

வெள்ளரிக்காய் பொரித்த குழம்பு தேவையானவை:
வெள்ளரிக்காய்- 100 கிராம்
பாசிப்பருப்பு- 100 கிராம்
தேங்காய் துருவல்- 1 மேசைக்கரண்டி
உளுந்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகு-10
பெருங்காயம்-1
கடுகு- 1 மேசைக்கரண்டி
அரிசிமாவு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்- சிறிதளவு
செய்முறை: வெள்ளரிக்காயை நறுக்கி உள்ளேயிருக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும். பாசிப்பருப்பை நீர்விட்டு வேகவிட வேண்டும். இதனுடன் காய்த் துண்டங்களையும் உப்பையும் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். தேங்காய்த் துருவல், மிளகு, உளுந்தம்பருப்பை லேசாக வறுத்துக் கொண்டு விழுதாக அரைத்துச் சேர்க்க வேண்டும். ஒரு கொதி வந்ததும் கடுகைத் தாளித்து பெருங்காயத்தைப் பொரித்துச் சேர்க்க வேண்டும். கடைசியாக அரிசிமாவைக் கரைத்துவிட்டு கறிவேப்பிலை போட்டு இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.