"வா தாஜ்' விளம்பர சிறுவன் இன்று தபேலா வித்வான்!
"வா தாஜ்' என்ற விளம்பர படத்தில் பிரபல தபேலா வித்வான். ஜாகிர் உசைனுடன் நடித்த சிறுவன் ஆதித்யா கல்யாண்புர், இப்போது பெரியவனாகி உஸ்தாத் அல்லாரக்காவிடம் பயிற்சிப் பெற்று பிரபல தபேலா வித்வான்


"வா தாஜ்' என்ற விளம்பர படத்தில் பிரபல தபேலா வித்வான். ஜாகிர் உசைனுடன் நடித்த சிறுவன் ஆதித்யா கல்யாண்புர், இப்போது பெரியவனாகி உஸ்தாத் அல்லாரக்காவிடம் பயிற்சிப் பெற்று பிரபல தபேலா வித்வான் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி பாஸ்டன் நகரில் நியூ இங்கிலாந்து ஸ்கூல் ஆஃப் மியூசிக் அமைப்பை நிறுவியதோடு பாஸ்டனில் உள்ள ஹார்வார்டு சங்கீத பள்ளியில் தபேலா பயிற்சியளித்து வருகிறார். மேலும் மும்பையில் ஷீயாமல் மியூசிக் பவுண்டேஷன் என்ற அமைப்பையும் நிர்வகித்து வருகிறார்.
"வா தாஜ்' விளம்பத்தில் உஸ்தாத் ஜாகிர் உசைனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும், தபேலா வாசிப்பில் பயிற்சி பெற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கேற்பட்டது. என்னுடைய குடும்பத்தில் யாருக்கும் இசையில் ஆர்வம் இருந்ததில்லை. நான்தான் முதன் முதலாக இசைத்துறையில் நுழைந்துள்ளேன். சிறுவயதிலேயே வீட்டில் இருந்த தபேலாவை வாசிக்கும் போது ரேடியோ, டெலிவிஷன் மூலமாக கேட்டறிந்து பயிற்சிபெற தொடங்கினேன். என்னுடைய ஆர்வத்தை கண்ட என் பெற்றோர் நல்ல தூண்டுகோலாக இருந்ததோடு, உஸ்தாத் அல்லா ரக்கா கானிடம் முறைப்படி பயிற்சிபெற அனுப்பினார்கள். இப்போது முழுநேர வித்வானாக மாறியதோடு, மற்றவர்களுக்கும் பயிற்சியளிக்கிறேன். விரைவில் நியூயார்க்கை சேர்ந்த வயலின் கலைஞர் ஒருவருடன் இணைந்து இசையமைத்துள்ள ஆல்பமொன்றை வெளியிடவுள்ளேன்'' என்கிறார் ஆதித்யா கல்யாண்புர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...