புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

எளிதாக ஆதார் அட்டை பெறலாம்!

முக்கியமாக இருந்த ஒன்று திடீரென்று முக்கியத்துவம் இழந்துவிடுகிறது. முக்கியமில்லாமல் இருந்த ஒன்று திடீரென்று

News image
Updated On :30 நவம்பர் 2014, 7:21 am

ந. ஜீவா

முக்கியமாக இருந்த ஒன்று திடீரென்று முக்கியத்துவம் இழந்துவிடுகிறது. முக்கியமில்லாமல் இருந்த ஒன்று திடீரென்று முக்கியமானதாக ஆகிவிடுகிறது. இப்போது முக்கியமாக ஆகியிருப்பது ஆதார் அட்டை. தமிழகத்தில் பெரும்பாலானோர் ஆதார் அட்டையை வாங்கிவிட்டனர். வாங்காதவர்கள் இப்போது வாங்குவதற்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். பாஸ்போர்ட், ரேஷன்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் அவசியம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? என்று நினைக்கின்றனர். ""ஆதார் அட்டை பெறுவதற்காக அலைய வேண்டிய தேவை இல்லை. அதை எளிதாகப் பெறலாம்'' என்கிறார் மத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறையின் இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணா ராவ். சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவரைச் சந்தித்தோம்.

ஆதார் அட்டை தரும் பணி இப்போதும் நடைபெறுகிறதே, என்ன காரணம்?

 2011 நவம்பர் மாதம் முதல் ஆதார் அட்டைக்கான எங்களுடைய வேலை தொடங்கிவிட்டது. இதுவரை 5 கோடியே 1 லட்சம் பேர் ஆதார் அட்டை பெற்றுவிட்டனர். இது 74.32% ஆகும்.

  ஆதார் அட்டைக்கான பணி நடந்து கொண்டிருக்கும்போது வெளியூர் சென்றுவிட்டவர்களுக்காக, வேறு வேலை காரணமாக அந்த நேரத்தில் ஆதார் அட்டை பெற முடியாதவர்களுக்காக - அதாவது விடுபட்டுப் போனவர்களுக்காக - ஆதார் அட்டை தரும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.

ஆதார் அட்டை பெறுவது ரொம்பவும் கடினம் என்கிறார்களே?

 சிலர் நினைப்பதுபோல ஆதார் அட்டை பெறுவது கடினமானதல்ல. தமிழகம் முழுவதும் 470 நிரந்தர மையங்கள் இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் 15 மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், 35 யூனிட் அலுவலகங்களை ஏற்படுத்தியுள்ளோம். 4 வார்டு சேர்ந்தது ஒரு யூனிட்.

 நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களில் உள்ளவர்களும் ஆதார் அட்டையை எளிதாகப் பெறுவதற்கு வசதியாக ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் இதற்கான மையங்கள் செயல்படுகின்றன.

ஆதார் அட்டை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆதார் அட்டை பெறுவதற்கு ஒருவர் அவர் வாழும் பகுதியில் உள்ள ஆதார் அட்டை மையத்துக்குச் சென்று அங்கு தரும் விண்ணப்ப மனுவைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களுடைய அடையாள அட்டை ஏதேனும் ஒன்றைக் காட்ட வேண்டும்.

 ஆதார் அட்டை பெறுவற்கு விண்ணப்பித்தவுடன், அந்த அலுவலகத்தில் கண் கருவிழி, கைவிரல் ரேகையை பயோமெட்ரிக் பதிவு செய்ய என்றைக்கு வரச் சொல்கிறார்களோ அன்றைக்கு அவசியம் சென்று பதிவு செய்து கொண்டால், ஆதார் அட்டை விரைவில் வீடு தேடி வரும்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் இருந்த குழந்தை இப்போது 5 வயதைத் தாண்டியிருக்கும்.  5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கும் இப்போது ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வேறு வீட்டுக்கு மாறிவிட்டால் ஆதார் அட்டை கிடைப்பதில் சிரமம் ஏற்படுமா?

 நிறையப் பேருக்கு இதில் நிறையச் சந்தேகங்கள் உள்ளன. "நாங்கள் முதலில் வேறு இடத்தில் குடியிருந்தோம். அந்த இடத்தில் வாங்கிய ரேஷன் கார்டு உள்ளது. அதில் பழைய முகவரிதான் இருக்கிறது. அந்த ரேஷன் கார்டை அடையாள அட்டையாகக் காட்ட முடியுமா? என்று கேட்பார்கள். இதுபோல அடையாளத்துக்கான சான்றுகளாகப் பயன்படும் டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் எல்லாவற்றிலும் இருப்பது வேறு முகவரி. நாங்கள் இப்போது வசிப்பது வேறு முகவரியில் என்றெல்லாம் யோசிப்பார்கள்.

 தற்போது ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கும் முகவரிக்கான அட்ரஸ் ஃபுரூப்பை நாங்கள் கேட்பதில்லை. இதற்கு முன் வாழ்ந்த இடத்துக்கான அடையாள அட்டை இருந்தால் போதும்.

ஆனால் ஆதார் அட்டை கொடுக்கும்போது இப்போதுள்ள முகவரியைக் குறிப்பிட்டுத்தான் கொடுப்போம். எனவே ஆதார் அட்டைக்காக விண்ணப்பிக்க நினைப்பவர்களின் முகவரியில் மாற்றம் இருந்தால், அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

ஆதார் அட்டைக்கான ரசீது தொலைந்துவிட்டால்?

ஆதார் அட்டை பெறுவதற்காக வழங்கப்பட்ட ரசீதைக்  காட்ட வேண்டும். அந்த ரசீது தொலைந்துவிட்டதே? எப்படி ஆதார் அட்டை பெறுவது என்று சிலர் கலங்குவார்கள். அப்படியெல்லாம் கலங்கத் தேவையில்லை. ரசீது தொலைந்தாலும் ஆதார் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.