அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆடைகளில்

மேற்கு மாம்பலத்தில் "மைத்திரி' என்ற பெயரில் ஆடைகளில் பிளாக் பிரிண்டிங் செய்யும் அச்சுக்கலையைப் பயிற்சி அளித்து வருகிறார் அருணா விஜயகுமார். கடந்த பத்து ஆண்டுகளில் பெரும்பாலான பெண்களைச் சிறு தொழ

News image
Updated On :23 மே 2015, 10:39 am

ரிஷி

மேற்கு மாம்பலத்தில் "மைத்திரி' என்ற பெயரில் ஆடைகளில் பிளாக் பிரிண்டிங் செய்யும் அச்சுக்கலையைப் பயிற்சி அளித்து வருகிறார் அருணா விஜயகுமார். கடந்த பத்து ஆண்டுகளில் பெரும்பாலான பெண்களைச் சிறு தொழிலதிபர்களாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. எந்தவித ஆரவாரமுமின்றி அமைதியாக இயங்கி வரும் இவரைச் சந்தித்தோம்:

""சேலைகளில்  டிசைன்கள் பிரிண்ட் செய்யும் அச்சுக்கலையைத் தொழிலாகச் செய்து வருகிறேன். எங்களுக்கு பூர்வீகம் ஆந்திரா. எனது மாமானார் தெலுங்கு சினிமாவில்  துணை நடிகராக இருந்தவர். அந்தக்காலத்தில் தெலுங்கு சினிமா படிப்பிடிப்பு எல்லாம் சென்னையில்தான். ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமா படப்பிடிப்பு ஆந்திராவுக்கே மாறியதும் என் குடும்பத்தார் இங்கே சென்னையிலேயே தங்கிவிட்டனர். அதன்பிறகு பிழைப்புக்கு என்ன தொழில் செய்வது என்றபோது, ஆந்திராவில் இருந்து சேலைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனையைத் தொடங்கினார். அவருக்குத் துணையாக என் கணவர் விஜயகுமாரும் துணி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

நான் திருமணமாகி இங்கே வந்தபோது துணி வியாபாரத்தில் கிடைக்கும் வருமானம் போதவில்லை. அதனால் கூடுதலாக வேறு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஏற்கெனவே துணி வியாபாரம் இருந்ததால் அதை ஒட்டியே ஏதாவது செய்யலாம் என்ற எண்ணம் வந்தது.

 அப்போதுதான் பிளாக் பிரிண்டிங் பற்றி கேள்விப்பட்டேன். என் கணவரிடம் சொன்னபோது அவருக்கும் அதில் விருப்பம் இருந்தது. இதனால் பிளாக் பிரிண்டிங்கை கற்றுக்கொண்டோம். அதன்பிறகு வீட்டில் இருந்தபடியே சுத்தமான பருத்தித் துணிகளை வாங்கிவந்து அதில் பிரிண்டிங் செய்து கொடுக்கத் தொடங்கினோம். அதன்பின்னர் காலமாற்றம் ஏற்பட அதற்குத் தகுந்தாற்போல் நாங்களும் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்காக பட்டுத் துணிகளை வாங்கி அதில் பிரிண்ட் செய்து பார்த்தோம். நல்ல வரவேற்பு கிடைத்தது.  ஆரம்பத்தில் மாங்கா, அன்னம் போன்ற டிசைன்களே இருந்தது. அதிலும் மாற்றம் ஏற்பட்டு நவீன டிசைன்கள் வரத் தொடங்கியது. அதற்குத் தகுந்தாற்போல் நாங்களும் தற்போது உள்ள ஜியாமன்ட்டரி டிசைன்கள், கோலம் டிசைன்கள், வர்லி டிசைன்கள், டிரைபல் டிசைன்கள் என நவீன ரக டிசைன்களுக்கு மாறினோம். அதனை நாங்களே வரைந்து பிளாக் செய்பவர்களிடம் கொடுத்து விதவிதமான பிளாக் செய்து வாங்கிக் கொள்கிறோம்.

 பொதுவாக பிரிண்டிங் சேலை என்றாலே சிலர் துவைத்ததும் பிரிண்டிங் போய்விடும்   என்று வாங்க யோசிப்பார்கள். ஆனால் நாங்கள் இயற்கைச் சாயங்களைப்  பயன்

படுத்துவதால் இது உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதேசமயத்தில் சாயமும் போகாது.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனை அடுத்து தற்போது காட்டன் சேலை, பட்டுச்சேலை, சுடிதார் மெட்டீரியல், டாப்ஸ், நைட்டீஸ், திவான் மெட்டீரியல்ஸ், பட்டுச்சேலை, டேபிள் மேட்ஸ், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள், ஆண்கள் அணிந்து கொள்ளும் டி-சர்ட்ஸ் போன்றவற்றிலும் இந்த டிசைன்களைப் பயன்படுத்துகிறோம்.

 நாங்கள் வீட்டில் வைத்தே பிளாக் பிரிண்டிங் செய்வதைப் பார்த்துவிட்டு எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் இதனைக் கற்றுக் கொடுக்கும்படி கேட்டார்கள். அது தொடரவே, தற்போது கடையைத் தொடங்கி அதில் ஒருநாள் ஒர்க்ஷாப் வகுப்புகளும், வியாபாரமும் செய்து வருகிறோம். 

 அதுபோல சில பட்டுச் சேலைகளில் பார்டர்களின் சாயம் சேலையில் ஒட்டிவிட்டால் அதை நீக்கி, சேலையை மீண்டும் புதுச் சேலையாக மாற்றிக் கொடுக்கிறோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.