நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுத்தமஹான வீட்டிற்கு டிப்ஸ்

கண்ணாடி, நிலைக்கண்ணாடி பீரோ எதுவாக இருந்தாலும் அதன் மேல் டால்கம் பவுடர் தூவி ஈரமில்லாத துணியால் துடைக்கத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். அதுபோல் டிஷ்யூ பேப்பர் கொண்டு கண்ணாடிக் கதவுகளைத் துடைத்தால் அவை பளிச்சென்று ஆகிவிடும்.

News image
Updated On :6 செப்டம்பர் 2015, 9:01 am

சீதாலெட்சுமி

கண்ணாடி, நிலைக்கண்ணாடி பீரோ எதுவாக இருந்தாலும் அதன் மேல் டால்கம் பவுடர் தூவி ஈரமில்லாத துணியால் துடைக்கத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். அதுபோல் டிஷ்யூ பேப்பர் கொண்டு கண்ணாடிக் கதவுகளைத் துடைத்தால் அவை பளிச்சென்று ஆகிவிடும்.

வீட்டில் வாசற்படி ஜன்னல் கதவுகளில் உள்ள அழுக்கைத் துணியில் கெரோசினைத் தொட்டுத் தடவி ஒரு நிமிடம் ஊறவிட்டு பின் வேறு துணி கொண்டு துடைத்தால் அழுக்கு வந்துவிடும்.

பீரோ பளபளக்க, முதலில் பழைய துணியினால் தூசியைத் துடைத்துவிட்டு சிறிதளவு பஞ்சு அல்லது ஸ்பாஞ்சை தேங்காய் எண்ணெயில் நனைத்து பீரோவைத் துடைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பஞ்சால் துடைக்க பீரோ பளபளக்கும்.

பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை மெல்லிய வெள்ளைத் துணியால் துடைத்து வைக்கவும். பூஜை அறை பளிச்சென்று இருக்கும்.

கண்ணாடி மேஜை மீதுள்ள கறைகள் நீங்குவதற்கு டால்கம் பவுடர் அல்லது கடலை மாவைத் தூவி பிறகு நன்றாகத் துடைத்து விடவும். கறைகள் அகன்று விடும்.

வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவி விடுங்கள். பல நாள்களுக்கு வீட்டில் எறும்புப் புற்றே வைக்காது.

ஒரு பக்கெட் தண்ணீரில் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு இரண்டு மேசைக் கரண்டி அளவு கலந்து "மாப்' கொண்டு வீட்டைத் துடைத்தால் தரை பளபளக்கும்.

சமையல் அறையில் கேஸ் அடுப்புக்குப் பின்புறம் ஒட்டப்பட்டிருக்கும் டைல்ஸ் எண்ணெய்ப் பிசுபிசுப்புடன் அழுக்கேறியிருக்கும். சோப்புத் தூளுடன் சமையல் சோடாவைக் கலந்துகொண்டு "ஸ்க்ரப்' மூலம் தொட்டுத் தேய்க்க டைல்ஸில் உள்ள கறைகள் நீங்கிவிடும். பிறகு நன்கு பிழிந்த ஈரத்துணியைக் கொண்டு துடைப்பதன் மூலம் டைல்ஸ் மினுமினுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.