முகத்தில் உள்ள அழுக்கை அகற்ற, வெள்ளரிக்காய்ச் சாறுடன் பால் கலந்து பஞ்சைக் கொண்டு முகத்தில் கீழிருந்து மேலாக அழுத்தித் துடையுங்கள். முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் பளபளவென்று இருக்கும்.
கடலை மாவையும், கோதுமை மாவையும் சம எடையில் எடுத்து நன்கு சலித்து, அதைக் காய்ச்சிய பாலைக் கொண்டு விழுதாக்கி, முகம், கை, கால்களில் தடவிக் குளித்தால், அழகு கூடுவதோடு, அழுக்கிருந்தால் அதுவும் வெளியேறும்.
வெட்டி வேரைக் காய வைத்துப் பொடித்து, ஆலிவ் ஆயிலும் சேர்த்து நீருடன் கலந்து முகத்தில் தடவி வந்தால், முகத்திலுள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.
பாசிப் பயறு மாவுடன், கஸ்தூரி மாவு, எலுமிச்சம் சாறு, சிறிது பால் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்தபின் கழுவினால், பூவாய் பொலிவோடு திகழும் முகம்.
திராட்சைச் சாறையோ, தர்பூசணிச் சாறையோ படுக்கப் போகும் முன்பாக முகத்தில் தடவி, காலையில் கழுவினால், முகம் மென்மையாகும்.
எருமைப்பாலின் ஏடை எடுத்து இரவு படுக்கைக்கு முன் முகத்தில் தடவி, காலை கடலை மாவு போட்டோ, சோப்பு போட்டோ கழுவ, முகம் கண்ணாடியாய் மின்னும்.
சிறிதளவு இளநீரோடு, தேவையான அளவில் பால், சந்தனம் சேர்த்துக் குழம்பாக்கி, இருபது நிமிடம் முகத்தில் பூசி இருந்து, பின் கழுவிப் பாருங்கள், பளபளப்பாக இருக்கும்.
உருளைக்கிழங்கு சாறு இரண்டு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி கடலை மாவையும் கலந்து முகத்தில் தடவி, அது உலர்ந்தபின் கழுவிப் பாருங்கள், முகப் பொலிவோடு இருப்பீர்கள்.
காலையில் எழுந்ததும் ஒரு சொட்டு நல்லெண்ணெயுடன் இரண்டு, மூன்று சொட்டு குளிர்ந்த நீர் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தால், முகம் பளிச்சென்று ஒளிரும்.
குளிப்பதற்கு முன் பாலேட்டை முகத்தில் தடவி, பதினைந்து நிமிடம் கடலை மாவைத் தேய்த்து வந்தால், முகம் பட்டுபோல் பளபளப்பாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

சென்னை ஏரிகளில் 67 சதவீத குடிநீா் இருப்பு

மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் கருணை அடிப்படையில் 1,156 போ் நியமனம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


