கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

1 மணி நேரத்தில் 3500 சப்பாத்திகள்!

1 மணி நேரத்தில் 3500 சப்பாத்தி, 1500 புரோட்டா, 3000 இடியாப்பம் தயாரிக்க முடியுமா?  சினிமாவாவில் வரும் மாயாஜால காட்சிகளில் வேண்டுமானால் முடியும் என்கிறீர்களா? உண்மையாகவே,

News image
Updated On :9 ஆகஸ்ட் 2015, 7:59 am

ந. ஜீவா

1 மணி நேரத்தில் 3500 சப்பாத்தி, 1500 புரோட்டா, 3000 இடியாப்பம் தயாரிக்க முடியுமா?  சினிமாவாவில் வரும் மாயாஜால காட்சிகளில் வேண்டுமானால் முடியும் என்கிறீர்களா? உண்மையாகவே, ஒரு விநாடியில் ஒரு சப்பாத்தி வந்து விழுகிற மாதிரி இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார் டி.பாலகிருஷ்ணன்.

கோவை குப்பேபாளையத்தில் உள்ள அவருடைய ஆர்பி இன்ஜினியரிங் இண்டஸ்டிரியில் தான் இந்த சப்பாத்தி, புரோட்டா, இடியாப்ப இயந்திரங்கள் உருவாகின்றன.  இந்த அதிவேக சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம் இயந்திரங்கள் எல்லாம் நான்கைந்து பேர் உள்ள குட்டி குடும்பத்துக்கு எல்லாம் தேவைப்படாது. அப்புறம் இந்த இயந்திரங்களை யார்தான் வாங்குகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளோடு டி.பால

கிருஷ்ணனை அணுகினோம்:

""நான் பி.இ. எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்துவிட்டு மின்சார வாரியத்தில் 1 ஆண்டு வேலை செய்தேன். தினமும் காலையில் வேலைக்குப் போய் வழக்கமான வேலையைச் சம்பளம் வாங்குவதற்காகச் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. வேலையிலிருந்து விலகி பாரி அக்ரோ என்ற நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குச் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் 1996 இல் இயந்திரங்களைச் செய்து தரும் நிறுவனத்தைத் தொடங்கினேன்.

 இந்த இயந்திரம் என்றில்லை, யாருக்கு என்ன தேவையிருக்கிறதோ, அவர்களுடைய தேவைக்குத் தகுந்த மாதிரியான இயந்திரத்தை வடிவமைத்துச் செய்து கொடுப்பேன்.

 இவ்வாறு பலவிதமான - நிறைய இயந்திரங்களை உருவாக்கிய அனுபவத்தில்தான் சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரங்களையும் உருவாக்கினேன்.

சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம், சப்பாத்தி மாவைப் பிசைந்து, உருண்டை பிடித்து, தேய்த்து, சப்பாத்தி வடிவில் வெட்டி, சப்பாத்தி சுட்டுக் கொடுத்துவிடும். அதுவும் ஒரு மணி நேரத்தில் 3500 சப்பாத்திகள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் சப்பாத்தி செய்யத் தேவையான மாவு, தண்ணீர், உப்பு போன்றவற்றைப் போட வேண்டியதுதான்.

Story image

 சப்பாத்தி, புரோட்டா, இடியாப்பம் தயாரிக்கும் இயந்திரங்களுடன் அவற்றின் செய்முறைக் குறிப்புகளையும் கொடுத்துவிடுகிறோம். இயந்திரத்தை வாங்குபவர் அந்த செய்முறைக் குறிப்புகளின்படியும் செய்யலாம். தங்கள் விருப்பம் போலவும் செய்யலாம்.

  உதாரணமாக சிலர் சப்பாத்தி மாவைக் கெட்டியாகப் பிசைந்து செய்வார்கள். சிலர் கொழகொழவென்று தண்ணீர் அதிகமாக விட்டுச் செய்வார்கள். மாவு எப்படி இருந்தாலும் - ஏன் கஞ்சி மாதிரி இருந்தாலும் கூட} எங்களுடைய இயந்திரம் சப்பாத்திகளைச் சுட்டுக் கொடுத்துவிடும். இயந்திரத்தை வாங்குபவர்களுக்கு விருப்பமான சப்பாத்தி கிடைத்துவிடும். இதேபோன்றுதான் புரோட்டா, இடியாப்பம் இயந்திரங்களும். வாங்குபவரின் விருப்பத்தை நிறைவு செய்யும்விதமாக  உருவாக்கப்பட்டுள்ளன.

 சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரத்தைத் தயாரிக்கும் முன்பு நானே ஒரு சாலையோர உணவகத்தில் போய் சப்பாத்தி செய்யும் வேலையைச் சிலநாட்கள் செய்திருக்கிறேன். புரோட்டா சுட்டிருக்கிறேன். அப்படி எல்லா நுட்பங்களையும் தெரிந்து கொண்டு, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இயந்திரத்தை உருவாக்கினேன்.

  நாங்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, இங்கிலாந்து, அரபு நாடுகள் உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையாகின்றன. 140 வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளில் உள்ளனர்.

 அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 4 ஆயிரம் பேர் வேலை செய்வார்கள். அவர்களுக்கு காலை, இரவு ஆகிய இருவேளைகளுக்கும் குறைந்தது 12 சப்பாத்திகள் தேவை என்றால், ஒரு நாளைக்கு 48 ஆயிரம் சப்பாத்திகள் தேவைப்படும். அப்படிப்பட்ட நிறுவனங்கள்தாம் எங்களிடம் இயந்திரங்களை வாங்குகிறார்கள்.

  நாங்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் எல்லாம் ஆட்டோமேடிக் உயர் தொழில்நுட்பம் கொண்டவை. இயந்திரம் வேலை செய்யவில்லை என்றால், இயந்திரத்தை லேப்டாப்புடன் பொருத்தி, இன்டர்நெட் இணைப்புக் கொடுத்துவிட்டால் போதும், உலகின் எந்த மூலையில் அந்த இயந்திரம் இருந்தாலும், அதில் என்ன பழுது என்று கோயம்புத்தூரில் இருந்து கொண்டே நாங்கள் கண்டுபிடித்துவிடுவோம். இங்கிருந்தே சரி செய்து கொடுத்துவிடுவோம். ஒரு நட்டை டைட் பண்ண வேண்டும்; அதனால்தான் இயந்திரம் இயங்கவில்லை என்றால், இங்கிருந்து போனில் சொன்னால், அங்கே நட்டை டைட் பண்ணிவிடுவார்கள். பெரிய அளவுக்குப் பழுது என்றால்தான் நேரில் சென்று சரி செய்ய வேண்டியிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலை  இதுவரை எங்களுக்கு ஏற்பட்டதில்லை.

  கேண்டீன் நடத்துபவர்கள், கேட்டரிங் செய்பவர்கள், பாக்கெட் உணவுகளைத் தயாரித்து விற்பவர்கள், தொழிற்சாலைகள் நடத்துபவர்கள்தாம் எங்களுடைய தற்போதைய வாடிக்கையாளர்கள்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.