குழந்தைகளின் உடல் எடையைக் கவனியுங்கள்!
""எனக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டது. முதுகு வலி. ஒரே சோர்வாக இருக்கிறது'' இப்படிச் சொல்பவருக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும் என்றுதானே


""எனக்கு சர்க்கரை வியாதி வந்துவிட்டது. முதுகு வலி. ஒரே சோர்வாக இருக்கிறது'' இப்படிச் சொல்பவருக்கு வயது நாற்பதுக்கு மேல் இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? சொன்னால் நம்பமாட்டீர்கள். இதைச் சொல்பவர்கள் : 13 - 14 வயது சிறுவர், சிறுமிகள்.
இதற்கு என்ன காரணம்? என்று சென்னை நுங்கம்பாக்கத்தில்
உள்ள ஞஆஉநஐபவ ஊஞமசஈஅபஐஞச ஐசஈஐஅ- இன் நிறுவனரும், இரைப்பை குடல் இயல் மருத்துவ அறுவைச் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ரவீந்திரன் குமரனிடம்
கேட்டோம்:
""இன்று குழந்தைகளுக்கும் சர்க்கரை வியாதி வருவதற்கான காரணங்களில் ஒன்று, அதிக எடை. அதிக எடையால் பத்து வயதிலேயே சிறுமிகள் பூப்படைந்துவிடுகிறார்கள். அதிக எடையுள்ள சிறுவர், சிறுமிகளைப் பிற மாணவர்கள் கேலி செய்கிறார்கள். இதனால் மன அழுத்தம். பிற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. விளையாடச் சென்றாலும் அவர்களைப் பிறர் விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில்லை. பிறரால் ஒதுக்கப்படுவதாக உணர்கிறார்கள்.
குழந்தைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய வெளியுலக அனுபவங்கள், பிறருடன் பழகும் அனுபவங்கள் எவையுமே அதிக எடை உள்ள குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.
அதிக எடை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா அதிக எடை உள்ளவர்களாக இருந்தால், குழந்தைகள் அதிக எடையுள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள். இந்தப் பரம்பரை அதிக உடல் எடைப் பிரச்னையைத் தவிர்க்க முடியாது.
ஆனால், உடல் உழைப்பு குறைவு, தற்போதைய உணவுமுறை ஆகியவற்றால் வரக் கூடிய அதிக உடல் எடையை நாம் தடுக்க
முடியும்.
பள்ளிக்கு இன்று குழந்தைகள் நடந்து செல்வதில்லை. வீட்டு வாசலில் வந்து நிற்கும் பள்ளி வாகனங்கள். பஸ்கள். பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை. அப்படியே இருந்தாலும் உடற்பயிற்சி வகுப்புகளைத் தவிர, பிற நேரங்களில் பிள்ளைகள் விளையாடுவது இல்லை. அதிக மார்க் எடுப்பதற்கே இப்போது அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
பிள்ளைகள் வீட்டுக்கு வந்தாலும், அவர்களுடைய எல்லா வேலைகளையும் பெற்றோரே செய்து தருகிறார்கள். பள்ளி முடிந்து வந்ததும் டியூஷன். அதைவிட்டால் பாட்டு கிளாஸ், இந்தி கிளாஸ். விளையாட்டு என்றால் தெருவில் பிற பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாடுவதல்ல. கம்ப்யூட்டர் கேம்ஸ், வீடியோ கேம்ஸ், செல்போனில் கேம்ஸ் போன்றவைதான் விளையாட்டு. உட்கார்ந்த இடத்திலேயே குழந்தைகள் டென்ஷனாகிக் கொண்டிருக்கிறார்கள்.
பெற்றோரைப் பார்த்துத்தான் குழந்தைகள் எதையுமே கற்றுக் கொள்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர் உடற்பயிற்சி என்றால் என்ன விலை என்று கேட்பவர்கள். காலையில் எழுந்து நடைப் பயிற்சி செய்யும் பெற்றோர் குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் செல்ல மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் எப்படி உடற்பயிற்சி செய்வார்கள்?
சில வீடுகளில் சாப்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நிறைய நொறுக்குத் தீனிகளை வீட்டுக்கு வாங்கி வருவார்கள். எண்ணெய்யில் பொரித்தது, வறுத்ததை அதிகம் உண்பார்கள். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை வீட்டில் நிரப்புவார்கள். உப்பும்,காரமும் உள்ள சிப்ஸ்களைக் குழந்தைகளுக்கு வாங்கித் தருவார்கள். வேக வைக்கப்பட்ட அசைவ உணவுகளை விட வறுத்த, பொரித்த அசைவ உணவுகளை வீட்டில் அதிகம் சமைப்பார்கள். ஹோட்டல்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று அப்படிப்பட்ட உணவுகளையே வாங்கித் தருவார்கள். விதவிதமான ஐஸ் க்ரீம்களால் குழந்தைகளை மூழ்கடிப்பார்கள். டிவி விளம்பரங்களில் வருகின்ற தின்பண்டங்களை வாங்கித் தரும்படி குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். இவையெல்லாம் அதிக உடல் எடைக்குக் காரணங்கள்.
அதுபோல குளிர்பானங்களை அருந்துவது இப்போது அதிகமாகி உள்ளது. ஒரு பாட்டில் குளிர்பானத்தில் 300 கலோரி உள்ளது. இந்த கலோரி உடலில் சேர்ந்து கார்போஹைடிரேட்டாக,சர்க்கரையாக, கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கக் செய்கிறது. இந்த 300 கலோரியை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டுமானால், ஓடுபொறியில் (பதஉஅஈஙஐகக) ஒரு மணி நேரம் ஓட வேண்டும். அந்த அளவுக்கு உடல் உழைப்பு இப்போது இருக்கிறதா?
குளிர்பானங்களில் உள்ளது வெற்று கலோரி. அதில் புரதச் சத்து இல்லை. இரும்புச் சத்து இல்லை. இவ்வாறு வெற்று கலோரி உள்ள நிறைய இனிப்புகள், தின்பண்டங்களைத்தான் நாம் அதிகம் விரும்பி உண்கிறோம். குழந்தைகளுக்கும் பழக்குகிறோம்.
நமது உணவு முறை, பழக்க வழக்கங்கள், வாழ்க்கைமுறை இவற்றில் மாற்றங்களைச் செய்தால்தான் அதிக உடல் உடையைக் குறைக்க முடியும்.'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...