முதல் வெற்றி!
மேற்கு வங்கத்தில் நாடியாவில் உள்ளது கிருஷ்ணாகர் பெண்கள் கல்லூரி. இந்தக் கல்லூரியின் முதல்வராக மனாபி பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். ஜுன் மாதம் 9 ஆம் தேதி அவர் பதவி ஏற்க உள்ளார். இதில் என்ன புதுசு என்கிறீர்களா?


மேற்கு வங்கத்தில் நாடியாவில் உள்ளது கிருஷ்ணாகர் பெண்கள் கல்லூரி. இந்தக் கல்லூரியின் முதல்வராக மனாபி பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். ஜுன் மாதம் 9 ஆம் தேதி அவர் பதவி ஏற்க உள்ளார். இதில் என்ன புதுசு என்கிறீர்களா?
மனாபி பானர்ஜி ஒரு திருநங்கை.
20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேராசிரியராக வேலை செய்தவர் மனாபி. திருநங்கை என்பதற்காக எந்தச் சலுகையும் அவருக்குக் காட்டப்படவில்லை. உரிய தேர்வு முறைகளுக்குப் பின்பே அவருக்கு முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது.
மனாபி பிறந்தவுடன் அவருடைய பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் சோம்நாத். அவர் மட்டுமே அந்த வீட்டில் பையன். கூடப் பிறந்தவர்கள் பெண்கள்.
சோம்நாத் வளர ஆரம்பித்தவுடன் தன்னைப் பெண் என்று உணர ஆரம்பித்தார். அவர் பேச்சில், செயல்களில் பெண் தன்மை வெளிப்பட ஆரம்பித்தது. பெண்களின் உடையை அணிய விரும்புவது, பெண்களுடன் பழக விரும்புவது என்று பெண்ணாக மாற நினைத்தார் சோம்நாத்.
இது வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. ஆனாலும் சோம்நாத் வேலைக்குப் போக வேண்டும்; பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் அவருடைய அப்பா கண்டிப்பாக இருந்தார். அவரைப் பெண் போல நடத்த யாரும் தயாராக இல்லை. அப்பா அவரைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். வீட்டில் ஒரு கூண்டுப் பறவை போல எந்தவித உரிமைகளும், உணர்வுகளும் அற்று வாழ்க்கையை வெறுத்துக் கிடந்தார் சோம்நாத். வீட்டில் பெண் போலவும், வெளியில் ஆண் போல ட்ரவுசர், சட்டை அணிந்து கொண்டு திரிந்தார்.
எந்த ஆணாவது தன்னைத் தொடும்போது ஒரு பெண் போலத் தன்னை உணர்ந்தார். ஆணின் உடலுடன், பெண்ணின் உணர்வுகளுடன் வாழ்வது கொடுமையாக இருந்தது. இதிலிருந்து மீள பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. பணத்துக்கு என்ன செய்வது?
படிப்பு... படிப்பு... அதை ஒன்றைத் தவிர தான் மீள வேறு வழியில்லை என்று தெரிந்தது.
பள்ளியிலும் கல்லூரியிலும் சக மாணவர்களின் சீண்டல்கள். ஆசிரியர்களின் மோசமான செயல்கள். தெருவில் சந்திக்க நேரும் ஏளனப் பார்வைகள்...
சோம்நாத் படித்து, வேலைக்குப் போய் பணம் திரட்டி... 2003 இல் தன்னை உடல் அளவிலும் பெண்ணாக மாற்றும் "பால் மாற்று அறுவைச் சிகிச்சை' செய்து கொண்டார்.
சோம்நாத் இப்படித்தான் மனாபி ஆனார். மனாபி என்றால் வங்கமொழியில் பெண் என்று பொருள்.
"" அதற்குப் பின்புதான் சுதந்திரமாக என்னால் சேலை கட்டிக் கொள்ள முடிந்தது'' என்கிறார் அவர்.
""அதற்குப் பின்பு ஒரு பிஸினஸ்மேன் மீது எனக்குக் காதல் வந்தது. இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எனது பெற்றோர் இதை எதிர்த்தனர். ஆனால் நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். ஆனாலும் சமூகத்தின் குரூரம் எங்களைத் தாக்கியது. பிரிந்தோம்.
அதற்குப் பின்பு நான் டாக்குமென்டரி படங்களில் நடித்தேன். கல்லூரிகளில் நடைபெறும் செமினார்களில் பங்கேற்றேன். உசஈகஉநந
ஆஞசஈஅஎஉ என்று ஒரு நாவல் எழுதினேன். இந்த நெருக்கடிகளுக்கிடையில் எனது ஆராய்ச்சிப் படிப்பையும் முடித்தேன்'' என்கிறார் மனாபி பானர்ஜி.
""நான் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்ட செய்தி என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். எனது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு நான் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுவேன். திருநங்கைகளின் இயக்கத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி இது'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...