பிப்ரவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில், சென்னையில் சிங்கப்பூர் திரைப்பட விழா நடந்தது. ஸ்ரீகாந்த் ராதாகிருஷ்ணன் என்கிற வயலின் வித்வான் வயலின் வாசித்து இறைவணக்கம் செய்தார். "சங்கீத விஷாரத்', "வாத்ய விஷாரத்' ஆகிய விருதுகளை வென்ற ஸ்ரீகாந்த், பத்தொன்பதே வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர், நடிகர் பிரதாப் போத்தன், விக்ரம் பிரபு, சிங்கப்பூரைத் தாயகமாகக் கொண்ட இயக்குநர் பூ ஜென்ஃபெங்க் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
பூ ஜென்ஃபெங்க், (ஆஞஞ ஒமசஊஉசஎ) 28 வயதே நிரம்பியவர். ஆனால் உலகப் புகழ்பெற்ற சிங்கப்பூர் இயக்குநர். இவரது "மண் கோட்டை' என்ற படம்தான் முதல் நாளன்று திரையிடப்பட்டது. பூ ஜென்னின் படங்கள் சர்வதேசப் புகழ் பெற்றவை.
"மண் கோட்டை'தான் இவரது முதல் கதைப்படம். கேன்ஸ் திரைப்பட விழாவில், சர்வதேசத் திரை விமர்சகர்கள் வாரத்திற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்ட படம்! ஹனோய் நகரில் நடந்த வியட்நாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட "மண்
கோட்டை' திரைப்படத்திற்கு சிறந்த கதைப்படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகள் கிடைத்தன!
"வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' வெளியிட்ட பட்டியலில், 2010-ஆம் ஆண்டில் ஆசியாக்
கண்டத்திலிருந்து வெளிவந்த திரைப்படங்களில் குறிப்பிட்ட படம் என்று "மண் கோட்டை' படத்தை சிலாகித்துப் பேசியிருக்
கின்றனர்.
திரைக்கதைக்கு வருவோம்:
யென் (உச) என்னும் இளைஞன் சிங்கப்பூர் ராணுவத்தில் சேர்வதற்கு முன்னால் அவன் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் ஜீவநாடி.
அவனது கன்றுக்குட்டிக் காதல், வயதான அவன் தாத்தாவின் மரணம், மறதி நோய் கொண்ட அவனது பாட்டியின் சுகவீனம், அவன் தாயாரின் காதல் விவகாரம் முதலியன அவன் வாழ்வில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அவனது தந்தை மாணவராக இருந்தபோது சமூகப் போராளியாக இருந்த
சம்பவங்கள்... இவைதான் கதை!
இரண்டாம் நாளன்று "சிங்கப்பூர் காகா' (நஐசஎஅடஞதஉ எஅஎஅ) என்ற படம் திரையிடப்பட்டது. சிங்கப்பூரைச் சேர்ந்த இசைவாணர்களைப் பற்றிச் சொல்லும் படம் இது. அதே நாளில் இரண்டாவதாகத் திரையிடப்பட்ட கதைப்படம் "881'. 105 நிமிடங்கள் ஓடும் ஓர் இசைக் காவியம் இத்திரைப்படம்.
"கெடாய்' (எஉபஅஐ) என்பது பேய்த் திருவிழா என்ற பண்டிகையின்போது மேடையில் நடக்கும் இசைக் கச்சேரி. இந்த இசைக் கச்சேரியில் கலந்துகொண்டு பாட, எல்லாப் பெண்களும் போட்டி போடுவார்கள்!
"கெடாய்' இசையின் பெண் தெய்வம் பப்பாயா சகோதரிகள் என்ற இரட்டையர்களை பேய்த் திருவிழாவில் கலந்துகொண்டு பாட ஆசீர்வதிக்கிறாள். கச்சேரி மேடையில் பப்பாயா சகோதரிகளுக்கும் துரியன் சகோதரிகளுக்கும் பாடல் போட்டி நடக்கிறது. பப்பாயா சகோதரிகளில் சின்னவள் உணர்ச்சிவசப்பட்டுப் பாடி- மூக்கில் ரத்தம் வடிய, மேடையில் மயங்கி விழுந்து விடுகிறாள். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் மெல்ல மெல்ல மரணம் அடைகிறாள்.
ஆனால் அன்று அந்த சகோதரிகள் மேடையில் பாடிய பாடல் அமரத்துவம் வாய்ந்த பாடலாக மக்களால் போற்றப்படுகிறது. கண்ணைப் பறிக்கும் வண்ண வண்ண உடைகளில் நடன மாதர்களும் ஆண்களும் நடனம் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி. மேடையில் ஒரு சொர்க்க லோகத்தை சிருஷ்டி செய்துவிடுகிறார்கள்.
தத்துவார்த்தமான கவிதை வரிகள் இசை நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சம். கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் மனதுக்கு இதமாகவும் இருந்த இந்திரலோகப் படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


