புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நான அதிர்ஷ்டக்காரப் பொண்ணு!

வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பான "உறவுக்குக் கைகொடுப்போம்' தொடரின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்துக் கொண்டிருந்தது. எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் மிகப் பொறுமையாக 400 - வது எபிசோடுக்கான காட்சி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:35 am

ஸ்ரீதேவி குமரேசன

வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பான "உறவுக்குக் கைகொடுப்போம்' தொடரின் படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்துக் கொண்டிருந்தது. எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் மிகப் பொறுமையாக 400 - வது எபிசோடுக்கான காட்சிகளை இயக்கிக் கொண்டிருந்தார் அதன் இயக்குனர் புவனேஷ். ஒரு காட்சிக்கும், அடுத்த காட்சிக்கும் இருக்கும் இடைவெளியில், இத்தொடரின் நாயகியான புஷ்பலதாவைச் சந்தித்துப் பேசினோம்.



உங்களைப் பற்றி சொல்லுங்கள்?

எனக்கு சொந்த ஊர் பெங்களூர். தாய்மொழி கன்னடம். அப்பா நரசிம்மன் கன்ஸ்டரக்ஷன் லைன்ல இருக்காரு. அம்மா ஜெயலஷ்மி குடும்பத் தலைவி. அக்கா திவ்யா திருமணம் ஆகி செட்டில் ஆகிட்டாங்க. சகோதரர்  ஹரிண் பாபு அப்பாவுக்கு உதவியா இருக்காரு.

நான் பி.எஸ்சி. படித்திருக்கிறேன். படிப்பு முடிந்ததும் சினிடைம்ஸ் என்ற கன்னட சின்னதிரை நிறுவனம் தெலுங்கில் ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுத்தாங்க. அதே நிறுவனத்தின் மூலமாக தமிழில் "மகராசி' என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு  கிடைத்திருக்கிறது. இதற்காக பெங்களூரில் இருந்து இங்கு வந்து நடித்துவிட்டுப் போகிறேன். நான் நடித்த முதல் தொடரிலேயே எனக்கு பெஸ்ட் பெர்ஃபாம்மென்ஸ் அவார்ட் கிடைத்தது. இதை மைலாப்பூர் அகாடமி வழங்கியது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்த விதத்தில் நான் அதிர்ஷ்டக்காரப் பொண்ணு. அதை தொடர்ந்து "வைர நெஞ்சம்' தொடரில் நடித்தேன். தற்பொழுது "உறவுக்குக் கைகொடுப்போம்' தொடரில் நடித்து வருகிறேன்.

  இந்தத் தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி...?

இந்தத் தொடரின் நாயகியாக ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இதில் நான் அதிர்ஷ்டம் இல்லாத பொண்ணு. "வைர நெஞ்சம்' தொடருக்கு அடுத்து ஏவி.எம். நிறுவனத்தில் இது எனக்கு இரண்டாவது தொடர். தொடர்ந்து இரண்டு தொடர் ஒரே நிறுவனத்திலேயே நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அதே போல இந்தத் தொடரின் இயக்குனர் புவனேஷ் சார் பற்றி கண்டிப்பாகச் சொல்லணும். ரொம்ப நல்ல மனிதர். ரொம்ப பொறுமையா ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொடுப்பார். இப்படி ஒரு நல்ல டீம்ல ஓர்க் செய்வது ரொம்ப சந்தோஷமா இருக்கு.



வேறு தொடர் எதிலும் நடிக்கிறீர்களா?

இதைத் தவிர, கலைஞர் டிவியில் "செண்பகம்' என்ற தொடரில் நடிக்கிறேன். அதிலும் மெயின் கேரக்டரை நான்தான் செய்கிறேன். அதில் என் பேரு செண்பகம். ரொம்ப பாஸிட்டீவ்வான கதாபாத்திரம். ரொம்ப தைரியமான கேரக்டர். ஒரு நிறுவனத்துக்கு எம்.டி.யாக நடிக்கிறேன். என் குடும்பத்துக்காக என் வாழ்க்கையைத் தியாகம் செய்வது மாதிரியான கதாபாத்திரம். இதைத் தவிர கன்னட தொடர்களில், படங்களில்  நடித்து வருகிறேன்.



 தமிழில் பெரிய திரையில் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா?

எனக்கு தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று நிறைய ஆர்வம் இருக்கிறது. "திருத்தணி' என்ற படத்தில் கேரக்டர் ரோலில் நடித்திருக்கிறேன். அதையடுத்து வேறு ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். கிராமத்துக் கதாபாத்திரங்களாக, குடும்பப்பாங்கான கேரக்டராக வந்தால் கண்டிப்பாக தொடர்ந்து நடிப்பேன். ஆனால் கிளாமர் கதாபாத்திரங்களாக வந்தால் நடிக்க மாட்டேன்.

 நீங்கள் நடிக்கும் தொடரைப் பார்த்திருக்கிறீர்களா?

நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாகப் பார்ப்பேன். ஒவ்வொரு தடவையும்  பார்க்கும்போதும் அதைவிட இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.

  பெங்களூரில் இருந்து இங்கு வந்து நடித்துவிட்டுப் போக உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா?

தமிழில்  நடிக்க வேண்டும் என்ற  ஆர்வத்தினால் இங்கு வந்து நடிக்கிறேன். ஒரு விஷயத்தை நமக்கு பிடித்து, விரும்பி  செய்தால் அதில் எந்தக் கஷ்டமும் தெரியாது. எனவே பெங்களூரில் இருந்து இங்கு வந்து நடித்துவிட்டுப் போவது கஷ்டமாக தெரியவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.