கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஆஹா! அழகு!

உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். உலர்ந்த சருமத்தை இதமாக்கும். வெள்ளரிக் கூழை பூசிக் கழுவி வர முகம் பளிச்சிடும். கண்களுக்கு

News image
Updated On :16 மார்ச் 2013, 9:35 am

கீதா ஹரிஹரன்

தர்பூசணி: இப்பழத்தில் வைட்டமின் "ஏ', "பி', "சி' நிறைந்த அளவில் இருக்கிறது. தர்பூசணி சருமம் பொலிவு இழப்பதை அகற்றும்.

பால்: சருமத்தை சுத்தம் செய்து புதிய செல்கள் வேகமாக உருவாக உதவும்.

மஞ்சள்: மஞ்சளில் மருத்துவப் பண்புகள் நிறைய உண்டு. சரும குறைகளை நீக்கி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

தக்காளி: இறந்த செல்களை அகற்றி மேனியை பளபளப்பாக்கும்.

கோதுமை மாவு: இரும்புச்சத்து நிறைந்த கடலைமாவு போலவே பயன்படும். உடலின் அழுக்குகளை அகற்ற உதவும்.

பாதாம்: எண்ணெய் நிறைந்த பாதாம் ஈரப்பதத்தை சருமத்துக்கு மீட்டுத் தரும்.

வெள்ளரி: உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். உலர்ந்த சருமத்தை இதமாக்கும். வெள்ளரிக் கூழை பூசிக் கழுவி வர முகம் பளிச்சிடும். கண்களுக்கு சுற்றியுள்ள கருவளையங்கள் மறைய கண் மேல் வைக்கலாம்.

பப்பாளி: சரும செல்களை புதுப்பிக்க, கருமையை குறைக்க உதவும்.

மாம்பழம்: மேனி முதுமை அடைவதை தடுக்கும்.

தேன்: சருமத்தை பொலிவாக்குகிறது.

வாழைப்பழம்: இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம் போன்ற ஏராளமான ஊட்டப் பொருள்கள் உள்ளன. வாழைப்பழத்தை சருமத்தில் பூசி வர சருமம், மென்மை அடைந்து இளமையும், ஆரோக்கியமும் பெறும்.

எலுமிச்சை: நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் எலுமிச்சைக்கு உண்டு. பொடுகு தொல்லைக்குத் தீர்வாகும். சருமத்தை இறுக்கம் அடையச் செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.