நான் ஒசூர் தேன்கணி கோட்டையில்தான் இந்தியன் வங்கியில் 1981-ல் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது வங்கிக்கு வரும் விவசாயிகளுடன் ஏற்பட்ட நட்பில் அவர்களது தோட்டத்துக்குச் சென்று அவர்கள் செடிகளைப் பராமரிப்பதை கவனிப்பது வழக்கம். 2001-ல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு அடைந்தவுடன் தோட்டம் வளர்ப்பதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.

நீங்கள் ஏன் வீட்டுத் தோட்டம் அமைக்கிறீர்கள்?

நம் முன்னோர்கள் எப்படி இயற்கை விவசாயத்தின் மூலம் பயிரிட்டார்களோ அதே போல்தான் நானும் பயிர் செய்கிறேன். வித்தியாசம் என்னவென்றால் அவர்களுக்கு நிலம் அதிகமாக இருந்தது. மேலும் அவர்கள் மண்ணில் பயிரிட்டார்கள். தற்போது விளை நிலங்களும், தூய்மையான மண்ணும் கிடைப்பதில்லை. அதனால்  3 அடி உயரம் அல்லது 5 அடி அகலத்தில் எச்டிபி சீட்டில், நம் வீட்டைச் சுற்றிக் கிடக்கும் குப்பை, காய்ந்து விழும் மர இலைகள், தென்னை மட்டைத் துகிள், மண் புழுக்களை அந்த சீட்டில் போட்டு  கீரை அல்லது காய்கறி வகைளின் விதையை விதைத்து விடுவேன். இந்த தென்னை மட்டையின் துகிளைப் பயன்படுத்துவதனால் செடிகளுக்கு ஈரப்பதம் அதிகம் கிடைக்கும். இதனால் தண்ணீர் பயன்பாடும் குறைகிறது.

இதில் பாலக் கீரை, முருங்கக் கீரை, கொத்தமல்லி, புதினா போன்ற கீரை வகைகளும், வெங்காயம், மிளகாய் போன்றவற்றையும் நான் தோட்டத்திலேயே பயிரிட்டு அதைத்தான் வீட்டுச் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். 

மேலும் மாடித் தோட்டத்திலேயே வெட்டி வேரும் உற்பத்தி செய்து வருகிறேன். என் வீட்டுக்கு வரும் அலுவலக நண்பர்களும், உறவினர்களும் வீட்டில் அமர்ந்து பேசுவதை விட, மாடித் தோட்டத்தில் அமர்ந்து பேசுவது தான் அதிகம். வீட்டுத் தோட்டம் அமைப்பது பற்றி யாராவது கேட்டால் அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கி வருகிறேன்.



வெட்டிவேர் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

உள்ளதா?

காலம் காலமாக வெட்டி வேரின் முக்கியத்துவத்தை நாம் அறிந்தவர்கள்தான். ஆனால் விவசாயிகள் அதைப் பயன்படுத்த முன் வருவதில்லை. சீனா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு கடந்த 50 வருடங்களுக்கு முன்புதான் வெட்டிவேரின் முக்கியத்துவம் பற்றித் தெரியும். ஆனாலும் இந்த நாடுகளில் மண் அரிப்பு, நிலச்சரிவைத் தடுக்க காடுகள், விளை நிலங்கள், வீடுகள் போன்ற பகுதிகளில் இதை வளர்த்து வருகின்றனர்.

மேலும், மேம்பாலங்கள், ரயில் பாதை, பேருந்துகள் பயணிக்கும் சாலை என அனைத்துப் பகுதிகளிலும் மண் அரிப்பைப் தடுக்க பாதையோரங்களில் வெட்டிவேரை நடுகின்றனர். இதனால் மழைக் காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிகிறது. நம் நாட்டில் வெட்டி வேரின் முக்கியத்துவம் அறிந்தும் அதை வளர்க்க யாரும் முன்வருவதில்லை.

நீலகிரி மாவட்டத்தில் ஏற்படும் நிலச்சரிவைத் தடுக்க, வீட்டுப் பகுதிகளிலும், மலைப் பகுதிகளிலும் இந்த வெட்டி வேர்களை நட்டு வைக்கலாம். மேலும், இதை நடுவதால் இயற்கையாகவே மழைநீர் நிலத்தடியில் நிறையும். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். நான் என் வீட்டில் உற்பத்தி செய்யப்படும் வெட்டிவேர்களை அருகில் இருப்பவர்களுக்கும், இதை வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகளுக்கும் தந்து உதவுகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.