சமூக வலை தளங்களில் என் ரசிகர்கள், மற்ற இசையமைப்பாளர்களின் ரசிகர்ளோடு மோதிக் கொள்வதை அறிந்து வருத்தப்படுகிறேன். யாருக்கு யாரும் எதிரியில்லை. எல்லாருமே நட்புடன்தான் இருந்து வருகிறோம். எனக்கு யாரிடமும், எந்த ஈகோவும் கிடையாது. எல்லாருக்குமே நம் இசையை நான்கு பேர் ரசிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். அதற்காகத்தான் எல்லாரும் வேலை பார்க்கிறார்கள். அதே ஆர்வத்துடன்தான் நானும் வேலை பார்த்து வருகிறேன். "மரியான்' படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நட்பு எல்லா இசையமைப்பாளர்களுடனும் தொடரும். என் இசை ரசிகர்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். - "தங்க மீன்கள்' இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா.
விஜய்யுடன் "ஜில்லா', கார்த்தியுடன் "ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். பெரிய நிறுவனங்கள் தங்கள் படங்களில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றன. அதற்கு காரணம்... சம்பளத்தை அவர் 1 கோடியாக உயர்த்தியதுதான் என கூறப்படுகிறது. இதனால் தமிழ்ப் படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்வதில் தயக்கம் உள்ளது. தெலுங்கில் ராம் சரணுடன் "நாயக்', ஜூனியர் என்.டி.ஆருடன் "பாட்ஷா' என இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் இருந்தன. அப்படங்கள் கமர்ஷியல் வெற்றி பெற்றாலும் காஜலுக்கு புதிய வாய்ப்புகள் இல்லை.
இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் "கஹாணி'. இப்படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. கர்ப்பிணி ஒருவர் கணவரைத் தேடி அலையும் கதாபாத்திரம். இதே காட்சிகளில் தற்போது நயன்தாரா கர்ப்பிணி போல் வேடம் அணிந்து நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. நயன்தாரா நடித்த காட்சிகள் கடந்த வாரம் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டன. பெரும்பாலான காட்சிகளுக்கு செட் போடப்பட்டிருந்தாலும், முக்கியமான சில காட்சிகளை ஐதராபாத் சாலைகளில் படமாக்கினர்.
சுப்பிரமணியபுரம்' படத்தில் அறிமுகமானவர் சுவாதி. இவர் நடிப்பில் தெலுங்கில் "சுவாமி ரா ரா', மலையாளத்தில் "ஆமென்' படங்கள் சமீபத்தில் வெளியாகின. முதல் படமான "ஆமென்' ஹிட்டாகியுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். ""தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முதல் படமே ஹிட்டாகிவிட்டன. "லண்டன் ப்ரிட்ஜ்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறேன். மற்றொரு மலையாளப் படத்தில் தொடர்ந்து 2 மாதங்கள் வெளிநாட்டில் தங்கி ஷூட்டிங்கில் பங்கேற்க கேட்டார்கள். அந்த விஷயத்தில் கொஞ்சம் யோசிக்கிறேன். தெலுங்கிலும் சில கதைகளை கேட்டு வருகிறேன். ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை. அதியமான் இயக்கத்தில் "அமளி துமளி' படத்திலும், "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களில் நடிக்கிறேன்'' என்றார் சுவாதி.
ராஜாஸ், சென்ட்ராயன், குபேரன், ஓவியா உள்ளிட்டோர் நடிக்கும் படம் "மூடர் கூடம்.' இயக்குநர் சிம்பு தேவனின் உதவியாளர் நவீன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து இயக்குநரிடம் பேசுகையில், ""எவ்வளவுதான் அறிவாளியாக இருந்தாலும், ஏதாவது முட்டாள்தனமான காரியத்தை செய்து விட்டு வருத்தப்படுவது உண்டு. நான்கு முட்டாள்கள் செய்யும் காரியம் யார் யாருக்கு என்னென்ன பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை. இயக்குநர் பாண்டிராஜ். ஒரு நல்ல படம் எல்லோரையும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை வெளியிடுகிறார்'' என்றார் இயக்குநர் நவீன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிகாரிகளின் உள்நாட்டுப் பயணச் செலவுகளில் 25 % குறைப்பு: தில்லி அரசு நடவடிக்கை
பொது சிவில் சட்ட மசோதா: அஸ்ஸாம் சட்டப்பேரவையில் அறிமுகம்

மத்திய கிழக்கு போா்ச்சூழல்: முன்னணி நிறுவனங்கள் திணறும் சூழலில் சேவையை அதிகரிக்கும் ஆகாசா ஏா்!







