நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்யாணத்துக்குப் பிறகுதான் நடிக்க வந்தேன்!

"திருமதி செல்வம்", "முந்தானை முடிச்சு', "உறவுக்குக்  கைகொடுப்போம்' போன்ற தொடர்களில் நடிகராகவும், இதைத் தவிர சன் டிவியில் நடிகர், நடிகைகளின்  நேர் காணல், வணக்கம் தமிழகம், கே. டிவியில்  "இது என்ன கலாட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:42 am

ஸ்ரீதேவி குமரேசன

"திருமதி செல்வம்", "முந்தானை முடிச்சு', "உறவுக்குக்

 கைகொடுப்போம்' போன்ற தொடர்களில் நடிகராகவும், இதைத் தவிர சன் டிவியில் நடிகர், நடிகைகளின்

 நேர் காணல், வணக்கம் தமிழகம், கே. டிவியில்

 "இது என்ன கலாட்டா', "அன்றும் இன்றும்' போன்ற நிகிழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் விஜய் ஆனந்தை இந்த வாரம் சந்தித்துப் பேசினோம். இதோ அவருடனான  சுவையான உரையாடல்.

 "திருமதி செல்வம்' தொடரில் அடிக்கடி சிறைக்குச் சென்று வருகிறீர்களே, உங்களுக்கு வருத்தமாக இல்லையா?

 இந்தத் தொடர்ல என் கதாபாத்திரம் ஆரம்பித்ததே ஜெயில்ல இருந்து வருவது போலத்தான். சிறையில் இருந்து வரும் என்னை, எங்க அம்மா நான் துபாய்ல இருந்து வருவதாகப் பொய் சொல்லி அர்ச்சனாவைத் திருமணம் செய்து வைக்க பார்ப்பார்கள். ஆனா நான் சிறையில் இருந்து வந்தவன் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்துவிடும். அதனால் என் திருமணம் நின்று போய்விடும். அங்குதான் கதையே ஆரம்பிக்கிறது. இத்தனை சுவாரஸ்யமான திருப்பங்கள் உள்ள கதாபாத்திரத்துக்காக எதற்காக வருத்தப்பட வேண்டும்?

 உங்களுக்கு ஜோடியாக வரும் ப்ரியாவை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்துகிறீர்கள்?

 நீங்கள் கேட்பது மாதிரியே நிறைய பேர் கேட்கிறார்கள். சிலர் பயங்கரமாகத் திட்டுவார்கள். ஆனால் பாருங்கள் நான் என்ன செய்ய முடியும்? ஸ்கிரிப்ட்டுப்படி, டைரக்டர் என்ன சொல்கிறாரோ அதை நான் செய்கிறேன். அந்த தீனா கேரக்டர்தாங்க பொல்லாதவன். நான் உண்மையிலேயே ரொம்ப நல்லவன்.

 மற்ற தொடர்களில் உங்கள் கேரக்டரைப் பற்றி சொல்லுங்க?

 "உறவுக்குக் கைகொடுப்போம்' தொடர், மூன்று அண்ணன்-அண்ணிகள், அக்கா-மாமா என்று ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை. அதில் எனக்குக் குடும்பத்தில் எல்லாருடனும் ஒன்றாக இருந்து, எல்லாரையும் அனுசரிச்சு போக வேண்டிய கேரக்டர். "முந்தானை முடிச்சு' தொடரில் பிரகாஷாக நடிக்கிறேன். அதுவும் பாஸிட்டீவ்வான கேரக்டர்தான்.

 பாஸிட்டீவ், வில்லத்தனம் இரண்டுவிதமான கேரக்டர் செய்யும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்? எது உங்களுக்குப் பிடிச்சிருக்கு?

 பொதுவாக எல்லாரும் பாஸிட்டீவான ரோல் செய்யத்தான் விரும்புவார்கள். நானும் அப்படித்தான். ஆனால் அதற்காக ஒரே மாதிரி கதாபாத்திரங்கள் செய்தாலும் போரடித்துவிடும் இல்லலையா? ஒரு வித்தியாசம் வேண்டும் என்பதற்காக நெகட்டீவ் கேரக்டர் செய்கிறேன். அதுமட்டுமில்லாமல். பாஸிட்டீவ் ரோலுக்கு எவ்வளவுதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் நெகட்டீவ் ரோலுக்குக் கிடைக்கிற வரவேற்பு அதற்கில்லை. அதனால் எல்லாவித கேரக்டருமே நான் விரும்பித்தான் செய்றேன்.

 சின்னதிரையைப் பொறுத்தவரை பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். ஓர் ஆணாக உங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்று வருந்தியதுண்டா?

 அப்படி எந்த வருத்தமும் இதுவரை வந்ததில்ல. "திருமதி செல்வம்' தொடரைப் பொறுத்தவரை தீனா அப்படி இருப்பதனால்தான், விறுவிறுப்பு அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். சின்னதிரை பொறுத்தவரைப் பெண்களுக்கு அதிக ஸ்கோப் இருந்தாலும், சப்போர்ட்டிவ் கேரக்டரில் ஆண்கள் இருந்தால்தான் பார்க்க நல்லா இருக்கும். அப்போ வரவேற்பு கிடைக்கும். உறவுக்குக் கைகொடுப்போம் தொடர் எடுத்துகிட்டா, இது ஆண்களுக்கு அதிக வரவேற்பு உள்ள தொடர். அதனால இங்க ஆண்கள், பெண்கள் என்பதில்லை, ரெண்டு பேருக்குமே வாய்ப்பு அதிகம் இருக்கு. ஆண்கள் இல்லை என்றால் தொடர்கள் ருசிக்காது. விறுவிறுப்பு இருக்காது. ஆனால் நீங்கள் சொல்வது போன்று ஒரு சில தொடர்கள் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து இருக்கிறது.

 பெரியதிரையில் நடிக்கிற எண்ணம் இருக்கிறதா வாய்ப்புகள் வருகிறதா?

 வாய்ப்பு வந்திருக்கிறது. சமீபத்தில் "பார்க்க வேண்டும் போல இருக்கு' என்ற படத்தில் நடிச்சிருக்கேன். அடுத்த மாதம் இப்படம் திரைக்கு வரும் என்று நினைக்கிறேன்.

 ரசிகர்களைச் சந்திச்சிருக்கீங்களா?

 சந்திச்சு இருக்கீங்களாவா, அடி, உதை வாங்காததுதான் மிச்சம். ஷாப்பிங் எங்கேயாவது போகும்போது சில பெண்கள் கோபமாகப் பார்ப்பார்கள். சில பெண்கள் முணுமுணுத்துக்கிட்டே திட்டிவிட்டுப் போவார்கள். சிலர் பக்கத்திலேயே வர மாட்டாங்க. ஒரு சிலர்தான் வந்து பேசுவார்கள். அவர்களும் "மற்ற தொடர்ல உங்களோட கேரக்டர் பார்க்கிறோம். இவ்வளவு நல்லவரா இருக்கீங்க. இந்தத் தொடர்ல மட்டும் ஏன் இந்த மாதிரி ஒரு ரோல் செய்றீங்க'ன்னு கேட்பார்கள். ஒரு புறம் சந்தோஷமா இருந்தாலும் ஒரு சில நேரம் லேசான வருத்தமும் இருக்கும்.

 உங்களைப் பற்றி?

 எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர். படித்தது, வளர்ந்தெல்லாம் அங்கேதான். அங்கே கோவை டிவின்னு ஒரு சேனல் இருக்கு. அதில் காம்பெயராக இருந்தேன். அப்போது ஜெயா டிவி.யில் காம்பயர் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதற்காக சென்னை வந்தேன். அதன்பிறகு தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, இங்கேயே செட்டில் ஆகிட்டேன். மீடியாவில் வருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, எதிபாராமல் கிடைத்த வாய்ப்புதான் இது. இதை தவிர கோயம்புத்தூரில் அட்வர்டைஸிங் ஏஜென்ஸி நடத்தி வருகிறேன். கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், ஊட்டி போன்ற ஊர்களில் இருக்கும் கேபிள் சேனல்களுக்கு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறேன்.

 என் மனைவி ரேணுகா, இரண்டு பெண் குழந்தைகள். மதுமிதா, ஆறாம் வகுப்பு படிக்கிறாள், தேஜஸ்வினி இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இவர்களை தவிர அம்மா, இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். ஓர் ஆச்சர்யமான உண்மையைச் சொல்கிறேன்... நான் திருமணத்துக்குப் பிறகுதான் நடிக்க வந்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.