கல்விச் சேவையில் பெரியவர்!
திருவண்ணாமலை மாவட்டம் குருவிமலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, தற்சமயம் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருபவர் நா.சுப்ரமண்யன்.


திருவண்ணாமலை மாவட்டம் குருவிமலை கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, தற்சமயம் சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வருபவர் நா.சுப்ரமண்யன். 70 வயது மதிக்கத்தக்க இவர், தென்னக இரயில்வேயில் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்புத்துறையில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றி, கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றவர். கடந்த 2001ஆம் ஆண்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளாக,சத்தமின்றி இவர் பல கல்விச் சேவைகளைச் செய்து வருகிறார்...
வண்ணக்கம்பாடி, குருவிமலையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிகளிலும், தான் முதன்முதலில் பணியாற்றிய கீழ்பெண்ணாத்தூர் தொடக்கப்பள்ளியிலும், சென்னை விருகம்பாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய மூன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு "லிப்கோ'திருக்குறள் (தமிழில் உரையுடன்),"லிப்கோ' அகராதி (ஆங்கிலம் - தமிழ்) மற்றும் டி.டி.கே (தமிழ்) உலக வரைபட புத்தகம்,மேலும் பள்ளிகளுக்கு தேவையான மரப்பலகைகள், பிளாஸ்டிக் டிரேக்கள், இலக்கணப் புத்தகங்கள், நூலகங்களுக்குத் தேவையான புத்தகங்கள், அலமாரி மற்றும் பள்ளியின் புரவலர் திட்டம் போன்றவற்றிற்காக மாதந்தோறும் தனது ஓய்வூதியத்தில் கிடைக்கும் தொகையில் இருந்து ஒரு பகுதியை தனது குடும்பத்தாரின் ஒத்துழைப்புடன் செலவிட்டு வழங்கி
வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், கீழ்பெண்ணாத்தூரில் தாய், தந்தையை இழந்த 2 பெண் குழந்தைகளுக்கும், குருவிமலையில் ஓர் பெண் குழந்தைக்கும் தேவையான புத்தகங்களையும், ஆடைகளையும் கொடுத்து உதவி வருகிறார்.
அதே போன்று ""பாரத வங்கியின் சமுதாயப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ்'' உதவி தேவையுள்ள பள்ளிகளையும், அங்கன்வாடிகளையும் அடையாளம்காட்டி இதுவரை 23 கூரை மின் விசிறிகளும், 5 குடி தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரங்களும் கிடைக்க வழி வகுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...