காஷ்மீரைப் போன்றே மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நிலங்களை வாங்க முடியாது.
கே.கஸ்தூரி, காட்பாடி
அட அப்படியா?
கவிஞர் கண்ணதாசன் 24.6.1927-இல் பிறந்தார். இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் 24.6.1928-இல் பிறந்தார். எம்.எஸ். விஸ்வநாதனை விட கண்ணதாசன் சரியாக ஒரு வருடம் மூத்தவர்.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் 29.11. 1908- இல் பிறந்தவர். எஸ்.வி. சகஸ்ரநாமம் 29.11.1913 -இல் பிறந்தார்.
கே.கே. பாலசுப்பிரமணியன், கோயம்புத்தூர்.
நன்மை வந்து சேர...
ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். துணி எடுக்கும் போதும், பால் வாங்கும் போதும் அளந்துதானே வாங்குகிறோம். அது போல் யாரிடமும் அளந்து பழகினால் நன்மையே வந்து சேரும்.
- வாரியார் அருளமுது கு.அருணாசலம், தென்காசி
க்ரீன் டீ, அட்ரினலின் என்னும் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, இதய அழுத்தத்தை விரைவுப்படுத்துமாம். எனவே, உயர் அழுத்த தொந்தரவு உள்ளவர்கள், க்ரீன் டீயை தவிர்ப்பது மிகவும் நல்லது.
சீ. குறிஞ்சிச் செல்வன், ஸ்ரீரங்கம்.
"அப்போது நான் சென்னையில் விமான பொறியியல் படிப்பை முடித்திருந்தேன். விகடன் இதழ் அப்போது ஒரு கட்டுரை போட்டி வைத்தது. நான் "நாமும் விமானம் செய்வோம்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். அந்த கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்தது. அப்போதைய விகடன் ஆசிரியர் தேவன் அந்த பரிசை எனக்கு வழங்கினார். 1958-இல் நான் வாங்கிய முதல் சம்பளம் 250 ரூபாய்''.
(காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் என்ற புத்தகத்திலிருந்து)
அனிதா ராமச்சந்திரன், பெங்களூரு.
பதினான்காம் நூற்றாண்டில் மூன்றாம் எட்வர்ட் இங்கிலாந்தை ஆண்டபோது ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கு மேல் உணவு உட் கொள்வது குற்றம் என்று சட்டமியற்றப்பட்டு இருந்ததாம்.
கே.ஆர்.உதயகுமார், சென்னை.
சி.டி. ஸ்கேனின் விரிவாக்கம் 'கம்யூட்டட் டொமோ கிராபி ஸ்கேன்' என்பதாகும்.
பொ. பாலாஜி
சிவப்பு முக்கோணம், குடும்பக் கட்டுப்பாட்டின் சின்னம் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், தலைக்கீழான பச்சை நிற முக்கோணம் எதன் சின்னம் என்பது தெரியுமா? அது, தீயணைப்புத் துறையின் சின்னமாகும்.
நா. கற்பகம், வேலூர்.
"ஜன கன மன' பாடலை 1919- இல் ரவீந்தரநாத் தாகூர் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தார். அப்போது அதற்கு வைக்கப்பட்ட ஆங்கிலப் பெயர். "தி மார்னிங் சாங் ஆஃப் இந்தியா' என்பதாகும்.
பி.கோபி, கிருஷ்ணகிரி
"ஓர் இரவு' நாவலை அண்ணா 12 மணி நேரத்தில் எழுதினார்.
1596 அடிகள் கொண்ட "அருட் ஜோதி அகவலை' வள்ளலார் ஒரே இரவில், அதாவது 12 மணி நேரத்தில் எழுதினார்.
எம்.ஏ. நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி
8000 பேர் கொலை!
ரஷ்யாவின் கரேலியா சாண்டார் மோக் பகுதியில் நெட்டுக் குத்தாக வளரும் மரங்கள் அதிகம். இந்த பகுதியில் சமீபத்தில் ரஷ்யா ஆய்வு நடத்தியது. ஏன்?
இரண்டாவது உலகப் போர் நடந்தபோது இந்த காட்டுப்பகுதி, நகர்களை, ரஷ்யாவிடமிருந்து, ஜப்பான் கைப்பற்றியது. அப்போது 8000 ரஷ்ய படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளனர் என கண்டறிய சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு கல்லறையைத் திறந்து பார்த்தபோது. ஒரு ரஷ்ய வீரர், பின்னால் கைகள் கட்டப்பட்டு கபாலத்தில் சுடப்பட்டிருந்தார். அந்த வீரரின் கபாலத்தில் அப்போதும் ஒரு குண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஜோசப் ஸ்டாலின் காலத்தில் நடந்தது.
- ராஜிராதா, பெங்களூரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
ராஜ்காட் - சாந்தி வன் பகுதியை அழகுப்படுத்தும் திட்டத்துக்கு தில்லி அரசு ஒப்புதல்!

மானுடம் தோற்குதம்மா...

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


