விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆர்.சங்கர்கணேஷ், ஊரில் ஏதாவது திருவிழா என்றால், திருவிழா நடைபெறும் கோயிலுக்கு தானே வலியச் சென்று ஏதாவது வேலை செய்ய வேண்டுமா? எனக் கேட்டு, கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது, அன்னதானத்தில் பரிமாறுவது என எந்த வேலையானாலும் செய்கிறார்.
ஆனால் இதுபோன்ற சேவைகளுக்குப் பணம் வாங்க மாட்டார். மக்கள் பிரச்னைக்காக ஊர்வலமா? அல்லது விழிப்புணர்வு சைக்கிள் நடைப் பயணமா? மரகன்றுகள் நடுதல், ரத்ததான முகாம் என பல்வேறு சமூகசேவைகளா? எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
இது குறித்து சங்கர்கணேஷிடம் கேட்டபோது:
""கடந்த 11 ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறேன். நான் பரிசுப் பொருள்கள் வியாபாரம் செய்து வருகிறேன். அதில் கிடைக்கும் வருமானம் எனது வாழ்க்கைக்குப் போதுமானதாக உள்ளது. பிறகு எதற்குப் பணம்? ராஜபாளையத்தில் நடைபெறும் கண்தான முகாம், ரத்ததான முகாம், ஸ்ரீராமகிருஷ்ணர்-விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன்.
கடந்த பிப்ரவரி மாதம் புதுதில்லியில் நடைபெற்ற ஆதிவாசி, மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நடைபெற்ற விழிப்புணர்வு யாத்திரையில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டேன்.
நேரு யுவகேந்திராவின் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தேசிய சேவை முகாமில் கலந்து கொண்டுள்ளேன்.
பணம் வாங்காமல் சேவை செய்வதால் எனக்குப் பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்துள்ளன. இதுவே எனக்கு மனதிருப்தியளிக்கிறது'' என்றார் சங்கர்கணேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்லாமியா்களுக்கு என்றும் அதிமுக உறுதுணையாக இருக்கும்

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடம் ரூ.44 லட்சம் பறிமுதல்

ஆலங்குளத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பேன்: மனோஜ் பாண்டியன்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


