பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

முகப்பரு மறைய சில எளிய வழிகள்!

பெண்களின் முக அழகைக் கெடுக்கும் பருக்கள் மறைய மஞ்சள் கிழங்கை நன்றாக இடித்து நல்லெண்ணெய்யில் வதக்கி, பரு உள்ள இடத்தில் இளம் சூட்டில் தடவி வந்தால் மறையும்.

News image
Updated On :17 மே 2015, 6:22 am

அழகுக் குறிப்புகள்

பெண்களின் முக அழகைக் கெடுக்கும் பருக்கள் மறைய மஞ்சள் கிழங்கை நன்றாக இடித்து நல்லெண்ணெய்யில் வதக்கி, பரு உள்ள இடத்தில் இளம் சூட்டில் தடவி வந்தால் மறையும்.

நல்லெண்ணெய்யை முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால், நல்ல பயன் பெறலாம்.

கொழுந்து வேப்பிலையை எடுத்து, அரைத்து பருக்களின் மீது தடவி வர, பருக்கள் மறையும்.

உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி கரும்புள்ளிகள் மீது தடவி வந்தால் அவை மறையும்.

இளநீரில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

சந்தனக் கட்டையை இழைத்து, அக்கலவையுடன் ஜாதிக்காய் சேர்த்து அரைத்து, முகத்தில் பூச, பருக்கள் மறைந்துவிடும்.

நான்கு தேக்கரண்டி வெள்ளரிச் சாற்றோடு ஒரு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் சாற்றையும் கலந்து முகத்தில் தடவி வர, பருக்கள் மறையும்.

சந்தனத்தை அரைத்தவுடனேயே முகத்தில் பரு மற்றும் கரும்புள்ளிகளில் தடவி விடுவதும் நல்லது. கடையில் விற்கும் சந்தன வில்லைகளை இதற்குப் பயன்படுத்தக்கூடாது.

பரு உள்ள இடங்களில் லேசாக அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பைப் பொறுத்துக் கொண்டு சொறியாமல் விரல் நகங்களால் நிரடாமல் இருந்தால், கரும்புள்ளிகள் ஏற்படாது. பருக்களை அழுத்தி தேய்ப்பது, பிதுக்குவது போன்றவற்றால் பருக்களில் உள்ள வெண்மையான கொழுப்பு வெளியேறி அந்த இடம் கரும்புள்ளிகளாக, வடுவாகி விடும். பரு உள்ள இடத்தில் தேய்க்காமல் பிதுக்காமல் விட்டுவிட்டால், தானே கொழுப்பு சமநிலை பெற்றுச் சரியாகிவிடும். ஆகவே பருவை நிரடாதீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.