பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாத்திரங்கள் பளபளக்க...

பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கரப்பரில் தாம்பூல சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு கறுத்துப் போன வெள்ளிப் பாத்திரம், பூஜை சாமான்களையெல்லாம் அழுத்தித் தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும். உப்புத்தன்மை கொண்ட

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:59 pm

கீதா ஹரிஹரன்

பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ஸ்கரப்பரில் தாம்பூல சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு கறுத்துப் போன வெள்ளிப் பாத்திரம், பூஜை சாமான்களையெல்லாம் அழுத்தித் தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.

உப்புத்தன்மை கொண்ட தண்ணீர் காரணமாக துலக்கி வைக்கும் பாத்திரங்கள் வெள்ளைப் பூத்துப் போகிறதா? பாத்திரங்களை உப்புத் தண்ணீரில் கழுவிய பிறகு ஒரு சிறிய வாளியில் நல்ல தண்ணீரை வைத்து அதில் முக்கி எடுத்துவிடுங்கள்.

பித்தளைப் பாத்திரங்களை கழுவிய பிறகு, தோல் சீவிய உருளைக்கிழங்கை பாத்திரத்தின் மீது தேய்த்துப் பாருங்கள். புதுசு போல மின்னும்.

தண்ணீரில் ஒரு சிட்டிகை சோடா கொஞ்சம் அலுமினியம் பாயில் ஆகியவற்றோடு வெள்ளிப் பொருள்களைப் போட்டு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் துடைத்தால் வெள்ளிப்பொருள்கள் பளிச்சென்று இருக்கும்.

பால் பாத்திரம் தீய்ந்துவிட்டதா? பாத்திரம் வீண் என்று நினைக்க வேண்டாம். சிறிதளவு வெங்காயத்தை அந்தப் பாத்திரத்தில் போட்டு நீர்விட்டு அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டால் தீய்ந்த கறை போய்விடும்.

பாத்திரங்களைக் கழுவும் நீரில் அவ்வப்போது கொஞ்சம் வினிகரைக் கலந்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.