சென்னை ராயப்பேட்டை தாண்டவராயன் தெருவை ஒட்டிச் செல்லும் சண்முகமுதலி தெருவிலிருந்த வீட்டை, கடைசிக் காலத்தில் விற்க வேண்டிய நிலை கலைவாணர் என்.எஸ்.கே.வுக்கு ஏற்பட்டது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அதை விற்கலாம் என்ற பேச்சு வந்தது. வாயளவில் ஒரு தொகையும் பேசப்பட்டது. பணம் கை மாறவில்லை. பத்திரம் எதுவும் முடியவில்லை. அதற்குள் ஒரு மார்வாடி அதிகத் தொகைக்கு அவ்வீட்டைக் கேட்டார். கலைவாணருக்கும் பணத் தேவை அதிகம்தான்.
சில நண்பர்கள் மார்வாடிக்கு விற்கும்படி தூண்டினர். ஆனால் கலைவாணர் மறுத்துவிட்டார். ""இந்த வீடு நீண்ட நாள்களாக நான் வசிக்கும் வீடு. இதை விற்ற பிறகு எப்போதாவது இந்தப் பக்கம் வரும்போது "நம்முடைய பழைய வீடு இது. ஒரு மார்வாடிக்குப் போய்விட்டதே' என்று நினைக்க நேர்ந்தால் மனம் வருத்தப்படும்.
அதே சமயம் சிவாஜி இந்த வீட்டில் இருந்தால் "நம்முடைய வீட்டில் இப்போது தம்பி சிவாஜி இருக்கிறார்' என்றால் அது வருத்தமாகத் தோன்றாது. மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அல்லவா? உள்ளே போகவும் மனம் கூசாது'' என்று அதிகப் பணத்திற்கு மார்வாடிக்கு விற்க மறுத்துவிட்டார்.
("கலைவாணர் வாழ்வில் நகைச்சுவைகளும்,
சிந்தனைகளும்' நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!

ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகும் பிளாஸ்ட்!

”ஒரு வார்த்தை சொல்லியிருந்தால்... Vijay துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” | DMDK | TVK

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



