தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பேத்தியாக இருந்தாலும்...!

அன்று தனது பாத யாத்திரையை முடித்துவிட்டு நாராயணபுரம் என்ற கிராமத்திற்குத் தன் குழுவினருடன் வந்தார் காந்திஜி. அப்போது இரவு மணி ஏழாகி விட்டது.காந்திஜி ஒரு நெசவாளி வீட்டில் தங்கினார். தினமும் பாதயாத்திரை

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:03 am

அன்று தனது பாத யாத்திரையை முடித்துவிட்டு நாராயணபுரம் என்ற கிராமத்திற்குத் தன் குழுவினருடன் வந்தார் காந்திஜி. அப்போது இரவு மணி ஏழாகி விட்டது.காந்திஜி ஒரு நெசவாளி வீட்டில் தங்கினார். தினமும் பாதயாத்திரை முடித்தவுடன் குளித்துவிட்டுப் பிரார்த்தனை செய்வது காந்திஜியின் வழக்கம். காந்திஜி குளிக்கும்போது ஒரு சிறு கூழாங்கல்லால் தன் உடலைத் தேய்த்துக் குளிப்பார். சிறையில் இருந்தபோதுகூட அந்தக் கூழாங்கல்லால்தான் உடம்பு தேய்த்துக் குளித்தார். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு மீரா என்பவர் அக்கூழாங்கல்லை காந்திஜிக்கு அன்புப் பரிசாகத் தந்திருந்தார்.

 இத்தனை வருடங்களாக காந்திஜி பயன்படுத்தி வந்த அந்தக் கூழாங்கல் திடீரென்று காணாமல் போய்விட்டது. முதல் நாள் இரவு ஒரு கிராமத்தில் தங்கி இருந்தபோது அங்கேயே அந்தக் கூழாங்கல்லை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார் மனுபென். கூழாங்கல்லை மறதியாக விட்டுவிட்டு வந்த விஷயத்தை காந்தியிடம் மனுபென் தெரிவித்தார். காந்திஜிக்கு வந்ததே கோபம். ""சந்தேகமின்றி ஒரு மாபெரும் தவறைச் செய்துவிட்டாய். உடனே போய் அக்கல்லை எடுத்துவா'' என்று மனுவிற்கு கட்டளையிட்டார் காந்திஜி.

 ""வழித்துணைக்கு யாரையாவது கூட்டிச் செல்கிறேன்'' என்று காந்திஜியிடம் மனுபென் கேட்டார். ""நீ செய்த தவறுக்கு இன்னொருவர் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? நீ மட்டும் போய் அக்கல்லை எடுத்து வா'' என்று கூறிவிட்டார் காந்திஜி.

 இருட்டு நேரம். கிட்டத்தட்ட ஏழு மைல் தூரம். போகும் வழியோ கலவரங்கள் நிறைந்த பகுதி. அடர்ந்த பாக்கு மரக் காடு வேறு. இந்தச் சூழ்நிலையில் தன்னந்தனியாக ஒரு இளம்பெண் நடந்து போவது எப்படி? இருப்பினும் காந்தியிஜியின் கட்டளையை மீற முடியுமா? என்ன நடந்தாலும் சரி என்று முடிவு செய்த மனுபென் "ராமா ராமா' என்று மனதிற்குள் சொல்லியபடியே காந்திஜி முதல் நாள் தங்கியிருந்த கிராமத்திற்கு சென்றுவிட்டார். காந்திஜி தங்கியிருந்த வீட்டில் இருந்த கிழவி அக்கூழாங்கல்லை ஏதோ சாதாரணக் கல் என்று நினைத்து குப்பையில் எறிந்துவிட்டாள்.

 கைவிளக்குடன் சென்று குப்பை முழுவதையும் கிளறிக் கடைசியில் ஒரு வழியாக அக்கூழாங் கல்லைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார் மனுபெண். மறுநாள் அக்கல்லை காந்திஜியிடம் தந்தபோது காந்திஜி என்ன சொன்னார் தெரியுமா?

 ""மனு. என் பேத்தி என்பதற்காக நீ தவறு செய்வதை என்னால் அனுமதிக்க முடியாது. ஒரு சிறு கூழாங்கல்தானே. இந்தக் கல் தொலைந்துவிட்டால் குடியா முழுகிவிடும்? வேறு ஒரு கல்லை எடுத்துக்கொண்டால் போயிற்று என்று நீ நினைக்கலாம். இந்தக் கல் எனக்கு அன்பளிப்பாக தரப்பட்ட கல். ஒருவர் அன்புடன் அளித்த பொருள் எவ்வளவு அற்பமாக இருந்தாலும் அதைத் தொலைப்பது என்பது பரிசு கொடுத்தவரின் அன்பையே அலட்சியப்படுத்துவதாகும். அதனால்தான் இரவு என்று கூடப் பார்க்காமல் உன்னைப் போய் அக்கல்லை எடுத்து வரும்படிக் கூறினேன்'' என்றார். ஆனால் மனுபென்னோ, ""தாங்கள் கடுமையாக நடந்துகொண்டதால் எனக்குப் பெரும் லாபமே விளைந்துள்ளது. போகும்போது நெஞ்சுக்குள் பயம் அடைத்தது. உடனே நான் ராம நாமத்தையும் உச்சரித்துக்கொண்டே சென்றேன். ராமநாமத்தை உச்சரித்தவுடன் எனது பயம் அகல ஆரம்பித்தது. உண்மையில் ராமாயணத்தின் மகிமையும், ராமநாமத்தின் வலிமையும் இன்றுதான் எனக்குப் புரிந்தது'' என்றார்.

 இதைக் கேட்ட காந்திஜி, ""பார்த்தாயா, பயம் வந்தால்தான் கடவுளின் நினைப்பே மனிதர்களுக்கு வருகிறது என்பது உன் விஷயத்திலும் எப்படி சரியாகிவிட்டது?'' என்று சிரித்தபடியே கூறினார். தன்னை மட்டுமல்ல. ராம நாமத்தை சொல்லும் யாரையும் அந்த ராமன் காப்பாற்றுவான் என்பது காந்திஜியின் அசைக்க முடியாத நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.