தென்றல் வீசுது! ஊரே பேசுது!
"தென்றல்' தொடரில் துறு துறுவென்று வந்து எல்லாரிடமும் கலகலவென வெகுளித்தனமாக பேசி இல்லத்தரசிகளை மட்டும் இல்லாமல் இல்லத்தரசர்களையும் கவர்ந்திழுக்கும் தமிழரசை(தீபக்) சந்தித்தோம். படப்பிடிப்புத் தளத்திலேய


"தென்றல்' தொடரில் துறு துறுவென்று வந்து எல்லாரிடமும் கலகலவென வெகுளித்தனமாக பேசி இல்லத்தரசிகளை மட்டும் இல்லாமல் இல்லத்தரசர்களையும் கவர்ந்திழுக்கும் தமிழரசை(தீபக்) சந்தித்தோம். படப்பிடிப்புத் தளத்திலேயும் அப்படித்தான் கலகலவென இருக்கிறார் அவர். ""நிஜத்திலும் நான் தென்றல் தமிழரசு கேரக்டர் தான். அதனால தான் தொடரில் நடிப்பது ரொம்ப சுலபமா இருக்கிறது'' என்று இயல்பாக பேச ஆரம்பித்தார்.
"தென்றல்' தொடரில் நடிக்கும் அனுபவம் பற்றி?
"தென்றல்' தொடரில் முக்கியமான ரோல். தொடர் ஆரம்பிக்கும்போது இந்தக் கேரக்டரை பற்றி டைரக்டரிடம் கேட்டேன். வழக்கமா நீ பேசற மாதிரி தான்ப்பா, எப்பவும் இருக்கிற மாதிரி ஜாலியா இருங்க, பேசுங்க, யதார்த்தமா இருங்க என்று சொன்னார். அப்படி தான் இதுவரை என் கேரக்டர் போய்கிட்டு இருக்கு. பெண்களை மதிக்கும் கேரக்டர். வலிய போய் உதவி செய்பவன், சொந்த பந்தங்களை மதிக்கிறவன், நண்பர்களுடன் ஜாலியா இருக்கிறவன். இந்த மாதிரி ஒரு கேரக்டர் செய்வது ரொம்ப நிறைவா இருக்கு.
உங்கள் சுபாவத்துக்கு அப்படியே பொருந்தி வந்ததால சுலபமாக இருக்கிறதா சொல்கிறீர்கள். மாறுபட்ட கேரக்டராக இருந்திருந்தால்?
"திருமதி செல்வம்' தொடரில் ஜெரிங்கிற கேரக்டரில் நடிக்கிறேன். அப்படியே "தென்றலுக்கு' எதிரான கேரக்டர். என் கேரக்டர் சீக்கிரமே முடிந்துவிடுவது போல்தான் இருந்தது. ஆனா நல்ல வரவேற்பு இருந்ததுனால அதை அப்படியே வளர்த்துவிட்டார்கள். யூ.எஸ். ரிட்டன் கேரக்டர். நல்லா படிச்சவன், பெரிய பிசினஸ்மேன், சிறு வயதிலேயே சாதித்தவங்கிற ஈகோவோட இருப்பவன். ஆரம்பத்தில் பார்த்தீங்கன்னா ஜெர்ரி ஒரு வில்லனாங்கிற மாதிரிதான் தோணும்.
ஆனா உண்மையில் அவன் நல்லவன். எதிலுமே கறாரா இருக்கணும் என்று நினைக்கிற ஆளு. இப்போ போய்கிட்டு இருக்கிற எபிசோட் எல்லாம் பார்த்தீங்கன்னா மனைவி காவ்யாவுக்குப் பிரச்னைகள் வரும்போது அதை சமாளித்து, அவளை நேசிக்கிற மாதிரி போய்கிட்டு இருக்கிறது. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.
பொதுவா சின்னதிரை என்றால் பெண்களுக்குத்தான் முன்னுரிமை அதிகம் இருக்கும் அந்த வகையில் உங்களுக்கு வருத்தம் உண்டா?
அப்படி வருத்தம் எல்லாம் எதுவும் இல்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம் தொடர் என்றால் பெண்கள் பார்ப்பார்கள். ஆண்களுக்குத் தொடரை உட்கார்ந்து பார்க்கும் அளவுக்குப் பொறுமை இருக்காது. ஆனா "தென்றல்' தொடர் பார்த்தீங்கன்னா நிறைய ஆண்கள் பார்க்கிறாங்க, நான் வெளியிடங்களுக்குப் போகும்போது "தென்றல்' பற்றி சொல்றாங்க. கிட்டதட்ட பத்து வருடங்களாக நடித்து வருகிறேன். ஆனால் தென்றல் தொடருக்கு எனக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பை நானே எதிர்பார்க்கல.
நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதற்கும் நடிகரா இருப்பதற்கும் என்ன வித்தியாசம் உணர்ந்தீர்கள்?
நடிகனா இருக்கும் போது அந்தக் கதாபாத்திரமா மாறிடணும். இயக்குனர் உருவாக்கிய அந்தக் கேரக்டருக்கு உயிர் கொடுக்கணும். அதுதான் ஒரு நடிகனோட வேலை. ஆனா நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது அப்படிக் கிடையாது. நாமாகத்தான் இருக்கணும். அங்கிருக்கிற சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடந்துக்கணும். எதை சொல்லனும், எதை சொல்லக் கூடாது என்று உடனுக்கு உடன் உணர்ந்து நடந்துக்கணும். அப்போதான் அந்த ஷோ பார்ப்பவர்களுக்கு நல்லா இருக்கும். இந்த வகையில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி வழங்கும் என்னோட கோ ஆங்கரோட சப்போர்ட் நிறைய இருந்தது. அதனால அந்த ஷோ பார்க்க ரொம்ப நல்லா வந்தது.
எப்படி இந்தத் துறைக்குள்ள வந்தீங்க?
ஆக்ஸிடண்ட்டாதான் வந்தேன். படிச்சுக்கிட்டு இருக்கும்போது எனக்கு மாடலிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. சரி படிச்சுகிட்டே செய்யலாமே என்று பொழுதுபோக்குக்காக தான் வந்தேன். ஒரு கட்டத்துல எங்கப்பா நீ கம்ப்யூட்டர்தான் படிக்கணும்னு சொன்னாரு. எனக்கு இந்தத் துறை பிடிச்சிருக்கு, ஒரு வருஷம் எனக்கு டைம் கொடுங்க, அதில் எனக்கு ஜெயிக்க முடியலன்னா நீங்க சொல்றமாதிரி கம்ப்யூட்டர் படிக்கறேன்னு சொன்னேன். சரின்னு சொன்னார்.
அந்த ஒரு வருஷத்துல என் லைஃப்பே மாறிப்போச்சு. நிறைய சீரியல் எல்லாம் வந்து அதுல நடிக்கிறதைப் பார்த்துட்டு அப்பாகிட்ட அவரோட பிரண்ட்ஸ் எல்லாம் "உங்க பையனா உங்க பையனா' என்று கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பாவுக்கு ஒரே சந்தோஷம். அதனால என்னோட விருப்பத்துக்கே விட்டுட்டாரு. அப்படித்தான் இந்த துறைக்குள்ள வந்தேன். நேத்துதான் வந்த மாதிரி இருக்கு ஆனா பத்து வருஷம் ஆகிடுச்சு.
பெரியதிரையில் படங்கள் எதுவும் நடிக்கிறீங்களா?
நடிச்சுக்கிட்டு இருக்கேன். "முன் தினம் பார்த்தேனே' என்ற படத்தில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு தற்போது "உயர்திரு 420' என்ற படத்தில் ஹீரோவுக்கு நண்பனா நடித்துவருகிறேன்.
உங்க குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க?
என் மனைவி பேரு சிவரஞ்சனி, என் மகன் பேரு அக்மித். அவருக்கு இரண்டு வயதாகிறது. ரொம்ப சுட்டியா இருக்காரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...