புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சிப்பியல்ல... கலைப் பொருட்கள்! சம்சியா பானு

கடற்கரைக்குச் செல்கிறோம். கடற்கரை மணலில் நம் பாதங்களில் மிதிபடுகின்றன சிப்பிகள். அவற்றை நாம் கவனிப் பதில்லை.

News image
Updated On :10 நவம்பர் 2013, 2:56 am

ந. ஜீவா

கடற்கரைக்குச் செல்கிறோம். கடற்கரை மணலில் நம் பாதங்களில் மிதிபடுகின்றன சிப்பிகள். அவற்றை நாம் கவனிப்
 பதில்லை.
 ஆனால் சிப்பிகளைப் பயன்படுத்தி விதவிதமான கலைப் பொருட்களைச் செய்கிறார் சம்சியா பானு. அதுமட்டுமல்ல, பிறருக்கும் அந்தக் கலையைக் கற்றுத் தருகிறார்.
 சென்னை நீலாங்கரையில் உள்ள
 அவருடைய வீட்டில் அவரைச் சந்தித்துப்
 பேசியபோது...,
 ""நான் ஓர் ஓய்வுபெற்ற பேராசிரியை. படித்தது பயோ கெமிஸ்ட்ரி. ஆனால் சிறுவயதில் இருந்தே ஓவியத்தில், கலைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம். 2008 இல் கல்லூரிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் நான் முழுமூச்சாக சிப்பிகளைப் பயன்படுத்தி கலைப் பொருட்கள் செய்வதில் இறங்கிவிட்டேன்.
 கடலுக்குச் செல்லும்போது சிப்பிகளைப் பொறுக்கி வந்து, அவற்றைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள பொருட்களை அழகுபடுத்த ஆரம்பித்தேன். வீட்டில் உள்ள மண்பானையில் ஓட்டினேன். போட்டோ ஃபிரேமில் ஒட்டி அதை அழகாக்கினேன். மரக்குச்சிகளில் ஓட்டி சிப்பிகளை மலர்களாக்கினேன். இப்படிச் செய்து கொண்டிருக்கும்போது, ஏப்ரகாம் ராமன் என்பவர் சிப்பி கலைப் பொருட்கள் செய்யக் கற்றுக் கொடுக்கும் பயிற்சி பட்டறை நடத்துவதாகக் கேள்விப்பட்டேன். அங்கே போய் பயிற்சி பெற்றேன்.
 சிப்பியில் கலைப்பொருட்களைச் செய்ய ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. இரவு
 2 மணி வரை ஆர்வமாகக் கண் விழித்துச் செய்து கொண்டிருப்பேன். ஆகமஉ ஆஉஅஇஏ
 நஏஉககந என்ற பெயரில் இணைய தளங்களில் நான் உருவாக்கிய கலைப் பொருட்களின் படங்களை வெளியிட்டேன். அவற்றைப் பார்த்துவிட்டு, பலர் தங்களுக்கு வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தனர். அவர்களுக்குச் செய்து கொடுக்கிறேன்.
 வேர்ல்டு கிராஃப்ட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பில் நான் உறுப்பினர். அவர்கள் சென்னையில் நடத்தும் கண்காட்சிகளில் பங்கேற்பேன். மகளிர் மன்றங்கள் நடத்தும் கலைப் பொருள் கண்காட்சிகளிலும் பங்கேற்பேன். அவற்றில் நான் உருவாக்கிய கலைப்பொருட்கள் விற்பனையாகும்.
 அதுமட்டுமல்ல, மாதத்துக்கு ஒரு முறை இந்தக் கலையைப் பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறேன்.
 என்னிடம் கற்றுக் கொண்டவர்கள் சிப்பியில் காதணி, தலையில் வைக்கும் கிளிப், வீட்டில் பயன்படுத்தக் கூடிய பேனா ஸ்டாண்ட், விசிட்டிங் கார்டு, டிஸ்யூ பேப்பர் வைக்கும் ஸ்டாண்ட் போன்ற எளிய பொருட்களில் இருந்து, பல அரிய சிப்பி கலைப் பொருட்களையும் செய்து அவற்றை விற்பனை செய்து பணமீட்டுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.