தைரியம்... மிடுக்கு... நேர்மை!
ராமாபுரம் அருகே நடந்து கொண்டிருந்த "செல்லமே' தொடரின் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றோம். கம்பீரமான போலீஸ் அதிகாரியாக மிரட்டிக் கொண்டிருந்தார் ஷில்பா. நாம் வந்ததைத் தெரிவித்துவிட்டு, காத்திருந்தோம். அட


ராமாபுரம் அருகே நடந்து கொண்டிருந்த "செல்லமே' தொடரின் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றோம். கம்பீரமான போலீஸ் அதிகாரியாக மிரட்டிக் கொண்டிருந்தார் ஷில்பா. நாம் வந்ததைத் தெரிவித்துவிட்டு, காத்திருந்தோம். அடுத்த பத்து நிமிடங்களில் ஷாட் முடிந்து வந்த ஷில்பாவோடு பேசினோம்.
"செல்லமே' தொடரில் நடிக்கும் அனுபவம்?
"செல்லமே' தொடரில் இப்பொழுதுதான் என் கதாபாத்திரம் ஆரம்பமாகியிருக்கிறது. பாஸிட்டீவ்வான ரோல்தான் செய்றேன். ரொம்ப தைரியமான, மிடுக்கான, நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருவேன்.
அந்த உடையைப் போட்டுக் கொள்ளும்பொழுது ஒரு தனி கம்பீரமும், தைரியமும் வருகிறது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. என் கதாபாத்திரத்தைப் பார்த்துவிட்டு நிறையப் பேர் போன் செய்து பாராட்டுவது சந்தோஷமாக இருக்கிறது.
நீண்ட நாட்களாக உங்களைச் சின்னதிரையில் பார்க்க முடியவில்லையே?
ஆமாம். "மகாலஷ்மி' தொடருக்குப் பிறகு நான் தமிழில் தொடர்கள் எதுவும் நடிக்கவில்லை. தெலுங்கில் ராடன் மீடியாவின் "அம்மாயிக்காபுரம்' என்ற தொடரிலும் அதைத் தவிர வேறு சில தொடர்களிலும் நடித்து வந்தேன். அதனால் ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டது போன்ற தோற்றம் இருக்கிறது அவ்வளவுதான்.
சின்னதிரை நடிகையானது எப்போது?
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்பொழுதே நடிக்க வந்துவிட்டேன். விளம்பரப் படங்கள், மாடலிங், தொகுப்பாளர் பணி... என்று எல்லா சேனல்களிலும் பங்கேற்று வந்தேன்.
அதன் பிறகுதான் தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் சின்னதிரை நடிகையானேன். சின்னதிரையில் நடிப்பது ரொம்ப சுலபமாக இருக்கிறது. அதைத் தவிர அவ்வப்பொழுது பெரியதிரையிலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்பொழுது நடித்து வருகிறேன்.
பலவிதமான கதாபாத்திரங்கள் இதுவரை நடித்திருப்பீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம் எது?
சி.ஜெ.பாஸ்கர் இயக்கத்தில் "சாவித்திரி' தொடரில் ரொம்ப வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் செய்திருந்தேன். அதில் ரவுடியாக நடித்திருப்பேன். அது எனக்கு ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நிறைய பேர் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்துவிட்டு நல்லா நடிக்கிறீங்க என்று பாராட்டினார்கள். அதில் நடித்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
உங்கள் பொழுதுபோக்கு என்ன?
தொடர்கள் இல்லாத ஓய்வு நேரங்களில் லேப்டாப் முன்னாடி உட்கார்ந்திருப்பதுதான்.
சினிமா துறையில் நடிப்பைத் தவிர வேறெந்த துறையிலாவது ஆர்வம் இருக்கிறதா?
நடிப்பு எவ்வளவு பிடிக்குமோ அந்தளவுக்கு டைரக்ஷன் சம்பந்தப்பட்ட விஷயங்கள், எடிட்டிங், டப்பிங் எல்லாம் செய்ய வேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஆனால் அது எல்லாம் சாதாரணமான விஷயம் இல்லை. எதிர்காலத்தில் இதையெல்லாம் கற்றுக் கொள்ள ஆசையிருக்கிறது.
சொந்த ஊர்... குடும்பம்?
எனக்குச் சொந்த ஊர் ஆந்திரம். ஆனால் நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அம்மா, அப்பா, ஒரு தங்கை. இதுதான் எங்கள் அழகான குடும்பம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...